search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Besandnagar"

    • பெண்கள் உற்சாகமாக ஓடினார்கள்.
    • பெண்கள் பலர் பாடல்களுக்கு ஏற்றவாறு உற்சாக நடனம் ஆடினர்.

    சென்னை:

    மாரத்தான் ஓட்டம் என்றாலே பேன்ட்-டிசர்ட் அணிந்து வியர்க்க விறு விறுக்க ஓடுவார்கள். ஆனால் இன்று பெசன்ட் நகர் கடற்கரையில் முற்றி லும் மாறுபட்ட முறையில் பெண்கள் கலந்து கொண்ட மாரத்தான் போட்டி நடந்தது.

    500-க்கும் மேற்பட்ட பெண்கள்... அதில் ஒருவர் கூட மேற்கத்திய உடைகள் அணிந்திருக்கவில்லை. அத்தனை பேரும் சேலை கட்டியே வந்திருந்தார்கள்.

    இல்லத்தரசிகள், பணி புரியும் பெண்கள் என கலந்து கொண்ட அனைவருமே விழாக்களில் பாரம்பரிய உடையில் கலந்து கொண்டதுபோல் வண்ண வண்ண புடவை கட்டியிருந்தார்கள்.

    மடிசார், கண்டாங்கி, படுகர் என தங்கள் கலாச்சசாரப்படி அணிந்து இருந்தார்கள். 3 கிலோ மீட்டர் தூரம் நடந்த இந்த மாரத்தான் போட்டியில் பெண்கள் உற்சாகமாக ஓடினார்கள்.

    ஓட்டம் தொடங்குவதற்கு முன்பு அங்கே பெண்கள் பலர் பாடல்களுக்கு ஏற்றவாறு உற்சாக நடனம் ஆடியும் அசத்தினார்கள்.

    இந்த மாரத்தான் போட்டிக்கு தனியார் நிறுவனத்தை சேர்ந்த ரேவதி, தியா மகேந்திரன், பானுரேகா ஆகியோர் ஏற்பாடு செய்து இருந்தார்கள். அவர்கள் கூறும் போது, `பாரம்பரிய உடையில் வெளி மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் மாரத்தான் போட்டிகள் நடத்தும் நிலையில் நாமும் நடத்தினால் என்ன என்ற எண்ணத்தில்தான் ஏற்பாடு செய்தோம்.

    இதில் கிடைக்கும் நிதி மலைவாழ் இளம் பெண்களுக்கு மாதவிடாய் ஆரோக்கியத்தை பேண சானிட்டரி நாப்கின் வாங்கி கொடுக்கவும், அவர்களுக்கு மருத்துவ விழிப்புணர்வை ஏற்படுத்தவும் செலவிடப்பட உள்ளது' என்றார்.

    நிகழ்ச்சியில் நீதிபதி விமலா கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். ராதிகாபரத் மாரத்தான் ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    ×