என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » bhadrakali amman temple
நீங்கள் தேடியது "bhadrakali amman temple"
பாலமேட்டில் உள்ள பாலமேடு இந்து நாடார்கள் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மதுரையை அடுத்த பாலமேட்டில் பிரசித்திபெற்ற பத்ரகாளியம்மன், கருப்பணசாமி, மாரியம்மன், ஐந்துமுக விநாயகர் கோவில் உள்ளது. பாலமேடு இந்து நாடார்கள் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட இந்த கோவில்களில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி பொங்கல் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான பொங்கல் திருவிழா நேற்று (ஞாயிற்றுக் கிழமை) தொடங்கி வருகிற 26-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது.
திருவிழாவில் நேற்று முன் தினம் இரவு 7 மணிக்கு பத்ரகாளியம்மன் கோவிலுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, கண் திறப்பு விழா நடைபெற்றது. இதையடுத்து இரவு 8 மணிக்கு பத்ரகாளியம்மன், மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் இரவு 9.30 மணிக்கு பொங்கல் வைத்து வழிபட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று அதிகாலை முதல் அக்னி சட்டி எடுத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும் பால்குடம் எடுத்து சென்றனர். மேலும் மாவிளக்கு எடுத்தும், கரும்பில் தொட்டில் கட்டியும், சாமி பொம்மைகள், குழந்தை பொம்மைகள், கை, கால் பொம்மைகள் போன்றவற்றையும் பக்தர்கள் தலையில் சுமந்து ஊர்வலமாக பத்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மேலும் ஆடு, சேவல் பலியிட்டும் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் தங்களது குழந்தைகளுக்கு மொட்டையிட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு மாரியம்மன் பூப்பல்லக்கில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் வீதி உலா வந்தார். இரவு 9 மணிக்கு நகைச்சுவை பட்டிமன்றம் மற்றும் இன்னிசை பட்டிமன்றம் நடந்தது.
திருவிழாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) முக்கிய நிகழ்ச்சியாக பொங்கல் விழா நடக்கிறது. தொடர்ந்து முளைப்பாரி கரைப்பு நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு ஆடல்-பாடல் கலை நிகழ்ச்சியும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை பாலமேடு இந்து நாடார்கள் உறவின்முறை சங்கத்தினர் செய்துள்ளனர்.

தஞ்சை மேலவஸ்தாசாவடியில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் 17-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
தஞ்சையை அடுத்த மேலவஸ்தாசாவடியில் உள்ள விநாயகர், முத்துமாரியம்மன், முத்து முனியாண்டவர் ஆகிய கோவில்கள் புதுப்பிக்கப்பட்டும், பத்ரகாளியம்மனுக்கு புதிய கோவில் கட்டப்பட்டும் உள்ளது. இந்த கோவில்களில் 17-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடக்கிறது.
காலை 10 மணிக்கு தஞ்சாவூர் புதிய வீட்டு வசதி வாரியத்தில் உள்ள பாலச்சந்திர விநாயகர் கோவிலில் இருந்து புலியாட்டம், செண்டைமேளம், தப்பாட்டம், சிலம்பாட்டம், யானை, குதிரை, ஆடு, மாடு ஆகிய ஊர்வலத்துடன் புனித நீர் எடுத்து வரப்பட்டு மேலவஸ்தாசாவடியில் அமைந்துள்ள பத்ர காளியம்மன் கோவிலை வந்தடைகிறது.
நாளை (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது.
17-ந் தேதி(ஞாயிற்றுக் கிழமை) காலை 9.45 மணிக்கு கடம் புறப்பாடு நடக்கிறது. அதனை தொடர்ந்து 10.15 மணிக்கு விநாயகருக்கும், 10.40 மணிக்கு முத்து முனியாண்டவருக்கும், 11 மணிக்கு முத்து மாரியம்மனுக்கும், 11.15 மணிக்கு பத்ரகாளியம்மனுக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை தஞ்சை மேலவஸ்தாசாவடி கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

×

X