search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bhavanisagar Dam"

    • நீர் பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து குறைய தொடங்கியது.
    • அணையில் இருந்து குடி நீருக்காகவும், பாசனத்திற்காகவும் 3,500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணை யின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கன மழை பெய்ததால் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது.

    இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கடந்த 5-ந் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டி யது. இதனைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வந்த நீர் அப்படியே உபரிநீராக வெளியேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து பவானி ஆற்றில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து குறைய தொடங்கியது. இதன் காரணமாக அணை யில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவும் குறைய தொடங்கியது.

    ஆனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியிலேயே நீடித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானி சாகர் அணை 102 அடியில் உள்ளது. அணைக்கு வினாடி க்கு 3600 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து குடி நீருக்காகவும், பாசன த்திற்காகவும் 3,500 கன அடி வீதம் தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    இதேபோல் குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் 27.41 அடியாகவும், வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 33.46 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 16.80 அடியாகவும் உள்ளது. 

    • நீர்பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து குறைய தொடங்கியது.
    • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 102 அடியில் உள்ளது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கன மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது.

    இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கடந்த 5-ந் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது.

    இதனைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வந்த நீர் அப்படியே உபரிநீராக வெளியேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து குறைய தொடங்கியது.

    இதன் காரணமாக அணைக்கு திறந்து விடப்படும் நீரின் அளவும் குறைய தொடங்கியது. எனினும் பவானிசாகர் அணை தொடர்ந்து 102 அடியிலேயே நீடித்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 102 அடியில் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3500 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து குடிநீருக்காகவும், பாசனத்திற்காகவும் 3,500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

    • பவானிசாகர் அணை 67 ஆண்டுகளில் 102 அடி நீர்மட்டத்தை 22 முறையும் 100 அடி நீர்மட்டத்தை 30 முறையும் எட்டியுள்ளது.
    • பவானிசாகர் அணை கடந்த 2018, 2019, 2020, 2021,2022-ம் ஆண்டு என தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக நீர்மட்டம் 100 அடியை எட்டி சாதனை படைத்துள்ளது.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து 16 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பவானிசாகர் அணை.

    தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை. ஆசியாவிலேயே மிக நீளமான மண் அணை மற்றும் தமிழ்நாட்டில் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் இந்த அணைக்கு உண்டு.

    சுமார் ரூ.10.50 கோடி செலவில் அணை கட்டப்பட்டது. நாடு விடுதலை அடைந்த பின்னர் 1948-ம் ஆண்டு தொடங்கி 7 ஆண்டு தொடர்ச்சியான கட்டுமான பணிகளுக்கு பின்னர் 1955-ம் ஆண்டு ஆகஸ்ட் 19-ந் தேதி அப்போதைய தமிழக முதல்-அமைச்சராக இருந்த காமராஜர் பவானிசாகர் அணையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

    அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி மற்றும் வடகேரளம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளது. இந்த பவானிசாகர் அணையில் 32.8 டிஎம்சி வரை நீரை தேக்கி வைக்கலாம். இதன் உயரம் 105 அடியாக உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் கீழ்பவானி, காலிங்கராயன், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால் பகுதிகளைச் சேர்ந்த ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம். கோபி, புளியம்பட்டி. பவானி ஆகிய நகராட்சிகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் பொது மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது. இந்த அணையில் 2 நீர் மின்உற்பத்தி நிலையங்கள் உள்ளன. அதன் மூலம் 16 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    1953-ம் ஆண்டு அணை கட்டுமான பணிகளின் போது அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு நேரில் பார்வையிட்டார்.

    இந்த அணை கட்டப்பட்டதால் இந்த பகுதியில் இருந்த தரிசு நிலங்கள் அனைத்தும் நஞ்சை நிலங்களாக மாறின. லட்சக்கணக்கான விவசாயிகள் கூலித் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தது. சிறு சிறு கிராமங்கள் முதல் நகரங்கள் வரை குடிநீர் தேவை பூர்த்தி ஆனது.

    பவானிசாகர் அணை 67 ஆண்டுகளில் 102 அடி நீர்மட்டத்தை 22 முறையும் 100 அடி நீர்மட்டத்தை 30 முறையும் எட்டியுள்ளது. அதேபோல் பவானிசாகர் அணை கடந்த 2018, 2019, 2020, 2021,2022-ம் ஆண்டு என தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக நீர்மட்டம் 100 அடியை எட்டி சாதனை படைத்துள்ளது.

    விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்-அமைச்சர் உத்தரவிட்டதையடுத்து கடந்த ஆகஸ்ட் 14-ந் தேதி பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2300 கனஅடி நீர் 120 நாட்களுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு லட்சத்து 3,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    தமிழர்களின் கட்டிடக்கலை பெருமையை பறைசாற்றும் விதமாக முழுக்க முழுக்க இந்திய பொறியாளர்களின் முயற்சியில் உருவான இந்த பவானிசாகர் அணை பல முறை முழு கொள்ளளவை எட்டியும் 67 ஆண்டுகள் கடந்து 68வது ஆண்டில் அடி எடுத்து வைத்து இன்றும் கம்பீரமாக காட்சியளிக்கிறது.

    • நீர் பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது.
    • பவானிசாகர் அணை தொடர்ந்து 102 அடியில் நீடித்து வருகிறது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கன மழை பெய்ததால் கோவை மாவட்டம் பில்லூர் அணை நிரம்பியது. அங்கிருந்து உபரி நீர் முழுவதும் அப்படியே பவானிசாகர் அணைக்கு வந்தது.

    இதன் காரணமாக கடந்த 5-ந் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    இதனைத் தொடர்ந்து பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. முதலில் பவானிசாகர் அணையில் இருந்து 25 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. இதன் காரணமாக அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவும் குறைய தொடங்கியது. எனினும் பவானிசாகர் அணை தொடர்ந்து 102 அடியில் நீடித்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 102 அடியில் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3,500 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீருக்காகவும், பாசனத்தி ற்காகவும் 3,400 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    • ஆகஸ்டு 15ல், கீழ்பவானி வாய்க்கால் முதல் போக நஞ்சை பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும்.
    • 2,300 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படும்

    காங்கயம் :

    பவானிசாகர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர், 161 கி.மீ., கடந்து காங்கயம் பகுதியை அடைந்துள்ளது. இதனால் கீழ் பவானி பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    பவானிசாகர் அணை 105 அடி உயரமும் 32.8 டி.எம்.சி .கொள்ளளவும் கொண்டது. இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 2.5 லட்சம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது.ஆண்டுதோறும் ஆகஸ்டு 15ல், கீழ்பவானி வாய்க்கால் முதல் போக நஞ்சை பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு முன்கூட்டியே அணை நிரம்பியதால் கீழ் பவானி வாய்க்கால் பாசனத்துக்கு கடந்த, 12ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் 120 நாட்கள் இந்த தண்ணீர், 2,300 கன அடி வீதம் திறக்கப்படும்.தண்ணீர் திறக்கப்பட்ட நான்கு நாளில் நேற்று மாலை காங்கயம், நத்தக்காடையூர், பொடாரம்பாளையம் பகுதியில் தண்ணீர் கடந்து சென்றது. வழக்கமாக 6 நாட்களுக்குப் பின்பே அணையிலிருந்து 100 மைல் தொலைவில் உள்ள இப்பகுதிக்கு தண்ணீர் வந்து சேரும். தற்போது நான்கு நாளில் தண்ணீர் வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வந்தது.
    • இன்று 11-வது நாளாக 102 அடியில் நீடித்து வருகிறது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வந்தது. இதன் காரணமாக கோவை மாவட்டம் பில்லூர் அணை நிரம்பியது. அங்கிருந்து உபரி நீர் முழுவதும் அப்படியே பவானிசாகர் அணைக்கு வருகிறது.இதன் காரணமாக கடந்த 5-ந் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது.

    இதனைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. முதலில் பவானிசாகர் அணைக்கு 25 ஆயிரம் கனஅடி நீர் வந்தது. மழை குறைந்ததால் நீர் வரத்தும் குறைந்தது. இருப்பினும் தொடர்ந்து பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று 11-வது நாளாக 102 அடியில் நீடித்து வருகிறது.

    இன்று காலை பவானிசாகர் அணைக்கு 5 ஆயிரத்து 800 கன அடியாக நீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீருக்காகவும், பாசனத்திற்காகவும் 5400 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. உபரி நீர் குறைந்த அளவில் திறந்து விடப்படுவதால் பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியுள்ளது. இதனால் பவானி கரையோர மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

    • பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர், மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
    • 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணை நீர்மட்டம் 102 எட்டி உள்ளது.

    சத்தியமங்கலம்:

    இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 3 நாட்களுக்கு வீடுகள் வணிக நிறுவனங்களில் தேசிய கொடியை ஏற்றி கொண்டாட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்து இருந்தார்.

    இதனை ஏற்று பொதுமக்கள் வீடுகளிலும், நிறுவனங்கள், கடைகள் முன்பும் தேசிய கொடியை ஏற்றி உள்ளனர். இது போக முக்கிய சுற்றுலாத் தலங்களிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை தமிழ்நாட்டில் 2-வது பெரிய மண் அணை என பெயர் பெற்றுள்ளது.

    இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர், மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணை நீர்மட்டம் 102 எட்டி உள்ளது. தற்போது கடல் போல் பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சி அளிக்கிறது.

    இதனால் விடுமுறை நாட்களான நேற்றும் இன்றும் பவானிசாகர் அணையை பார்க்க ஏராளமான மக்கள் படையெடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் பவானிசாகர் அணையின் மேல் மதகுகள் வழியாக வெளியேறும் உபரிநீர் தேசிய கொடியின் மூவர்ண நிறத்தில் வெளியேறும் வகையில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    இந்த காட்சியை பார்ப்பதற்காக ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பவானிசாகர் அணைக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர். இதே போல் ஈரோட்டில் முக்கிய இடங்கள், அரசு அலுவலகங்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

    • இன்று தொடர்ந்து 9-வது நாளாக பவானிசாகர் அணை 102 அடியில் நீடிக்கிறது.
    • அணைக்கு வினாடிக்கு 15,300 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஈரோடு, ஆக. 13-

    பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்து வந்தது. இதன் காரணமாக கோவை மாவட்டம் பில்லூர் அணை நிரம்பியது. அங்கிருந்து உபரி நீர் முழுவதும் அப்படியே பவானிசாகர் அணைக்கு வருகிறது.

    இதன் காரணமாக கடந்த 5-ந் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது. இதனை த்தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வெளி யேற்றப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதனையடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. முதலில் பவானிசாகர் அணைக்கு 25 ஆயிரம் கனஅடி நீர் வந்தது. மழை குறைந்ததால் நீர் வரத்தும் குறைந்தது.

    தொடர்ந்து பவானிசாகர் அணைக்கு 15 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் பவானி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் இன்று தொடர்ந்து 9-வது நாளாக பவானிசாகர் அணை 102 அடியில் நீடிக்கிறது. அணைக்கு வினாடிக்கு 15,300 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதில் 15,100 கன அடி நீர் அப்படியே பவானி ஆற்றில் உபரி நீராக திறந்து விடப்பட்டு வருகிறது.

    • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 102 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 15,600 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
    • தொடர்ந்து இன்று 8-வது நாளாக கொடிவேரி அணையில் குளிக்க பொதுமக்களுக்கு தடை நீடிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்து வந்தது. இதன் காரணமாக கோவை மாவட்டம் பில்லூர் அணை நிரம்பியது.

    அங்கிருந்து உபரி நீர் முழுவதும் அப்படியே பவானிசாகர் அணைக்கு வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது. இதனைத்தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    இதனைத் தொடர்ந்து பவானி ஆற்றில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பொழிவு குறைந்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது.

    நேற்று 20 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று 15 ஆயிரம் கன அடியாக குறைந்தது. இதனால் பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றுக்கும் நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 102 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 15,600 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த 15,600 கன அடி நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு உபரி நீராக திறந்து விடப்பட்டு வருகிறது.

    தொடர்ந்து இன்று 8-வது நாளாக கொடிவேரி அணையில் குளிக்க பொதுமக்களுக்கு தடை நீடிக்கப்பட்டுள்ளது. 

    • பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து. 101 அடியை எட்டியது.
    • பவானிசாகர் அணை மேல் பகுதியில் பொதுப்ப ணித்துறை, வருவாய் துறையினர் முகாமிட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து. 101 அடியை எட்டியது. தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வந்ததால் நீர்மட்டம் உயர்ந்து வந்தது.

    இன்று காலை நிலவரப்படி பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 101.50 அடியாக உள்ளது. அணைக்கு நேற்று ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை வினாடிக்கு 2,327 கன அடியாக அதிகரித்து தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் காலி ங்கராயன் பாசனத்திற்காக இன்று முதல் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. பவானி ஆற்றுக்கு 100 கன அடியும், கீழ்பவானி வாக்காலுக்கு 5 கன அடியும் என மொத்தம் 105 கன அடி தண்ணீர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் 102 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க முடியும்.

    தற்போது பவானிசாகர் அணையின் அடி 101.50 அடியை தாண்டி உள்ளதால் இன்னும் ஒரு நாளில் 102 அடியை எட்டி விடும். இதன் காரணமாக பவானிசாகர் அணையில் இருந்து பவானி கூடுதுறை வரை பவானி ஆற்றின் இரு புறங்களிலும் உள்ள கரையோர மக்களுக்கு வெள்ள பாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக பவானிசாகர் அணை மேல் பகுதியில் பொதுப்ப ணித்துறை, வருவாய் துறையினர் முகாமிட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இதேபோல் குண்டேரி பள்ளம் அணை, பெரும்ப ள்ளம் அணை, வரட்டுபள்ளம் அணை யிலும் மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஈரோடு மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் குடும்பத்துடன் பவானிசாகர் அணை பூங்காவுக்கு வந்தனர்.
    • ஆடிப்பெருக்கை யொட்டி நேற்று ஒேர நாளில் 19,800 பேர் பவானிசாகர் அணை பூங்காவை கண்டு ரசித்தனர். இதன் மூலம் கட்டணமாக ரூ.1 லட்சத்து 22 ஆயிரம் வசூல் ஆனது.

    சத்தியமங்கலம்:

    பவானிசாகர் அணையையொட்டி பூங்கா அமைந்துள்ளது. நேற்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஈரோடு மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் குடும்பத்துடன் பவானிசாகர் அணை பூங்காவுக்கு வந்தனர்.

    சிறுவர்கள் ஊஞ்சல் விளையாடியும், சறுக்கு விைளயாடியும் மகிழ்ந்தனர். மேலும் பவானிசாகர் அணை மீனை சுடச்சுட ரசித்து சாப்பிட்டனர். பவானிசாகர் அணை பூங்காவுக்கு நுழைவு கட்டணமாக ரூ.5 வசூலிக்கப்படுகிறது.

    இதேபோல் இருசக்கர வாகனத்துக்கு ரூ.10-ம், காருக்கு ரூ.30-ம், பஸ், வேன்களுக்கு ரூ.50-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

    ஆடிப்பெருக்கை யொட்டி நேற்று ஒேர நாளில் 19,800 பேர் பவானிசாகர் அணை பூங்காவை கண்டு ரசித்தனர். இதன் மூலம் கட்டணமாக ரூ.1 லட்சத்து 22 ஆயிரம் வசூல் ஆனது.

    • பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது.
    • இன்று காலை நிலவரப்படி பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 101.29 அடியாக உள்ளது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதுபோல் பவானிசாகர் அணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து கடந்த 4 நாட்கள் முன்பு 100 அடியை கட்டியது. தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வந்ததால் நீர்மட்டம் உயர்ந்து வந்தது.

    இன்று காலை நிலவரப்படி பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 101.29 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,327 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காளிங்கராயன் பாசனத்திற்காக 300 கன அடியும்,

    பவானி ஆற்றுக்கு 100 கன அடியும், கீழ்பவானி வாக்காலுக்கு 5 கன அடியும் என மொத்தம் 405 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து 5 -வது ஆண்டாக பவானிசாகர் அணை 101 அடியை எட்டி உள்ளது. பவானிசாகர் அணையில் தண்ணீர் தேக்குவது குறித்த பொதுப்பணி துறையால் வகுக்கப்பட்ட விதியின் அடிப்படையில் ஆகஸ்ட் 1-ந் தேதி முதல் செப்டம்பர் 30-ந் தேதி வரை 102 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க முடியும். தற்போது பவானிசாகர் அணையின் அடி 101 அடியை தாண்டி உள்ளதால் இன்னும் ஒரு நாளில் 102 அடியை எட்டி விடும்.

    இதன் காரணமாக பவானிசாகர் அணையில் இருந்து பவானி கூடுதுறை வரை பவானி ஆற்றின் இரு புறங்களிலும் உள்ள கரையோர மக்களுக்கு வெள்ள பாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இன்று ஆடிப்பெருக்கையொட்டி பவானிசாகர் அணையின் மேல் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. பவானிசாகர் அணை மேல் பகுதியில் பொதுப்பணித்துறை, வருவாய் துறையினர் முகாமிட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.  

    ×