search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bhutan Central Bank"

    இந்திய ரூபாய் நோட்டுகளை கையில் வைத்து இருக்க வேண்டாம் என்று பூடான் மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. #IndianRupees

    பூடான்:

    பிரதமர் நரேந்திர மோடி 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார்.

    இந்தியாவில் கறுப்பு பணம், கள்ள நோட்டு மற்றும் ஊழல் ஆகியவற்றை ஒழிக்க இந்த நடவடிக்கையை எடுத்ததாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.

    உயர்மதிப்பிலான ரூபாய் நோட்டு வாபஸ் பெற்றதால் கடும்பாதிப்பு ஏற்பட்டது. இதே போல அண்டை நாடான நேபாளம், பூடான் ஆகியவையும் பாதிப்புக்கு உள்ளானது.

    ஏனென்றால் இந்திய ரூபாயை அங்கு மக்கள் தாராளமாக பயன்படுத்திக் கொள்ள மக்களுக்கு அந்த நாட்டு ரிசர்வ் வங்கிகள் அனுமதி அளித்து இருந்தன.

    இந்திய அரசின் திடீர் உத்தரவால் அந்நாட்டில் உள்ள மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி பணத்தை வங்கிகளில் கொடுத்து மாற்றினார்கள். ஏறக்குறைய 1 ஆண்டக்கு பின் அங்கு நிலைமை சீரடைந்தது.


    இந்த நிலையில் இந்திய ரூபாயை கையில் ரொக்கமாக வைத்திருக்க வேண்டாம். எப்போது வேண்டுமானாலும் செல்லாமல் போகலாம் என்று பூடான் ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

    பூடானின் ரிசர்வ் வங்கியான ராயல் மானிட்டர் அதாரிட்டி (ஆர்.எம்.ஏ.) இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்திய ரூபாய் நோட்டுகளை கையில் ரொக்கமாக வைத்திருக்கும் மக்கள் முடிந்தவரை அதை வங்கியில் செலுத்தி தேவைக்கு ஏற்றார் போல் எடுத்து பயன்படுத்துகிறார்கள். இந்த ரூபாயை ரொக்கமாக கையில் வைத்து செலவு செய்வதையும், சேமித்து வைத்திருப்பதையும் தவிர்க்கவும்.

    2016-ம் ஆண்டு இந்தியாவில் கொண்டு வரப்பட்ட பணமதிப்பு நீக்கம் போல் எப்போது வேண்டுமானாலும் செல்லாமல் போகலாம். அது மாதிரி நடைபெற்றால் மக்கள் கையில் வைத்திருக்கும் இந்திய ரூபாய்க்கு பூடான் ரிசர்வ் வங்கி எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

    இந்திய ரூபாய்களில் 500 ரூபாயில் கள்ள நோட்டுகள் அதிகமாக புழுங்குவதால் அந்த ரூபாயை வாங்கும் போது மிகுந்த கவனத்துடன் செயல்படுங்கள்.

    இந்தியாவின் 500 ரூபாய் நோட்டுகளை ரூ.25 ஆயிரத்துக்கு மேல் அதிகமாக வெளியே எடுத்துச் செலவு செய்ய வேண்டாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இது குறித்து பூடானில் உள்ள இந்திய தூதரக அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, “ரிசர்வ் வங்கி ஏதேனும் நடவடிக்கை எடுக்க போகிறதா? என்பது குறித்து எதுவும் தெரியாது.

    முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய ரூபாயை கவனமாக வைத்திருக்கவும், சேமிக்க வேண்டாம் என்றும் அறிவித்து இருக்கிறார்கள்” என்றார். #IndianRupees

    ×