search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bhutan parliamentary election"

    பூடான் பாராளுமன்ற தேர்தலில் நேற்று ஓட்டு எண்ணிக்கை நடந்தது. முதல் கட்ட தேர்தலில் பிரதமரின் ஆளும் கட்சி படுதோல்வி அடைந்தது. எதிர்க்கட்சி வெற்றிபெற்று உள்ளது. #Bhutanparliamentaryelection

    திம்பு:

    இந்தியாவுக்கு அருகே இமயமலை சாரலில் உள்ள நாடு பூடான். இங்கு பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் பிரதமர் ஷெரிங் தோபே தலைமையிலான ஆளும் மக்கள் ஜனநாயக கட்சி போட்டியிட்டது.

    அதை எதிர்த்து டி.என்.டி. மற்றும் டி.பி.டி. ஆகிய எதிர்க்கட்சிகள் மோதின. அதில் 2 லட்சத்து 91 ஆயிரம் பேர் வாக்களித்தனர். நேற்று ஓட்டு எண்ணிக்கை நடந்தது.

    இதில் டி.என்.டி. கட்சி 92,722 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. அதற்கு அடுத்த படியாக டி.பி.டி. கட்சி 2-வது இடம் பிடித்துள்ளது. இக்கட்சி 90 ஆயிரத்து 20 ஓட்டுகள் பெற்றுள்ளது.

    இத்தேர்தலில் பிரதமர் தோபேவின் ஆளும் பி.டி.பி. (மக்கள் ஜனநாயக கட்சி) படுதோல்வி அடைந்து 3-வது இடத்தை பிடித்துள்ளது. பூடான் அரசியல் சட்டப்படி முதல் சுற்று தேர்தலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் கட்சிகளுக்கு இடையே 2-வது சுற்று போட்டி நடைபெறும்.

    அதில் வெற்றி பெறும் கட்சியே ஆட்சி அமைக்கும். அதன்படி வருகிற அக்டோபர் 18-ந் தேதி நடக்கும் 2-வது சுற்று தேர்தலில் டி.என்.டி. மற்றும் டி.பி.டி. கட்சிகள் போட்டியிடுகின்றன. அக்கட்சிகளின் வேட்பாளர்களுக்கு பிரதமர் தோபே வாழ்த்து தெரிவித்துள்ளார். #Bhutanparliamentaryelection

    ×