என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » bihar government
நீங்கள் தேடியது "bihar government"
பீகார் காப்பகத்தில் சிறுமிகள் சீரழிக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து டெல்லியில் இன்றிரவு நடைபெற்ற மெழுகுவர்த்தி பேரணியில் ராகுல் காந்தி , தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றார். #RahulGandhi #Muzaffarpurshelterhome #Delhiprotest
புதுடெல்லி:
பீகார் மாநிலம், முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு நிதியுதவி பெறும் சிறுமியர் காப்பகம் ஒன்றுள்ளது. இங்கு சுமார் 40 சிறுமியர் தங்கியுள்ளனர். இந்த காப்பகத்தின் நிர்வாகிகள் சிறுமிகளை கற்பழித்ததாகவும், ஒரு பெண்ணை அடித்துக் கொன்று காப்பக வளாகத்துக்குள் புதைத்து விட்டதாகவும் புகார்கள் எழுந்தன.
இதைதொடர்ந்து, இங்குள்ள சிறுமிகளை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைத்தபோது அவர்களில் பெரும்பாலானோர் ஏதோ ஒரு காலகட்டத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டது தெரியவந்தது.
இந்த சம்பவம் அவமானத்துக்குரியது, பீகாரை தலைகுனிய வைத்துள்ளது என பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ் குமார் குறிப்பிட்டார். இதுதொடர்பான விசாரணையை சி.பி.ஐ. ஏற்றுள்ள நிலையில் அடுத்தடுத்து பலர் கைதாகி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த கொடூரத்தை கண்டித்தும் முசாபர்பூர் சிறுமியர் காப்பகத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பீகார் அரசிடம் நீதி கேட்டு ராஷ்டரிய ஜனதா தளம் கட்சி சார்பில் இன்றிரவு தலைநகர் டெல்லியில் மெழுகுவர்த்தி பேரணி நடைபெற்றது.
பீகார் முன்னாள் துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவ் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மா. கம்யூ தலைவர் பிரகாஷ் கரத், இ கம்யூ தலைவர் டி.ராஜா, லோக்தந்த்ரிக் ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ் உள்பட முக்கிய கட்சிகளை சேர்ந்த தலைவர்களும், பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
அவர்களிடையே பேசிய ராகுல் காந்தி, பெண்களுக்கான பாதுகாப்பை வலியுறுத்தியும், உறுதிப்படுத்தவும் நாம் அனைவரும் இங்கு திரண்டிருக்கிறோம். முசாபர்பூர் காப்பக சம்பவத்துக்காக முதல்- மந்திரி நிதிஷ் குமார் அவமானப்பட்டால் மட்டும் போதாது. உடனடியாக கடுமையான நடவடிக்கையும் எடுத்தாக வேண்டும் என குறிப்பிட்டார். #RahulGandhi #Muzaffarpurshelterhome #Delhiprotest
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X