search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bill Introduced"

    வெளிநாடு வாழ் இந்திய நபர்கள் திருமணத்தை 30 நாட்களுக்குள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்ற சட்டமசோதா நேற்று மாநிலங்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. #RegisterMarriage #NRI
    புதுடெல்லி:

    இந்திய பெண்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களின் மோசடி திருமணத்தில் சிக்குவதை தவிர்ப்பதற்காக, வெளிநாடு வாழ் இந்திய நபர்கள் திருமணத்தை 30 நாட்களுக்குள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்ற சட்டமசோதா நேற்று மாநிலங்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. அப்படி 30 நாட்களுக்குள் பதிவு செய்யாவிட்டால் அவரது பாஸ்போர்ட் அல்லது விசாவை பறிமுதல் செய்யவோ, திரும்பப்பெறவோ அதிகாரம் வழங்கப்படுகிறது. வாரண்டு பிறப்பிக்கப்பட்டு கோர்ட்டில் ஆஜராகாவிட்டால் அவரது சொத்துக்களையும் பறிமுதல் செய்ய முடியும்.

    திருமணம் இந்தியாவில் நடந்தாலும், அல்லது வெளிநாட்டில் நடந்தாலும் இது பொருந்தும். இந்த நாடாளுமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் இது என்பதாலும், நாளை (புதன் கிழமை) கூட்டத்தொடர் முடிவடைய இருப்பதாலும் இந்த சட்டமசோதா நிறைவேற்றுவதற்கு சாத்தியம் இல்லை. ஆனாலும் இது நிலுவையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #RegisterMarriage #NRI
    ×