search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "birthday"

    மன்னர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செய்யப்பட்டது. பல்வேறு கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
    திருச்சி:

    திருச்சி ஒத்தக்கடை பகுதியில் மன்னர் பெரும்பிடுகு முத்தரையர் சிலை உள்ளது. பெரும்பிடுகு மன்னரின் 1343-வது பிறந்த நாள் விழா நேற்று தமிழக அரசின் சார்பில் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி நேற்று காலை அரசு சார்பில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் மன்னர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

    இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் கே.ராஜாமணி, எம்.பி.க்கள் ப.குமார், மருதைராஜா, செல்வராஜ் எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர்கள் சிவபதி, கே.கே.பாலசுப்பிரமணியன், பரஞ்சோதி, அண்ணாவி, பூனாட்சி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்களும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

    தி.மு.க. சார்பில் மாநகர செயலாளர் அன்பழகன் தலைமையில் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில் சவுந்தரபாண்டியன் எம்.எல்.ஏ. உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். காங்கிரசார், மாவட்ட தலைவர்கள் ஜவகர், கலை தலைமையிலும், பாரதீய ஜனதா கட்சியினர் இளைஞர் அணி மாவட்ட தலைவர் கவுதம் நாகராஜன் தலைமையிலும், தே.மு.தி.க. சார்பில் மாவட்ட செயலாளர்கள் டி.வி.கணேஷ், கிருஷ்ணகோபால், குமார் ஆகியோரும், த.மா.கா.வினர் மாவட்ட தலைவர்கள் குணா, ரவீந்திரன் தலைமையிலும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

    முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தனியாக வந்து மாலை அணிவித்தார். மேலும் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் முத்தரையர் சங்கங்கள் சார்பிலும் ஊர்வலமாக வந்து சிலைக்கு மாலை அணிவித்தனர். இதனை தொடர்ந்து சிலை அமைந்துள்ள பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    மதச்சார்பற்ற ஜனதா தள முக்கிய தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடாவின் பிறந்த நாளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். #modiwishes #devegowda
    புதுடெல்லி:

    கர்நாடகாவில் கடந்த 12-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பா.ஜ.க. 104 இடங்களில் வெற்றி பெற்றது. எனினும் காங்கிரஸ் கட்சியும், மதச்சாற்பற்ற ஜனதா தளமும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர். ஆனால், ஆளுனர் பா.ஜ.க.வையே ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார்.

    ஆளுனரின் இந்த முடிவை எதிர்த்து காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குவதற்காக பா.ஜ.க. கடும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது.


    இந்நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் மூத்த தலைவரான தேவகவுடா இன்று தனது 85-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள மோடி, ‘நமது முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு வாழ்த்துக்கள், அவரது உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ்வதற்கு இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார். #modiwishes #devegowda
    ×