search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BJD Walks Out Lok Sabha"

    மக்களவையில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் தொடங்குவதற்கு முன்பாக பிஜூ ஜனதா தளம் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். #NoConfidenceMotion #NoConfidenceDebate
    புதுடெல்லி:

    மத்திய அரசின் மீது தெலுங்கு தேசம் கட்சி சார்பில் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று விவாதம் நடைபெற்று வருகிறது. தெலுங்கு தேசம் கட்சி எம்பி ஜெயதேவ கல்லா விவாதத்தை தொடங்கி வைத்து பேசினார்.



    விவாதத்தில் பங்கேற்று பேசுவதற்கு ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனியாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில்,  காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை மேலும் அதிகரிக்க வேண்டும் என மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தினார். ஆனால் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அதனை ஏற்கவில்லை. இதனால் காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேசமயம் விவாதம் தொடங்குவதற்கு முன்பாகவே, நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். #NoConfidenceMotion #NoConfidenceDebate

    ×