search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BJP Minister"

    • 'Beti Bachao, Beti Padhao' மத்திய அரசு திட்டத்தின் பெயரை இந்தியில் எழுத்து பிழையுடன் எழுதிய அமைச்சர் சாவித்ரி தாக்கூர்.
    • இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் மத்தியப் பிரதேச மாநிலம் தார் தொகுதியில் வென்ற சாவித்ரி தாக்கூர், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

    இணையமைச்சர் சாவித்ரி தாக்கூர், தனது தொந்த தொகுதியில் அரசு சார்பில் நடந்த பள்ளி விழாவில் கலந்துகொண்டார். அப்போது பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் ('Beti Bachao, Beti Padhao') என்ற மத்திய அரசின் திட்டத்தை இணையமைச்சர் இந்தியில் எழுதும் பொழுது எழுத்துப் பிழையுடன் எழுதியுள்ளார்.

    மத்திய இணையமைச்சர் இந்தியில் எழுத்துப் பிழையுடன் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த வைரல் வீடியோவிற்கு காங்கிரஸ் தலைவர் கேகே மிஸ்ரா தனது எக்ஸ் பக்கத்தில் எதிர்வினை ஆற்றியுள்ளார். அதில், "தங்களது தாய்மொழியை கூட எழுத தெரியாதவர்கள் தான் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இது ஜனநாயகத்தின் துரதிஷ்டம். இப்படிப்பட்டவர்களால் எப்படி ஒரு துறையை நிர்வகிக்க முடியும். பாராளுமன்ற உறுப்பினராவதற்கு கல்வி தகுதியை நிர்ணயிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    சாவித்ரி தாகூர் தனது வேட்புமனுவில் 12 ஆம் வகுப்பு வரை தான் படித்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புதுவை-விழுப்புரம் சாலையில் இந்திரா சிலை சதுக்கத்தில் பேனர் வைத்துள்ளார்.
    • ஊசுடு தொண்டமாநத்தம் கிராமத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் தொடங்குவதையொட்டி பேனர் வைத்துள்ளார்.

    புதுச்சேரி:

    வீட்டை பாதுகாக்க கதவுக்கு பூட்டுபோட்டு செல்வது வழக்கம். ஆனால் புதுவையில் பொது இடத்தில் வைத்துள்ள பேனரை யாரும் அகற்ற கூடாது என்பதை தடுப்பதற்காக பா.ஜனதா அமைச்சர் ஒருவர் பேனருக்கு பூட்டு போட்டுள்ளார். இது பார்ப்போரை வியப்படையச் செய்துள்ளது.

    புதுவை குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார். பா.ஜனதா அமைச்சரான இவர் புதுவை ஊசுடு தொகுதியில் இருந்து வெற்றி பெற்றவர்.

    ஊசுடு தொண்டமாநத்தம் கிராமத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் தொடங்குவதையொட்டி பேனர் வைத்துள்ளார். அந்த பேனரில் பிரதமர் மோடி, கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி படங்கள் இடம்பெற்றுள்ளது.

    புதுவை-விழுப்புரம் சாலையில் இந்திரா சிலை சதுக்கத்தில் பேனர் வைத்துள்ளார்.

    இந்த பேனரை யாரும் அகற்ற கூடாது என்பதற்காக பின்பக்கமாக பூட்டு போட்டுள்ளார்.

    இதன் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனை பலர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

    • பெண்ணின் கண்ணத்தில் அமைச்சர் அறையும் வீடியோ சமூக வளைதளத்தில் வைரலானது.
    • பாஜக அமைச்சரை பதவி நீக்கம் செய்ய கர்நாடகா காங்கிரஸ் கட்சி வலியுறுத்தல்

    சாம்ராஜ்நகர்:

    கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள ஹங்கலா கிராமத்தில் அரசு நிலத்தில் வீடு கட்டி வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்கும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், கர்நாடக வீட்டு வசதித்துறை அமைச்சர் சோமண்ணா கலந்து கொண்டு, அந்த பகுதி மக்களுக்கு நில உரிமை பட்டாக்களை வழங்கினார்.

    அப்போது அங்கு திரண்டிருந்த கூட்டத்தினர் மத்தியில் நெரிசல் ஏற்பட்டது. இதில் அங்கிருந்த பெண் ஒருவர் தள்ளப்பட்டதால் அவர் அமைச்சர் மீது விழுவது போல் சென்றுள்ளார். இதையடுத்து அந்த பெண்ணின் கன்னத்தில் அமைச்சர் சோமண்ணா அறையும் வீடியோ காட்சி சமூக வளைதளத்தில் வெளியாகி வைரலானது. 


    அமைச்சரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். அவரை உடனடியாக பதவி நீக்க வேண்டும் என்று கர்நாடகா காங்கிரஸ் கட்சி, வலியுறுத்தி உள்ளது.

    இந்நிலையில் குடகு மாவட்டம் மடிகேரியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த அம்மாநில முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், அமைச்சர் சோமண்ணா பெண்ணை அறைந்தது அவரது மனிதாபிமானமற்ற செயலை காட்டுகிறது என்று கூறியுள்ளார். பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறையில் பாஜக அதிக ஆர்வம் காட்டி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்திராகாந்தி மாதிரி மூக்கு இருப்பதால் பிரியங்காவால் வெற்றி பெற முடியாது என்று பாஜக மந்திரி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #BJP #LokSabhaElections2019 #LSPolls

    ஆமதாபாத்:

    குஜராத் மாநிலம் அனந்த் பகுதியில் மத்திய மந்திரி மன்சூக்மந்தவியா நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசும்போது காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்காவை மிக கடுமையாக தாக்கி பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

    இந்திராகாந்தி போன்று பிரியங்காவுக்கும் மூக்கு இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் மிகவும் பெருமையாக சொல்லி கொள்கிறார்கள். இந்திராகாந்தி மாதிரி மூக்கு இருந்து விட்டால் போதுமா?

    அந்த மூக்கை வைத்துக் கொண்டு எப்படி வெற்றி பெற முடியும். பாட்டி மாதிரி ஒரே மாதிரி மூக்கு இருந்து விட்டால் அரசியலில் ஒரு போதும் வெற்றி பெற்று விட முடியாது. இதை பிரியங்கா உணர்ந்து கொள்ள வேண்டும்.


    சீனாவில் எல்லாரது முகமும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. அவர்கள் மூக்கும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. அதற்காக வீடு தோறும் சீனா ஜனாதிபதி இருக்கிறார் என்று சொல்லி விட முடியுமா?

    ஆகையால் ஒரே மாதிரி மூக்கு என்று சொல்லிக் கொண்டு ஆட்சி அதிகாரத்துக்கு வந்து விடலாம் என்று கனவு காணக்கூடாது. அரசியலில் மேன்மை பெற தனி தகுதி வேண்டும்.

    இவ்வாறு மத்திய மந்திரி மன்சூக்மந்தவியா பேசினார்.

    இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    கடந்த மாதம் பா.ஜனதா எம்.பி. ஹரிஸ்திவேதி பேசுகையில், “பிரியங்கா டெல்லியில் இருக்கும்போது ஜீன்ஸ் போட்டுக் கொள்கிறார். தேர்தல் பிரசாரத்துக்கு வந்தால் சேலை அணிகிறார். எதற்காக இந்த இரட்டை வேடம் போடுகிறார்” என்று கேட்டு இருந்தார். இந்த பேச்சும் கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. #BJP #LokSabhaElections2019 #LSPolls

    உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியில் நலத்திட்ட விழாவில் பேசிய பாஜக மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி, ராகுல் காந்தி பிரதமராக வருவார் என காங்கிரஸ் கட்சி பகல் கனவு காணுகிறது என தெரிவித்துள்ளார். #Amethi #BJP #SmritiIrani #Modi #RahulGandhi
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலத்தின் அமேதி தொகுதியில் பாஜக மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி இன்று சுற்றுப்பயணம் செய்தார். 

    அமேதி தொகுதியில் உள்ள கவுரிகஞ்ச் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிடி ஸ்கேன் இயந்திரத்தை அப்பகுதி மக்களுக்கு அர்ப்பணித்து வைத்தார். அதன்பின்னர், அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: 



    அமேதி பாராளுமன்ற தொகுதியில் உள்ள 5 சட்டசபை தொகுதிகளிலும் கடந்த 2017ல் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்துள்ளது. ராகுல் காந்தி பிரதமராக வருவார் என காங்கிரஸ் கட்சி பகல் கனவு காணுகிறது.

    காங்கிரஸ் ஆட்சியை விட, பாஜக ஆட்சியில்தான் அமேதியின் வளர்ச்சி அதிகரித்து வந்துள்ளது. அமேதி முன்னேற்றத்துக்கு மோடி அரசுதான் காரணம்.

    அயோத்தியா விவகாரத்தில் கோர்ட் நடவடிக்கைகளை வேகப்படுத்தாதது ஏன் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். #Amethi #BJP #SmritiIrani #Modi #RahulGandhi
    உத்தரகாண்டில் வீடுகளில் கழிப்பறை வசதி இல்லாதவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இயலாது என பாரதிய ஜனதா மந்திரி தெரிவித்துள்ளார். #Uttarakhand #Panchayatpolls #BJPMinister
    டேராடூன்:

    தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளிலும் கழிவறை கட்டுவதில் மத்திய பா.ஜனதா அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

    இந்த நிலையில் பா.ஜனதா ஆளும் உத்தரகாண்ட் மாநிலத்தில் வீடுகளில் கழிவறை இல்லாவிட்டால் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட இயலாது என்று அறிவித்துள்ளது.

    இதுகுறித்து அந்த மாநில பஞ்சாயத்து ராஜ் மந்திரி அரவிந்த் பாண்டே கூறியதாவது:-

    பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுபவர்களின் வீடுகளில் கழிப்பறை இருப்பது கட்டாயம். வீடுகளில் கழிப்பறை வசதி இல்லாதவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இயலாது என்று பரிந்துரைத்துள்ளோம்.

    மேலும் 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது என்பது பற்றிய பரிசீலனையும் இருக்கிறது. அதோடு பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு குறைந்தபட்ச கல்வி தகுதியும் நிர்ணயிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்படுகிறது. #Uttarakhand #Panchayatpolls #BJPMinister
    உத்தரபிரதேசத்தில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்தால் அதற்கு என்ன? சுப்ரீம் கோர்ட்டே எங்கள் கையில் தான் இருக்கிறது என்று பா.ஜ.க. மந்திரி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
    லக்னோ:

    உத்தரபிரதேச சட்டசபை தேர்தலின்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என்று பாரதிய ஜனதா வாக்குறுதி அளித்தது.

    அங்கு பாரதிய ஜனதா ஆட்சி அமைந்தது. ஆனாலும் இதுவரை ராமர் கோவில் கட்டுவதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

    உத்தரபிரதேசத்தில் கூட்டுறவு துறை கேபினட் மந்திரியாக இருப்பவர் முகுத் பிகாரி வர்மா. இவர் பக்ரைச் நகரில் நடந்த விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அவரிடம் நிருபர்கள் உத்தரபிரதேசத்தில் ஆட்சியை பிடித்தால் ராமர் கோவில் கட்டுவோம் என்று வாக்குறுதி அளித்தீர்கள். இன்னும் கோவில் கட்டவில்லையே என்று கேட்டனர்.

    அதற்கு பதில் அளித்த முகுத் பிகாரி வர்மா, ராமர் கோவில் நிச்சயம் கட்டப்படும். அதற்கான முயற்சிகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

    இதற்கு நிருபர்கள் இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது. அப்படி இருக்கும்போது, ராமர் கோவில் எப்படி கட்ட முடியும் என்று திருப்பி கேட்டனர்.

    அதற்கு பதில் அளித்த மந்திரி, வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இருந்தால் அதற்கு என்ன? சுப்ரீம் கோர்ட்டே எங்கள் கையில் தான் இருக்கிறது. நீதி எங்கள் கையில் இருக்கிறது. அதன் நிர்வாகம் எங்கள் கையில் இருக்கிறது. சட்டசபையும் எங்களிடம் உள்ளது. இந்த நாடே எங்களிடம் தான் இருக்கிறது. இது எங்கள் கோவில். எனவே நாங்கள் ராமர் கோவில் கட்டுவோம் என்று பதில் அளித்தார்.

    சுப்ரீம் கோர்ட்டே எங்கள் கையில் இருக்கிறது என்று அவர் கூறியது, சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபற்றி மந்திரி முகுத் பிகாரி வர்மா கருத்தை அறிய விரும்பியபோது அவர் பதில் சொல்ல மறுத்துவிட்டார். #UttarPradesh #RamaTemple #MukutBihariVerma
    ×