search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BJP Minister பிரதமர் மோடி"

    பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில் பெண் மந்திரியின் இடுப்பை திரிபுரா மந்திரி பிடித்தப்படி நின்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. #TripuraMinister #ManojKanti
    அகர்தலா:

    திரிபுரா மாநிலத்தில் முதல்-மந்திரி பிப்லாப் குமார் தேப் தலைமையில் பாரதிய ஜனதா ஆட்சி நடந்து வருகிறது.

    சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி அந்த மாநிலத்திற்கு தேர்தல் பிரசாரம் செய்ய சென்று இருந்தார்.

    அப்போது சில நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அந்த விழாவில் பா.ஜனதா மந்திரிகள், தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவில் பிரதமர் நரேந்திர மோடி ஒரு திட்டத்தை தொடங்கி வைத்த போது திரிபுரா மந்திரிகள் மேடையின் இருபக்கமும் அணிவகுத்து நின்றார்கள். அப்போது ஒரு பக்கத்தில் நின்று கொண்டிருந்த சமூக நலத்துறை பெண் மந்திரி சந்தனாவின் இடுப்பை பிடித்தப்படி அமைச்சர் மனோஜ்காந்தி என்பவர் நின்று கொண்டு இருந்தார்.



    பெண் மந்திரியின் இடுப்பை மனோஜ்காந்தி பிடித்தப்படி நின்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து பெண் மந்திரிக்கு விழா மேடையிலேயே பாலியல் துன்புறுத்தல் நடந்ததாக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர்.

    இதையடுத்து மந்திரி மனோஜ்காந்திக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது. ஆனால் அதை ஏற்க முதல்-மந்திரி பிப்லாப் குமார் மறுத்து விட்டார்.

    இதற்கிடையே மந்திரி மனோஜ்காந்தி ராஜினாமா செய்யாவிட்டால் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப் போவதாக மூத்த தலைவர்களில் ஒருவரான பிஜந்தர் எச்சரித்துள்ளார்.

    ஆனால் தன்னிடம் யாரும் அத்துமீறவில்லை என்று பெண் மந்திரி சந்தனா அறிவித்துள்ளார். என்றாலும் திரிபுராவில் சந்தனாவின் இடுப்பை பிடித்தப்படி மந்திரி நிற்கும் காட்சிகள் பரபரப்பை நீடிக்க செய்துள்ளன. #TripuraMinister #ManojKanti
    ×