என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "BJP National Democratic Alliance"
- முக்கிய இலாக்காக்களான உள்துறை, நிதி, பாதுகாப்பு ஆகிய துறைகளை பாஜக விட்டுக்கொடுப்பதாக தெரியவில்லை.
- ஏக்நாத் ஷிண்டே அணி 7 சீட்களும், சிராஜ் பவானின் எல்.ஜே.பி கட்சி 5 சீட்களும் வைத்துள்ளதால் இவையும் அமைச்சரவையில் முக்கிய இலாக்காக்களை வழங்குமாறு கேட்பதாக தகவல் கசிந்துள்ளது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற என்.டி.ஏ புதிய எம்.பி.க்கள் கூட்டத்தில் அக்கூட்டணியின் பாராளுமன்ற தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து நாளை இரவு 7.15 மணிக்கு 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.
பிரதமர் உடன் கேபினட் அமைச்சர்கள் பதவி ஏற்க வாய்ப்புள்ளது. இன்று நடைபெறவுள்ள என்.டி.ஏ கூட்டத்தில் இதுகுறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது. கூட்டணி கட்சிகளுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்துகிறது.
அமையவுள்ள புதிய அமைச்சரவையில் யார் யார் இடம்பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்புகளும் யூகங்களும் எழத் தொடங்கியுள்ளன. இந்த முறை பாஜக ஆட்சியமைக்க 12 சீட் வைத்துள்ள நிதிஷ் குமாரின் ஆர்.ஜே.டி கட்சியும், 16 சீட் வைத்துள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் முக்கிய காரணமாக உள்ளதால் அமைச்சரவையில் முக்கிய இலாகாக்கங்களுக்கு இந்த இரண்டு கட்சிகளும் அடிபோடுவதாக தெரிகிறது.
அவர்கள் மட்டுமின்றி சிவா சேனாவை உடைத்து பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியில் அமர்ந்த மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணி 7 சீட்களும், சிராஜ் பவானின் எல்.ஜே.பி கட்சி 5 சீட்களும் வைத்துள்ளதால் இவையும் அமைச்சரவையில் முக்கிய இலாக்காக்களை வழங்குமாறு கேட்பதாக தகவல் கசிந்துள்ளது.
ஆனால் முக்கிய இலாக்காக்களான உள்துறை, நிதி, பாதுகாப்பு ஆகிய துறைகளை பாஜக விட்டுக்கொடுப்பதாக தெரியவில்லை. தற்போது வெளியாகியுள்ள யூகங்களின்படி, விவசாயம், பழங்குடியின நலன், சிறுபான்மையினர் நலன், கல்வி, சிறு குறு தொழித்துறை ஆகியவை தெலுங்கு தேசம் கட்சிக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் எல்.பி.ஜெவுக்கும், ஜவுளித் துறை, கனிம வளம் மற்றும் சுரங்கத் துறை ஜே.டி.யுவுக்கும், திறன் மேம்பாட்டுத் துறை ஏக்நாத் ஷிண்டே அணிக்கும் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது.
ஒதுக்கப்பட்ட இலாக்காக்களில் தெலுங்குதேசம் கட்சியை சேர்ந்த ராம் மோகன், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த குமாரசாமி, உத்தர பிரதேச மாநிலம் அப்னா தளம் கட்சியை சேர்ந்த அனுபிரியா பட்டேல், ராஷ்டிரிய லோக் தளம் கட்சி தலைவர் ஜெய்ந்த சவுத்ரி, பீகார் மாநிலம் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் லாலன் சிங், லொக் ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பஸ்வான், ஜித்தமன் ராம் மஞ்சி, சிவசேனாவின் பிரதாப்ராவ் ஜாதவ், ஷிராங் பர்னே ஆகியோர் கேபினட் மந்திரிகளாக பதவி ஏற்க வாய்ப்புள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்