என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "BJP volunteer"
பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் நரேந்திர மோடி புதுவை மாநில பா.ஜனதா நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
புதுவை செண்பகா ஓட்டலில் நடந்த வீடியோ கான்பரன்ஸ் கலந்துரையாடலில் மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சியின் கிளை பொறுப்பாளர்கள், மாவட்ட, மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கட்சியினரிடையே பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சில் பேசியதாவது:-
‘பூத்’ அளவில் கட்சியை பலப்படுத்த வேண்டும். தொடர்ந்து மக்களை சந்தியுங்கள். கடந்த முறையை விட கூடுதல் இடங்களை பெற பாடுபடுங்கள். அரசின் திட்டங்களை மக்களிடம் சொல்லுங்கள்.
கடின உழைப்பை உயர்த்துங்கள், வாக்கு எண்ணிக்கையை உயர்த்துங்கள், அனைவரும் ‘நமோ’ ஆப் தரவிறக்கம் செய்து ரூ.5 நன்கொடை அளியுங்கள்.
தொடர்ந்து பிரதமர் மோடியிடம் கட்சி நிர்வாகிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளித்தார். புதுவை பூரணாங்குப்பத்தை சேர்ந்த விமலாதேவி, “நான் முத்ரா திட்டத்தில் வங்கியில் 1.5 லட்சம் கடன் பெற்று தலையணை தயாரித்து விற்கிறேன். 4 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி உள்ளேன்” என்றார்.
அதற்கு பதில் அளித்த பிரதமர் மோடி, “உங்கள் தொழில் வளர வாழ்த்துகிறேன். நீங்கள் தயாரிக்கும் தலையணையை எனக்கு அனுப்புங்கள். நான் பயன்படுத்துகிறேன்” என்றார்.
இதனையடுத்து நிர்மல் குமார் ஜெயின் என்பவர், நடுத்தர வர்க்க மக்களிடம் வரியை மட்டுமே வசூலிப்பதில் குறியாக உள்ளீர்கள். நடுத்தர வர்க்கத்தினருக்கு என்ன செய்தீர்கள்? அவர்கள் நிம்மதியாக இருக்க நடவடிக்கை எடுங்கள் என்றார்.
இதனால் பிரதமர் மோடியின் முகம் இறுகியது. தொடர்ந்து அவர் பதில் அளிக்கும்போது, நீங்கள் வியாபாரி. வர்த்தக ரீதியாக பேசுகிறீர்கள். நடுத்தர மக்களின் நலன் பாதுகாக்கப்படும் என்றார்.
இதையடுத்து வீடியோ கான்பரன்ஸ் கலந்துரையாடல் முடிவடைந்தது என்பதை குறிக்கும் வகையில் ‘வணக்கம் புதுச்சேரி’ என முடித்துக் கொண்டார்.
கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியிடம் கட்சி தொண்டர் ஒருவர் ஆட்சியை விமர்சனம் செய்து கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #PMModi #BJP
தியாகதுருகம்:
தியாகதுருகம் அருகே உள்ள பிரிதிவிமங்கலத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 29), பா.ஜ.க. நிர்வாகி. அதே பகுதியில் தேர் திருவிழா நடைபெறுவதையொட்டி ஏழுமலை பேனர் வைத்திருந்தார். இந்த பேனரை யாரோ மர்மநபர்கள் கிழித்து விட்டனர். இதனால் ஏழுமலை தனது வீட்டின் முன்பு நின்று கொண்டு திட்டிக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த அதே பகுதியை சேர்ந்த பாலசந்திரன்(28), வடிவேல், தென்கீரனூரை சேர்ந்த கணேசன் ஆகியோர் ஏழுமலையை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த ஏழுமலை சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்த தியாகதுருகம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதுதொடர்பாக பாலசந்திரனை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான வடிவேல், கணேசன் ஆகியோரை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்