search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bjp woman mp"

    பிரதமரை மோசமாக விமர்சித்த விவகாரத்தில் ராகுலை ஜெயிலில் அடைக்க வேண்டும் என்று பா.ஜனதா பெண் எம்.பி. கூறியுள்ளார்.

    புதுடெல்லி:

    ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் நடந்துள்ளதாக கூறப்படும் முறைகேடுகள் பற்றி ஆவணங்களின் அடிப்படையில் விரிவான விசாரணை நடத்தப்படும் என்று சுப் ரீம்கோர்ட்டு கடந்த மாதம் 10-ந்தேதி அறிவித்தது.

    இந்த தீர்ப்பை மேற்கோள் காட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர், “நாட்டின் காவலாளி (பிரதமர் மோடி) திருடன் என்பதை சுப்ரீம் கோர்ட்டே ஒப்புக் கொண்டு விட்டது” என்றார்.

    சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை ராகுல் தனக்கு சாதகமாக திரித்து கூறுவதாக பா.ஜனதா பெண் எம்.பி. மீனாட்சி லெகி, சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து ராகுலிடம் விளக்கம் கேட்டு கோர்ட்டு நோட்டீசு அனுப்பியது.

    அதற்கு பதில் அளித்த ராகுல், தனது கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக கூறினார். ஆனால் அதை சுப்ரீம் கோர்ட்டு ஏற்க வில்லை. இதையடுத்து 2-வது தடவையாக ஒரு மனு மூலம் ராகுல் பதில் அளித்தார்.

    அந்த விளக்கமும் சுப்ரீம் கோர்ட்டுக்கு திருப்தி தர வில்லை. இதைத் தொடர்ந்து மோடியை திருடன் என்று கூறியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக ராகுல் பதில் அளித்தார். இதைத் அடுத்து இந்த வழக்கை முடித்து வைக்குமாறு ராகுல் சார்பில் கோரிக்கை விடப்பட்டது.

    ஆனால் இதை பா.ஜனதா பெண் எம்.பி. மீனாட்சி லெகி சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி ஏற்கவில்லை. அவர் வாதாடுகையில் சில கோரிக்கைகளை முன் வைத்தார். அவர் கூறியதாவது:-


    பிரதமரை மோசமாக விமர்சித்த விவகாரத்தில் ராகுல் கேட்டுள்ள மன்னிப்பை இந்த கோர்ட்டு ஏற்க கூடாது. அவரது மனுவை நிராகரிக்க வேண்டும்.

    ராகுல் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பொதுமக்களிடம் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்.

    இல்லையெனில் அவரை கைது செய்து ஜெயிலில் அடைக்க வேண்டும். அதற்கும் இயலாவிட்டால் ராகுல் தொடர்ந்து தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு வக்கீல் முகுல் ரோத்தகி வாதாடினார். இதைக் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

    ×