search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Blackberry Key2 LE"

    பிளாக்பெரி நிறுவனத்தின் விலை குறைந்த கீ2 எல்.இ. ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #blackberrykey2
    பிளாக்பெரி நிறுவனத்தின் கீ2 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் கடந்த மாதம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து கீ2 விலை குறைந்த மாடலான கீ2 லைட் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆனது. இந்நிலையில் இந்த ஸ்மார்ட்போன் பெர்லின் நகரில் நடைபெற இருக்கும் ஐ.எஃப்.ஏ. விழாவில் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கீ2 ஸ்மார்ட்போனின் பாதுகாப்பான மென்பொருள், மற்றும் கீபோர்டு ஸ்மார்ட்போனினை பயன்படுத்த சிறப்பான அனுபவத்தை வழங்குகிறது. எனினும் இது போட்டி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் மாடல்களை விட விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போனின் விலை குறைவாக நிர்ணயம் செய்யலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் பிளாக்பெரி கீ2 எல்.இ. என்ற பெயரில் FCC தளத்தில்: BBE100-1 (சிங்கிள் சிம்) மற்றும் சர்வதேச சந்தைகளில் BBE100-4 (டூயல் சிம்), BBE100-2 (சிங்கிள் சிம்) மற்றும் அமெரிக்க சந்தைகளில் BBE100-5 (டூயல் சிம்) மற்றும் BBE100-3 பெயர்களை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.



    புதிய பிளாக்பெரி ஸ்மார்ட்போன் லூனா என்ற குறியீட்டு பெயர் கொண்டிருக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இத்துடன் 3:2 ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்ட டிஸ்ப்ளே, 4 அடுக்கு க்வெர்டி பேக்லிட் கீபோர்டு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. பிளாக்பெரி கீ2 எல்.இ. மாடலில் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட், 4 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என்றும் 13 எம்பி + 5 எம்பி டூயல் பிரைமரி கேமராக்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    புதிய விலை குறைந்த ஸ்மார்ட்போன் ரெட், புளூ மற்றும் காப்பர் என மூன்று நிறங்களில் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனுடன் வெளியாகியிருக்கும் புகைப்படங்களில் புதிய ஸ்மார்ட்போன் புளூ அல்லது பிளாக் நிற ஃபினிஷ் செய்யப்பட்டு பக்கவாட்டுகளில் சிவப்பு நிறம் கொண்டிருக்கிறது.  #blackberrykey2
    பிளாக்பெரி கீ2 எல்.இ. ஸ்மார்ட்போனின் விவரங்கள் கடந்த மாதம் வலைதளத்தில் லீக் ஆனது. இம்முறை இந்த ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் மற்றும் சிறப்பம்சம் சார்ந்த விவரங்கள் கிடைத்திருக்கிறது. #BlackBerry


    அதன்படி கீ2 எல்.இ. ஸ்மார்ட்போனில் 4.5 இன்ச் 1620x1080 பிக்சல் டிஸ்ப்ளே, 3:2 ஆப்கெட் ரேஷியோ, 4-அடுக்கு க்வெர்டி பேக்லிட் கீபோர்டு, ஸ்பேஸ் பாரில் கைரேகை சென்சார், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ, ஸ்னாப்டிராகன் 636 சிப்செட், 4 ஜிபி ரேம், 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது.



    பிளாக்பெரி கீ2 எல்.இ. எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    - 4.5 இன்ச் 1620x1080 பிக்சல் 3:2 டிஸ்ப்ளே 433 PPI
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm பிராசஸர்
    - அட்ரினோ 509 GPU
    - 4 ஜிபி ரேம்
    - 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 4-அடுக்கு க்வெர்டி கீபோர்டு பேக்லிட் கீபோர்டு, கேபாசிட்டிவ் டச்
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - ஹைப்ரிட் டூயல் சிம்
    - 13 எம்பி பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்இடி ஃபிளாஷ்
    - 5 எம்பி செல்ஃபி கேமரா
    - ஸ்பேஸ் பாரில் கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    பிளாக்பெரி கீ2 எல்.இ. ஸ்மார்ட்போன் பிளாக், ரெட், புளு மற்றும் காப்பர் நிறங்களில் கிடைக்கும் என்றும் இந்த ஸ்மார்ட்போன் ஐ.எஃப்.ஏ. 2018 விழாவில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #BlackBerry #smartphone
    ×