search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BMW India"

    பி.எம்.டபுள்யூ. நிறுவனம் இந்தியாவில் எம்2 காம்படிஷன் கார் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது அந்நிறுவனத்தின் விலை குறைந்த எம் எடிஷன் மாடலாக அமைந்துள்ளது. #BMW



    பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் புது எம்2 காம்படிஷன் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் பி.எம்.டபுள்யூ. எம்2 எடிஷன் கார் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் எம் பிரிவின் விலை குறைந்த மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய பி.எம்.டபுள்யூ. எம்2 கார் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளிலும் கிடைக்கிறது. புது பி.எம்.டபுள்யூ எம்2 காம்படிஷன் கார் விலை ரூ.79.9 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கார் முழுக்க பிளாக் தீம் மற்றும் அட்ஜஸட் செய்யப்பட்ட ஸ்போர்ட் எக்சாஸ்ட் கொண்டுள்ளது.



    எம்2 காம்படிஷன் காரில் 3.0 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 405 பி.ஹெச்.பி. பவர் 550 என்.எம். டார்கியூ, 7-ஸ்பீடு டூயல் கிளஸ்ட் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் வழங்கப்படுகிறது.

    பி.எம்.டபுள்யூ. எம்2 காம்படிஷன் கார் 4.2 நொடிகளில் மணிக்கு 0-100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என்றும் அதிகபட்சம் மணிக்கு 250 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

    இந்தியாவில் பி.எம்.டபுள்யூ. எம்2 காம்படிஷன் கார் போர்ஷ் கேமென் எஸ், ஃபோர்டு மஸ்டாங், மெர்சிடிஸ் ஏ.எம்.ஜி. எஸ்.எல்.சி.43, ஆடி ஆர்.எஸ்.5 உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது. எனினும் போட்டி நிறுவன மாடல்கள் விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
    ×