search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bogar siddhar"

    ரத உற்சவத்துக்கு பெயர் பெற்ற இடம், பூரி ஜகன்னாதர் ஆலயம். ஆனால் நிறைய பேருக்கு தெரியாத ஒரு விஷயம் அங்கு உண்டு. இது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    ரத உற்சவத்துக்கு பெயர் பெற்ற இடம், பூரி ஜகன்னாதர் ஆலயம். ஆனால் நிறைய பேருக்கு தெரியாத ஒரு விஷயம் அங்கு உண்டு. அந்தக் கோவிலின் கருவறை தான், துவார யுகத்தில் வாழ்ந்த கிருஷ்ணனின் ஆயுள் முடிவுற்ற இடம் என்று நம்பப்படுகிறது.

    கிருஷ்ணர் அவதார முடிவில், அந்த உடலை விட்டு நாராயணர் சென்ற பின்னர், யாதவ குலத்தினர், அவர் உடலுக்கு மரியாதை செய்து, கங்கையில் விட்டனர். கிருஷ்ணரோ இயற்கையான ‘வாசி யோகி’. ஒரு வாசி யோகியின் உடலுக்கு அழிவு கிடையாது.

    அது எப்போதும் நல்ல சக்தியை பரப்பிக்கொண்டிருக்கும். கங்கையில் கிருஷ்ணரின் உடல் விடப்பட்டதை கண்டுகொண்டிருந்த ஒருவர், அந்த உடலை மீட்டு, அதை சமாதி வைத்து ஒரு ஆலயமாக எழுப்பினார். ஆலய கருவறையை ‘சங்கு’ வடிவில் அமைத்தார். கோவிலை அமைத்தவர் போகர் சித்தர் என்று சொல்கிறார்கள். 
    பழனி மலைக்கோவிலில் போகர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மலைக்கோவில் வளாகத்தில் அமைந்துள்ள போகர் சன்னதியில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
    பழனி மலைக்கோவிலில் போகர் ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி மலைக்கோவில் வளாகத்தில் அமைந்துள்ள போகர் சன்னதியில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் போகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    அதைத்தொடர்ந்து போகர் சன்னதியில் உள்ள மரகத லிங்கத்துக்கும் சிறப்பு பூஜைகள், அலங்காரம் செய்யப்பட்டது. முன்னதாக மறிக்கொழுந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
    ×