search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bolivia"

    பொலிவியாவில் ஆட்கடத்தல் கும்பலால் கடத்தப்பட்ட பெண் 32 ஆண்டுகளுக்குப் பின் மீட்கப்பட்டு, அவரது குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கப்பட்டார். #ArgentineWoman #PeopleTraffickers
    லா பாஸ்:

    பொலிவியாவில் 1980களில் அர்ஜென்டினாவைச் சேர்ந்த ஒரு சிறுமி ஆட்கடத்தல் கும்பலால் கடத்தப்பட்டார். இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். ஆனால் அவரைப் பற்றிய எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் கடத்தப்பட்ட பெண் தெற்கு பொலிவியான் பெர்மிஜோ பகுதியில் இருப்பதாக  இந்த ஆண்டின் துவக்கத்தில் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து பொலிவியா மற்றும் அர்ஜென்டினா போலீசார் இணைந்து, அந்த பெண் குறித்த விவரங்கள் மற்றும் அங்க அடையாளங்களை வைத்து தெற்கு பொலிவியாவில் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட முயற்சிக்குப் பிறகு அந்த பெண்ணை போலீசார் கண்டுபிடித்தனர். ஆட்கடத்தல் கும்பலில் சிக்கியிருந்த அந்த பெண்ணையும், அவரது மகனையும் இந்த மாத துவக்கத்தில் மீட்டு குடும்பத்தினருடன் சேர்த்து வைத்துள்ளனர். தற்போது அந்த பெண்ணுக்கு 45 வயது ஆகிறது.

    கடத்தப்பட்ட பெண் 32 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்கப்பட்டு, மார் டெல் பிளாட்டா பகுதியில் உள்ள அவரது குடும்பத்தினருடன் சேர்த்து வைத்திருப்பதாக அர்ஜென்டினா காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால், அந்தப் பெண்ணை கடத்திச் சென்ற நபர் குறித்த எந்த தகவலையும் வெளியிடவில்லை. #ArgentineWoman #PeopleTraffickers

    பொலிவியாவில் பயணிகள் பேருந்து பாறை மீது மோதி விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர். #BoliviaBusCrash
    லா பாஸ்:

    தென் அமெரிக்க நாடான பொலிவியாவின் போட்டோசி அருகே நெடுஞ்சாலையில் நேற்று 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, பெரிய பாறையில் மோதியது. இதில் பஸ்சின் முன்புறம் நொறுங்கியது.

    இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இவ்விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 30 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிவேகத்தில் பேருந்தை ஓட்டிச் சென்றதால் விபத்து  ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. #BoliviaBusCrash
    ×