என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » bordor attack
நீங்கள் தேடியது "bordor attack"
ஜம்மு காஷ்மீரில் ஊடுருவிய பயங்கரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்துக்கும் இடையிலான சண்டையில் இன்று மேலும் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். #JKInfiltration #FnfiltrationBid #Militantskilled
ஸ்ரீநகர்:
பாகிஸ்தானில் இருந்து எல்லை வழியாக பயங்கரவாதிகள் ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவி பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவது அதிகரித்து வருகிறது. பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க எல்லைக்கோட்டுப் பகுதியில் இந்திய ராணுவம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வகையில், குப்வாரா மாவட்டத்தில் உள்ள டாங்தார் எல்லைகோட்டுப் பகுதியில் இந்திய ராணுவம் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் நேற்று வழக்கம்போல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்குள்ள வனப்பகுதி வழியாக பாகிஸ்தானில் இருந்து சிலர் இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்றனர். இதை கவனித்துவிட்ட இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் அவர்களை திரும்பிப் போகும்படி எச்சரித்தனர்.
அந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாத பாகிஸ்தான் பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டபடி முன்னேறி வந்தனர். பாதுகாப்பு படை வீரர்களும் எதிர்தாக்குதல் நடத்தினர். இதில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தொடர்ந்து சண்டை நடைபெற்று வந்த நிலையில், இன்று மேலும் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். நேற்று முதல் இன்று வரை நீடித்த இந்த சண்டையில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்து உள்ளார். சண்டை முடிந்ததும் அங்கு தேடுதல் வேட்டை தொடர்கிறது. #JKInfiltration #FnfiltrationBid #Militantskilled

×

X