search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "boycott class and protest"

    • கூட்டுறவு கல்வியில் கல்லூரி தொடங்கப்பட்டது
    • முதல்- அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் திறந்து வைத்தனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த 2005ம் ஆண்டு கூட்டுறவு கல்வியில் கல்லூரி தொடங்கப்பட்டது. கடந்த 17 ஆண்டுகளாக இயங்கி வந்த இந்த கூட்டுறவு கல்லூரி கடந்த நவம்பர் 5ந் தேதி ஆசிரியர் தின தின விழாவில் அரசு கல்லூரியாக மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இதற்கான பெயர் பலகையை கவர்னர் தமிழிசை மற்றும் முதல்- அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் திறந்து வைத்தனர். கூட்டுறவு கல்வியில் கல்லூரியாக இருந்தபோது மாணவர்களுக்கு ரூ 51 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.ஆனால் அரசு கல்லூரியாக மாறிய பிறகு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ரூ. 5 ஆயிரம் கட்டணமும், 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு ரூ. 51 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள் இன்று சுதேசி பஞ்சாலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 2-ம் ஆண்டு படிக்கும் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு கோரிக்கை களை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

    இது குறித்து மாணவர்கள் கூறும்போது, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வசூலிக்கப்படும் ரூ.5 ஆயிரம் கட்டணமே 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் வசூலிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    ×