என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » boycott maha ls bypoll
நீங்கள் தேடியது "boycott Maha LS bypoll"
மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற உள்ள மக்களவை தொகுதி இடைத்தேர்தலை 12 கிராம மக்கள் புறக்கணிக்க உள்ளனர். #BypollBoycott
பந்தாரா:
மகாராஷ்டிர மாநிலம் கோண்டியா-பந்தாரா மக்களவைத் தொகுதியின் பா.ஜ.க. எம்.பி. நானா படோல் கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார். எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்தார். இதனால் காலியான கோண்டியா-பந்தாரா தொகுதியில் வரும் 28-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், பா.ஜ.க. வேட்பாளர் ஹேமந்த் பாட்லே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மதுகரோ குக்தே உள்ளிட்ட 18 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சுமார் 12 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தண்ணீர் பிரச்சனையை முன்வைத்து இந்த இடைத்தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
மத்திய அரசின் பவந்தடி நீர்ப்பாசன திட்டத்தின்கீழ் தும்சார் தாலுகாவில் உள்ள 12 கிராமங்களில் முறையாக தண்ணீர் விநியோகம், நீர்ப்பாசன வசதிகளை செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். மாவட்ட கலெக்டரிடமும் மனு அளித்துள்ளனர். ஆனால், அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
எனவே, தங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், இனி வரும் தேர்தல்களை புறக்கணிப்பது என கிராம சபை கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர். அதன்படி, கோண்டியா-பந்தாரா இடைத்தேர்தலையும் புறக்கணிக்க உள்ளனர். இந்த கிராமங்களில் சுமார் 30 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. #BypollBoycott

×

X