search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Brahmakamalam flower"

    • உடுமலை கே. சி. பி. நகரில் ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பிரமகமலம் பூ பூத்துள்ளது.
    • அருகில் உள்ளவர்கள் ஆர்வமுடன் பார்த்து ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை மலையாண்டிபட்டினம் கே. சி. பி. நகரில் மலர்விழி என்பவரது வீட்டில் ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பிரமகமலம் பூ பூத்துள்ளது.

    அருகில் உள்ளவர்கள் ஆர்வமுடன் பார்த்து ஆரத்தி எடுத்து வழிபட்டனர். இதை நிஷா கந்தி என்றும் அழைப்பர். சிவனுக்கு உகந்த தெய்வீக மலர் என்பதால் இதை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர். மேலும் இது இரவு 7 மணி அளவில் பூக்கத் தொடங்கி அதிகாலை இரண்டு மூன்று மணியளவில் சுருங்கிவிடும். வெண்மை நிற இதழ்களுடன் கூடிய அந்த பூ உள்ளே நாகம் படுத்திருப்பது போல் காணப்படும். இந்த பூவை காயவைத்து பவுடராக்கி சாப்பிட்டால் பல்வேறு நோய்கள்தீரும் என தெரிவிக்கின்றனர்.

    • தென் அமெரிக்காவின் மெக்சிக்கோ காடுகளைக் பிறப்பிடமாக கொண்ட செடி பிரம்ம கமலம் பூ
    • இலங்கையில் இது சொர்க்கத்தின் பூ என்றும் ஐரோப்பாவிலும், ஐக்கிய அமெரிக்காவிலும் பெத்லகேமின் நட்சத்திரம் என்றும் கூறப்படுகிறது.

    திருப்பூர் :

    பிரம்ம கமலம் எனப்படும் செடியில் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இரவில் அபூர்வ வகை மலர் பூக்க கூடிய செடியாகும். இது கள்ளி இனத்தைச் சேர்ந்த செடி. வெண்ணிறம் கொண்ட மலரானது, மூன்றுவிதமான இதழ்களைக் கொண்டு அழகாக இருக்கும். இந்த மலரானது பொதுவாக ஜூலை மாதத்தில் இரவில் மலரும்.

    தென் அமெரிக்காவின் மெக்சிக்கோ காடுகளைக் பிறப்பிடமாக கொண்ட இந்த செடி அங்கிருந்து உலகமெங்கும் பரவியுள்ளது. இலங்கையில் இது சொர்க்கத்தின் பூ என்றும் ஐரோப்பாவிலும், ஐக்கிய அமெரிக்காவிலும் பெத்லகேமின் நட்சத்திரம் என்றும் கூறப்படுகிறது.

    இது தமிழ்நாட்டிலும் பரவலாக வளர்கிறது. இது கள்ளி இனத்தைச் சேர்ந்ததால் இதன் தண்டை வெட்டி வைத்தாலே வளரக்கூடிய தன்மை கொண்ட செடியாக உள்ளது. இத்தகைய சிறப்பு கொண்ட பிரம்ம கமலம் பூ திருப்பூர் போயம்பாளையம் அடுத்த கங்காநகர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் வீட்டில் வளர்க்கப்படும் செடியில் பூ பூத்தது. ஒரே செடியில் 8 பூக்கள் பூத்துள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை இரவில் சில மணி நேரம் மட்டுமே மலரும் என்பதால் தகவல் அறிந்த அப்பகுதியை சேர்ந்த பலரும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

    ×