search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bravery"

    • லாரியை திருச்சியை சேர்ந்த டிரைவர் ராஜலிங்கம் ஓட்டி வந்தார்.
    • டிரைவர் ராஜலிங்கம் ஆரோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே மொரட்டாண்டியில் உள்ள சர்வீஸ் ரோட்டில் இரவு நேரங்களில் லாரிகளை நிறுத்திவிட்டு டிரைவர்கள் ஓய்வெடுப்பது வழக்கம். அதுபோல நாமக்கலில் இருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு வானூர் பகுதிக்கு ஒரு லாரி வந்தது. இந்த லாரியை திருச்சியை சேர்ந்த டிரைவர் ராஜலிங்கம் (வயது 56) ஓட்டி வந்தார். நாமக்கலை சேர்ந்த பிரகாஷ் (25) கிளினராக லாரியில் வந்தார். பொருட்களை இறக்கிவிட்டு தனியார் கம்பெனிைய விட்டு வெளியே வருவதற்கு நள்ளிரவாகி விட்டது. இதனால் லாரியை மொரட்டாண்டியில் உள்ள சர்வீஸ் ரோட்டில் நிறுத்திவிட்டு டிரைவர் மற்றும் கிளினர் ஓய்வு எடுத்துள்ளனர்.

    அதிகாலை 3 மணியளவில் லாரி அருகே 2 மர்மநபர்கள் வந்தனர். லாரியில் உறங்கி கொண்டிருந்த ராஜலிங்கம், பிரகாஷை எழுப்பி, கையில் உள்ள பணத்தை கொடுங்கள், இல்லையெனில் கத்தியால் குத்திவிடுவோம் என கத்தியை காட்டி மிரட்டினர். இதில் பயந்து போன டிரைவர் ராஜலிங்கம், தன்னிடம் இருந்த ரூ.4,500 பணத்தை கொடுத்துவிட்டார். கிளினர் பிரகாஷ், தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் பிரகாஷின் கையில் கத்தியால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இது குறித்து டிரைவர் ராஜலிங்கம் ஆரோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். கத்தியால் வெட்டியதில் கையில் காயத்துடன் வந்த கிளினர் பிரகாஷை புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக போலீசார் சேர்த்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த வானூர் போலீசார் கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    ×