search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "brick Kiln owner"

    திருவள்ளூர் அருகே வீட்டுக்குள் புகுந்து செங்கல் சூளை அதிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    செவ்வாப்பேட்டை:

    திருவள்ளூரை அடுத்த மேல்மணம்மேடு முத்து நகரை சேர்ந்தவர் வெங்கட்டராமு (வயது 47). அதே பகுதியில் செங்கல்சூளை நடத்தி வந்தார்.

    இன்று காலை அவர் செங்கல் சூளை செல்வதற்காக உறவினர் ஒருவரை காரை எடுத்துவர கூறியிருந்தார். அதில் செல்வதற்காக வீட்டின் முன்பு வெங்கட்ட ராமு நின்று கொண்டிருந்தார்.

    அப்போது 2 கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் மர்மநபர்கள் வந்தனர். திடீரென அவர்கள் வீட்டு முன்பு நின்று கொண்டிருந்த வெங்கட்டராமு மீது மோதினர்.

    இதில் நிலை தடுமாறிய அவர் கீழே விழுந்தார். உடனே கார், மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கிய 7 பேர் கும்பல், கத்தி-அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வெங்கட்டராமுவை சுற்றி வளைத்தனர்.

    அதிர்ச்சி அடைந்த அவர் உயிர் தப்பிப்பதற்காக வீட்டுக்குள் ஓடினார். ஆனாலும் விரட்டி சென்ற கொலை கும்பல் படுக்கை அறைக்குள் புகுந்து வெங்கட்டராமுவை சரமாரியாக வெட்டினர்.

    இதில் அவரது தலை முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டது. 2 கைகளின் விரல்களும் துண்டானது. அலறல் சத்தம் கேட்டு மற்றொரு அறையில் இருந்த வெங்கட்டராமுவின் மனைவி கிரேஸ், மகள் ஜனனி ஆகியோர் வெளியே வந்தனர்.

    ரத்த வெள்ளத்தில் கணவர் உயிருக்கு போராடு வதை கண்டு கிரேஸ் கூச்சலிட்டார். உடனே கொலை வெறி கும்பல் அங்கிருந்து தாங்கள் வந்த வாகனத்தில் தப்பி சென்று விட்டனர். உயிருக்கு போராடிய வெங்கட்டராமுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கட்டராமு பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து வெள்ளவேடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    கொலையுண்ட வெங்கட்ட ராமுவின் அண்ண னான முன்னாள் ஊராட்சி தலைவர் தங்கராஜ் கடந்த 2016-ம் ஆண்டு வெட்டிகொலை செய்யப்பட்டார்.

    இது தொடர்பாக சிலருடன் வெங்கட்டராமுவுக்கு தகராறு இருந்தது. எனவே இந்த மோதலில் கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இது தொடர்பாக தங்கராஜ் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் விவரத்தை சேகரித்து வருகின்றனர். மேலும் தொழில் ரீதியாக வெங்கட்டராமுவுக்கு வேறு யாருடனும் மோதல் உள்ளதா? என்பதையும் விசாரித்து வருகிறார்கள்.

    இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர். வீட்டுக்குள் புகுந்து செங்கல் சூளை அதிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    ஈரோடு அருகே செங்கல் சூளை அதிபரிடம் ரூ.5 லட்சம் பறித்த சென்றவர்களில் ஒருவன் பிடிபட்டான். 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது 60). செங்கல் சூளை நடத்தி வருகிறார்.

    கரூரில் உள்ள இவரது உறவினர் மூலம் ரூ.5 லட்சம் கடன் வாங்கி கொண்டு பணத்தை பையில் வைத்தப்படி ஈரோட்டுக்கு பஸ்சில் வந்தார்.

    பிறகு இவர் ஈரோடு காளைமாடு சிலை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஒருவன் அவரிடம், “உங்கள் பணம் கீழே விழுந்து கிடக்கிறது” என்றான்.

    உடனே அவரும் குனிந்து பார்த்த போது அங்கு நின்று கொண்டிருந்த 2 பேர் மாதேஸ்வரன் கையில் வைத்திருந்த ரூ.5 லட்சத்துடன் உள்ள பணப்பையை பறித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் “திருடன்.. திருடன்” என்று கூக்குரலிட்டார். பிறகு அவரும் அக்கம்-பக்கத்தினரும் தப்பி ஓடியவர்களை பிடிக்க விரட்டினர்.

    இதில் ஒருவனை பொதுமக்கள் பிடித்தனர். மற்ற 2 பேரும் தப்பி ஓடி விட்டனர். இது குறித்து சூரம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது.

    பிடிபட்ட ஆசாமியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவனது பெயர் குமார் என்றும் ஈரோடு மரப்பாலம் பகுதியை சேர்ந்தவன் என்றும் தெரியவந்தது.

    அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் போலீசார் மேலும் தப்பி ஓடிய 2 கொள்ளையர்களையும் தேடி வருகிறார்கள்.
    ×