என் மலர்
நீங்கள் தேடியது "Building"
- ரூ.10.93 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு விழா.
- அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்
பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒன்றியம் இலுப்பக்கோரை ஊராட்சியில் ரூ.10.93 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். அரசு தலைமை கொறடா கோவி.செழியன், கல்யாணசுந்தரம் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கலந்துகொண்டு திறந்து வைத்தார்.
இதில் துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ., கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமா, மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, துணை தலைவர் முத்துச்செல்வன், மாவட்ட கவுன்சிலர் தாமரைச்செல்வன், பாபநாசம் வட்டாட்சியர் பூங்கொடி, பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், ஆனந்தராஜ், வட்டார ஊட்டச்சத்து அலுவலர் லதா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்ரமணியன், ஒன்றிய பொறியாளர் சுவாமிநாதன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் இலுப்பக்கோரை ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் நன்றி கூறினார்.
- 6 மாதங்களை கடந்தும் இன்று வரை கட்டிட வேலை முழுவதும் முடிக்கப்படாமல் உள்ளது.
- மாற்றுத்திறனாளிகள் ரேசன் பொருட்கள் வாங்க மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.இவர்களின் நலன் கருதி அம்மா குளத்தங்கரையில் புதிய ரேசன்கடை கட்டிடம் கட்டும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கி நடைபெற்று வருகிறது.
6 மாதங்களைக் கடந்தும் இன்று வரை கட்டிட வேலை முழுவதும் முடிக்கப்படாமல் உள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் வெகு தூரம் சென்று ரேஷன் பொருட்கள் வாங்க வேண்டி உள்ளது.இதனால் முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் ரேஷன் பொருட்கள் வாங்க மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் அங்கிருந்து ரேஷன் பொருட்களை தூக்கி வருவதற்கும் மிகவும் சிரமமாக உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனுக்கள் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு அங்காடி கட்டடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து காத்துள்ளனர்.
- கடந்த இரண்டு ஆண்டுக்கும் மேலாக அங்கேயே தற்காலிகமாக செயல்பட்டு வந்தது.
- ரூ. 30 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.
மெலட்டூர்:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா. மெலட்டூரில் செயல்பட்டு வந்த சரக வேளாண்மை விரிவாக்க மைய அலுவலக கட்டிடம் பழுதடைந்து இடிந்து விழும் நிலை ஏற்பட்டதால் மெலட்டூரில் செயல்பட்டு வந்த வேளாண் விரிவாக்க மைய அலுவலகம் மற்றும் உரகிடங்கு ஆகியவற்றை மெலட்டூரில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அன்னப்பன்பேட்டை பகுதிக்கு மாற்றப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுக்கும் மேலாக அங்கேயே தற்காலிகமாக செயல்பட்டு வந்தது.
அதனால் விவசாயிகள் உரம், விதைகள், என தங்களது அனைத்து தேவைக்கும் அன்னப்பன்பேட்டை செல்ல வேண்டி இருந்தது.
அதனால் பழுதடைந்த வேளாண் விரிவாக்க மைய கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
விவசாயிகளின் கோரிக்கையை அரசு ஏற்று மெலட்டூரில் பழுதடைந்த வேளாண் விரிவாக்க மைய கட்டிடத்தை இடித்துவிட்டு சுமார் 30 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.
கட்டுமான பணிகள் முடிந்து பல மாதங்களாகியும் புதிய கட்டிடம் இன்னும் திறக்கப்படாமல் பூட்டிய நிலையில் பயனற்று கிடக்கிறது.
மெலட்டூரில் புதியதாக கட்டப்பட்டுள்ள வேளாண்மை விரிவாக்க மைய புதிய கட்டிடத்தை அரசு உடனடியாக திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
- ரூ.24.15 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறையுடன் கூடிய புதிய பள்ளி கட்டிடம்.
- ரூ.13.37 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டிடம்.
பாபநாசம்:
பாபநாசம் ஊராட்சி ஒன்றிய குழு சாதாரண கூட்டம் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய ஆணையர் சிவக்குமார், கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்த்ராஜ், மாவட்ட கவுன்சிலர் தாமரை செல்வன், ஒன்றிய குழு துணை தலைவர் தியாக பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பாபநாசம் ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டு தங்கள் ஊராட்சி பகுதிகளில் நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்கள்.
கூட்டத்தில் பாபநாசம் ஒன்றியத்தில் சக்கராப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு இரண்டு வகுப்பறையுடன் கூடிய புதிய பள்ளி கட்டிடம் ரூ.24.15 லட்சம் மதிப்பீட்டிலும், தியாகசமுத்திரம் ஊராட்சியில் உள்ள புள்ளபூதங்குடி கிராமத்தில் அங்கன்வாடி மையம் கட்டிடம் ரூ.13.37 லட்சம் மதிப்பீட்டிலும், உள்பட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
- ஒட்டநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டப்பட்டுள்ள செவிலியர்கள் குடியிருப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
- தமிழக அரசு பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது சண்முகையா எம்.எல்.ஏ. பேசினார்.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் தாலுகா ஒட்டநத்தம் அரசு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.25 லட்சம் செலவில் செவிலியர்கள் குடியிருப்பு, தருவைகுளம், மருதன்வாழ்வு ஆகிய கிராமங்களில் தலா ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலைய கட்டிடங்கள் என மொத்தம் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டது. திருச்சியில் நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து ஒட்டநத்தம் ஆரம்ப சுகாதார நிலைய நடந்த விழாவில் சண்முகையா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய செவிலியர் குடியிருப்பு கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினர். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழக அரசு பெண் களுக்காக பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மேலும் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாக தெரிவித்தால் கூட கோரிக்கைகளை நிறைவேற்றி தருவேன் என்றார். விழாவில் யூனியன் தலைவர் ரமேஷ், வட்டார மருத்துவ அலுவலர் தங்கமணி, பொதுப் பணித்துறை உதவி பொறியாளர் அன்புராஜ், ஒட்டநத்தம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் நியாஸ், சித்த மருத்துவர் ஸ்ரீதேவி, பஞ்சாயத்து தலைவர்கள் அருண்குமார், சரிதா, ஊரக வளர்ச்சித் துறை பயிற்றுநர் அதிசயமணி, சுகாதார ஆய்வாளர் காளிமுத்து உட்பட மருத்துவ ஊழியர்கள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- தாட்கோ கட்டிடம் பழுதடைந்து கடந்த 2014 முதல் செயல்படாமல் உள்ளது.
- கட்டடங்கள் பழுதடைந்து எந்த நேரமும் இடிந்து விழ காத்திருக்கின்றன.
பல்லடம்:
பல்லடம் பஸ் நிலையத்தில் சுமார் 30 வருடங்களுக்கு முன்பு தாட்கோ மூலம் ஆதி திராவிட மக்கள் பயன்பெறும் வகையில் 10 கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. இந்தநிலையில் அந்தக் கட்டிடம் பழுதடைந்ததால் கடந்த 2014 முதல் அந்த கட்டடத்தில் கடைகள் செயல்படவில்லை.காலியாக உள்ளது.இந்த நிலையில் இந்த பழுதடைந்த கட்டடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்டுமாறும், அல்லது பல்லடம் நகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என பலமுறை தாட்கோ நிர்வாகத்திற்கு நகராட்சி தரப்பில் அறிவுறுத்தப்பட்டும் இன்னும் அவர்கள் ஒப்படைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்தநிலையில் கட்டடங்கள் பழுதடைந்து எந்த நேரமும் இடிந்து விழ காத்திருக்கின்றன. ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பல்லடம் பஸ் நிலையத்தில், உள்ள சுகாதார வளாகம சுவர் விழுந்து ஒருவர் பலியான சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், அந்த கட்டடத்தின் முன்பு நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் இரும்புத் தகடுகளிலான தடுப்பு வைத்து மறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
தாட்கோ கட்டிடம் பழுதடைந்து கடந்த 2014 முதல் செயல்படாமல் உள்ளது. எந்த நேரமும் இடிந்து விழலாம் என்பதால் இதனை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டி தாட்கோ நிர்வாகத்திற்கு பலமுறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பஸ் நிலையத்தில் இடப்பற்றாக்குறை உள்ளதால் நகராட்சிக்கு அந்த இடத்தை ஒப்படைத்தால் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் நிலையம், சுகாதார வளாகம் போன்றவை அமைக்க இடம் தேவைப்படுகிறது என பலமுறை தாட்கோ நிறுவனத்திற்கு கடிதங்கள் வாயிலாகவும், நேரிடையாகவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விரைவில் அமைச்சர், மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோரிடம் இதுகுறித்து மீண்டும் வலியுறுத்தி கட்டடத்தை இடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- திருமருகல் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் குறை தீர்ப்பு முகாமை நடத்தினார்.
- பழுதடைந்த நிலையில் உள்ள அங்கன்வாடி மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாகப்பட்டினம்:
நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ், திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட வாழ்குடி, கங்களாஞ்சேரி, ராராந்திமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் குறை தீர்ப்பு முகாமை நடத்தி, பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
அப்போது, வாழ்குடி மற்றும் ராராந்திமங்கலம் ஊராட்சிகளில் பழுதடைந்த நிலையில் உள்ள அங்கன்வாடி மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து விரைவில் அந்த அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டடம் கட்டப்படும் என்று உறுதியளித்தார்.
ஆய்வின் போது, திமுக ஒன்றிய செயலாளர் ஆர்.டி.எஸ்.சரவணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், விசிக மாவட்டப் பொறுப்பாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- அங்கன்வாடி கட்டிடம் கட்டித் தர வேண்டும்.
- நடுநிலைப்பள்ளி கட்டிடம் கட்டித்தரவேண்டும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அருகே மணக்குடி ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் வீரமணி தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி துறை இணை இயக்குநர் சிலேகா முன்னிலை வகித்தார்.
துணைத் தலைவர் காளிதாஸ் அனைவரையும் வரவேற்றார். கிராம சபை கூட்டத்தில் மணக்குடி ஊராட்சிக்கு சாலை வசதிகளை செய்து தருமாறும், அங்கன்வாடி கட்டிடம் கட்டித் தரக் கோரியும், நடுநிலைப்பள்ளி கட்டிடம் கட்டித் தரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொது மக்கள் வலியுறுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை வட்டார வளர்ச்சி அலுவலர் மஞ்சுளா, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் குமாரராஜா, மகளிர் சுய குழு அலுவலர்கள், பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமான கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் ஊராட்சி செயலர் உமாபதி நன்றி கூறினார்.
- ரூ.5 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழலகம் கட்டிடம்.
- 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி.
நாகப்பட்டினம்:
திருமருகல் ஒன்றியம், திருக்கண்ணபுரம் ஊராட்சி மற்றும் காரையூர் ஊராட்சியில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பயணிகள் நிழலகங்களை முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
அதுபோல் உத்தமசோழபுரம் ஊராட்சி, பூதங்குடி மற்றும் திட்டச்சேரி பேரூராட்சி, மரைக்கான்சாவடி பகுதியில் தலா ரூ.12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளையும் திறந்து வைத்தார்.
இதில், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கவுதமன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் சரவணன், திட்டச்சேரி சுல்தான், ஊராட்சி மற்றும் பேரூராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்டப் பொறுப்பாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர் காசிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- தொண்டி அருகே அரசுப்பள்ளியில் கூடுதல் கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
- யூனியன் சேர்மன் முகமது முக்தார், ஒன்றிய செயலாளர் சரவணன், கவுன்சிலர் கணேசன் முன்னிலை வகித்தனர்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பஞ்சாயத்து யூனியனுக்குட்பட்ட தினையத்தூர் கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக்கான அடிக்கல் நாட்டு விழா திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ. கரு.மாணிக்கம் தலைமையில் நடந்தது.
யூனியன் சேர்மன் முகமது முக்தார், ஒன்றிய செயலாளர் சரவணன், கவுன்சிலர் கணேசன் முன்னிலை வகித்தனர். பஞ்சாயத்து தலைவர் சிங்கத்துரை வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர் புல்லாணி, வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
- ராமசாமி நிலைதடுமாறி கட்டிடத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
- இது குறித்து பு.புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டி கே.வி.கே. தெருவை சேர்ந்தவர் ராமசாமி (62). கட்டிட தொழிலாளி. இவர் அந்த பகுதியில் கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார்.
அப்போது அவர் நிலைதடுமாறி கட்டிடத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும் அவரது மனைவி நாகமணி சம்பவ இடத்து வந்தார்.
இதை தொடர்ந்து அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ராமசாமியை மீட்டு ஆம்புலன்சு மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து பு.புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இரண்டு ஆண்டு களாக இடிந்து விழும் நிலையில் உள்ளது.
- கிராம நிர்வாக அலுவலர் கட்டத்திற்கு அருகில் அங்கன்வாடிமைய கட்டிடமும் அமைந்துள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறு ஒன்றியம் ஊராட்சியில்துளசிபுரம் ஊராட்சிஉள்ள கிராம நிர்வாக அலுவலககட்டிடம் கடந்த 2004 கட்டபட்டது.
தற்போது இரண்டு ஆண்டு களாக இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இடிந்து விழும் நிலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்கு நாள்தோறும் பொதுமக்கள் பல்வேறு சான்றுகள் வாங்க வந்து செல்கின்றனர்.
மோசமான நிலையில் உள்ள இந்த கிராம நிர்வாக அலுவலர் கட்டத்திற்கு அருகில் அங்கன்வாடிமைய கட்டிடமும் அமைந்துள்ளது குறிப்பிடதக்கது.
எனவே இடிந்து விழும் நிலையில் உள்ள இந்த கிராம நிர்வாக அலுவலகத்தில் இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என இப்பகுதிமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.