என் மலர்
நீங்கள் தேடியது "Building"
- வகுப்பறை கட்டிடம் பழுதடைந்த காரணத்தால் முழுவதுமாக இடிக்கப்பட்டது.
- ரூ. 23 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடங்கள்.
நாகப்பட்டினம்:
திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சி, வவ்வாலடி நடுநிலைப் பள்ளி வகுப்பறை கட்டடம் பழுதடைந்த காரண த்தால் முழுவதுமாக இடிக்க ப்பட்டுவிட்ட நிலையில், போதிய இடவசதி இன்றி பள்ளி இயங்கி வருவதை அறிந்த நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ், அண்மையில் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது, உடனடியாக புதிய கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க ப்படுமென உறுதியளித்தார்.
அதன்படி, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ. 23 லட்சம் மதிப்பீட்டில், இரண்டு வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கு ஷா நவாஸ் எம்.எல்.ஏ அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்வில், திமுக ஒன்றிய செயலாளர் செல்வ செங்குட்டுவன், விசிக மாவட்டப் பொறுப்பாளர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளி ட்டோர் பங்கேற்றனர்.
- ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் கட்டிட டெண்டர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
- கட்டிடங்களை இடிப்ப தற்கு கடந்த 8-ந் தேதி ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவின் பேரில் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பரமசிவன் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு முழுவதும் குழந்தைகள் நேய பள்ளி உட்கட்டமைப்புத் திட்டம் 2022-23-ன் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் மிகவும் பழுதடைந்த ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி கட்டிடங்களை அப்புறப்படுத்தி புதிய பள்ளிக் கட்டிடங்களை கட்டுவதற்கும் கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்களை கட்டுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்ப டையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 77 ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், 78 புதிய பள்ளி கட்டிடங்கள், 18 வகுப்பறைகள் கட்டுவதற்கு மாவட்ட கலெக்டரால் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கோடைகால விடுமுறை முடிந்து ஜுன் முதல் வாரத்தில் பள்ளிகள் மீண்டும் துவங்கும் போது புதிய கட்டிடத்தில் இயங்கும் வகையில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.
திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தில் பழுதடைந்த கட்டிடங்களுக்கு பதிலாக புதிய பள்ளி கட்டிடங்கள் கட்டுவதற்கு நிர்வாக அனுமதி 28.1.2022 அன்று வழங்கப்பட்டது. நல்லிருக்கை மற்றும் கொம்பூதி கிராமங்களில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் உள்ள பழுதடைந்த கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்தவும் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பழுதடைந்த பள்ளிக் கட்டிடங்களை இடிப்பதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்ட பின்னரே பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நல்லிருக்கை மற்றும் கொம்பூதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடங்களை இடிப்ப தற்கு கடந்த 8-ந் தேதி ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
ஆனால் அதற்கு முன்பே இந்தப் பள்ளிகளில் கட்டிடங்கள் இடிக்கப்பட்டுவிட்டது. இதனால் அந்தப் பள்ளி கட்டிடங்களை இடிப்பதற்காக வழங்கிய ஒப்பந்தப்புள்ளி நிறுத்தம் செய்யப்பட்டு, திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் தொடர்புடைய ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
- விளநகர் கிராமத்தில் சொந்த கட்டிடத்தில் ரேஷன் கடை அமைக்க வேண்டும்.
- உறுப்பினர்களின் கோரிக்கைகள் தொடர்பாக உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணை தலைவர் மைனர் பாஸ்கரன், ஒன்றிய ஆணையர் மீனா, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய மேலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார்.
கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாவது:-
ரஜினி:-
கொண்டத்தூர் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை விரைந்து கட்டித்தர வேண்டும். பாகசாலை ஊராட்சி ஆதிதிராவிடர் சுடுகாட்டு சாலையை புதிதாக அமைத்து தர வேண்டும்.
தேவிகா:-
இலுப்பூர் ஊராட்சி வடக்கு தெரு, சிவன் கோயில் தெருவிற்கு தார்சாலை அமைத்து தர வேண்டும்.
முத்துலட்சுமி:-
விளநகர் கிராமத்தில் சொந்த கட்டிடத்தில் ரேஷன் கடை அமைக்க வேண்டும்.
ஜெயந்தி:-
தில்லையாடி ஊராட்சி நாகப்பன் நகரில் அனைத்து தெருவிற்கும் புதிதாக சாலை அமைத்து தர வேண்டும்.
ராணி:-
முடிகண்ட நல்லூர் வண்ணாங்குளத்தில் படித்துறை கட்டித்தர வேண்டும். ராஜா தெரு மற்றும் திருச்சம்பள்ளி முதலியார் தெருவில் தார் சாலை அமைத்து தர வேண்டும். சொந்தக் கட்டிடத்தில் ரேஷன் கடை அமைக்க வேண்டும்.
கிருபாவதி:-
நல்லாடை ஊராட்சி பனங்குடி பஸ் நிறுத்தம் அருகே புதிதாக சாலை அமைத்து தர வேண்டும்.
இதுதொடர்பாக ஒன்றியக்குழு தலைவர் பேசுகையில், தற்போது உறுப்பினர்கள் விடுத்துள்ள கோரிக்கைகள் தொடர்பாக உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
பொறியாளர் முத்துகுமார், அனைத்து துறையை சேர்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- கால்நடை மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.
- ரூ. 47 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
சீர்காழி:
கொள்ளிடம் ஒன்றியம் மாதானத்தில் உள்ள கால்நடை மருத்துவமனை கட்டிடம் சிதிலமடைந்து இருப்பதால் கால்நடை சிகிச்சைக்கு வந்து செல்பவர்கள் அச்சத்துடன்வருவதோடு, பணியாற்றும் மருத்துவர்கள், ஊழியர்களும் பாதுகாப்பின்றி பணியாற்றும் சூழல் நிலவிவந்தது.
இதனையடுத்து கால்நடை மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்டவேண்டும் என கோரிக்கை விடுக்கப்ப ட்டுவந்த நிலையில் அதற்கு அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ.47லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
விழாவிற்கு கால்நடை மருத்துவர் மணிமொழி தலைமை வகித்தார்.பொதுப்பணித்துறை (கட்டிடம்) உதவிசெய ற்பொறி யாளர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் ஜான்டிரோஸ்ட், மாதானம் ஊராட்சி மன்ற தலைவர் காந்திமதிசிவராமன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கென்னடி, திமுக மாவட்ட பிரதிநிதியும், ஒப்பந்ததாரருமான வேட்டங்குடி இளங்கோவன், ஒன்றிய தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீர்காழி எம்.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. பூமிபூஜையில் பங்கேற்று புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து பணிகளை துரிதமாக செய்து விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர அறிவுறுத்தினார்.
- மீதமுள்ள ஒரு கட்டிடம் விரைவில் திறந்து வைக்கப்படும்.
- விரைந்து நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் சிக்கல் ஊராட்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டடத்தை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ. ஆகியோர் திறந்து வைத்தனர்.
பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது,
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 10 நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டடங்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளன.
அதில் நாகை தொகுதியில் மட்டும் 3 கட்டடங்கள் கட்டப்பட்டு அதில் 2 கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள ஒரு கட்டடம் விரைவில் திறந்து வைக்கப்படும் என்று கூறினார்,
ஷா நவாஸ் எம்.எல்.ஏ கூறும்போது, விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் திறந்த வெளியில் தேங்கிக் கிடக்காமல் அவற்றை பாதுகாப்பாக வைக்கவும், விரைந்து நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கு களுக்கு கொண்டு செல்லவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
நிகழ்வில், சிக்கல் ஊராட்சி மன்ற தலைவர் விமலா ராஜா, ஒன்றிய குழு உறுப்பினர் கெளரி ராஜேந்திரன், ஊராட்சி மன்ற து.தலைவர் மற்றும் உறுப்பினர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- ரூ.11.62 லட்சம் திட்ட மதிப்பீட்டில் புதிதாக அங்கன்வாடி மைய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது.
- குழந்தைகளுக்கு வெட்ட வெளியில் உணவு சமைத்து வழங்கப்படுகிறது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த காக்கழனி, வெண்மணி, ஆந்தக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் தலா ரூ.11.62 லட்சம் திட்ட மதிப்பீட்டில் புதிதாக அங்கன்வாடி மைய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது.
ஏற்கனவே இருந்த பழைய கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டதால் அங்கன்வாடி மைய குழந்தைகள் தற்காலிக இடங்களில் பாதுகாப்பற்ற சூழலில் இருக்கும் நிலை இருந்து வந்தது.
இந்த நிலையில் கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.
இதனால் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு வெட்ட வெளியில் உணவு சமைத்து வழங்கப்படுகிறது. மேலும் வெயிலில் குழந்தைகள் அமர்ந்திருக்கும் அவலமும் உள்ளது.
எனவே உடனடியாக அங்கன்வாடி கட்டிடத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ரூ. 75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை பார்வையிட்டார்.
- கழிவுநீர் தடையின்றி தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
திருவாரூர்:
திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரபணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ ஆய்வு மேற்கொண்டார்.பின்னர் மாவட்ட அவர் கூறியதாவது:-
திருவாரூர் மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் இயங்கிவரும் சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தினை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, மருத்துவக்கல்லூரியில் தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் பார்வையாளர்கள், உடன் தங்கும் நபர்கள் தங்குவதற்காக ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் கட்டுப்பட்டுள்ள கட்டட த்தினை பார்வையிட்டார்.
பின்னர், மருத்துவ மனையில் ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மையத்தை ஆய்வு செய்தார்.
மருத்துவக்கல்லூரியில் கழிவுநீர் செல்லும் வடிகா லினை பார்வையிட்டு, கழிவுநீர் தடையின்றி தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு உரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வில் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, திருவாரூர் அரசு மருத்து வக்கல்லூரி முதல்வர் ஜோசப்ராஜ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உடனிருந்தனர்.
- மார்க்கெட் பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார்.
- பழமையான கட்டிடத்தை விதிமுறைகளின்படி இடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
பூதலூர்:
திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில் முடிவடைந்த பஸ் நிலைய பராமரிப்பு பணிகள் மற்றும் ரூ.2.8 கோடி மதிப்பீட்டில் புதிய மார்க்கெட் கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெறுவதை தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ்ஆலிவர் நேரடியாக ஆய்வு செய்தார்.
திருக்காட்டுப்பள்ளி பஸ் நிலையத்தில் நடந்த பணிகளை பார்வையிட்ட கலெக்டர் பின்னர் மார்க்கெட் பகுதியில் நடைபெற்று வரும் பணிகளையும் நேரில் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது கலெக்டர் பஸ்நிலையத்திற்குள் பொதுமக்களுக்கு இடைஞ்சலாக வைக்கப்பட்டுள்ள தற்காலிக கடைகள், மற்றும் அபாயகரமான நிலையில் உள்ள மரங்களை உடனடியாக அப்புறப்படுத்தவேண்டும். பஸ் நிலையத்தில் உள்ள பழமையான ஆபத்தை விளைவிக்க கூடிய நிலையில் உள்ள கட்டிடத்தை விதிமுறைகளின்படி இடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
பஸ் நிலைய மேம்பாட்டு திட்டத்தில் நிதி பெற்று பேரூராட்சிக்கு வருமானம் வரத்தக்க வகையில் நிரந்தர கடைகள் கட்டி வாடகைக்கு விட உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது பேரூராட்சிகள் உதவி இயக்குனர் கனகராஜ், பேரூராட்சி தலைவர் மெய்யழகன், பேரூராட்சி செயல் அலுவலர் நெடுஞ்செழியன் ஆகியோர் உடனிருந்து பணிகள் குறித்து விளக்கம் அளித்தனர்.
- செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ,ஆதிதிராவிடர் நலத்துறைஅமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தொடங்கி வைத்தனர்.
- நகராட்சி பொறியாளர் சண்முகவடிவு மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தாராபுரம்:
தாராபுரம் நகராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி மதிப்பீட்டில் புதிய தினசரி மார்க்கெட் கட்டிடம் கட்டும் பணியினை கலெக்டர் வினீத் தலைமையில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ,ஆதிதிராவிடர் நலத்துறைஅமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தொடங்கி வைத்தனர்.
பின்னர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 62 நபர்களுக்கு 24.80 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா வீட்டுமனைப்பட்டாக்களை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல தலைவர் இல.பத்மநாபன், தாராபுரம் நகர் மன்ற தலைவர் பாப்புகண்ணன், தாராபுரம் ஆணையாளர் ராமர், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் குமரேசன், நகராட்சி பொறியாளர் சண்முகவடிவு மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- நியாய விலை கடை மூலம் சுற்றுவட்டார கிராம மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
- கன்கீரிட் பூச்சுகள் உதிர்ந்து விழுந்து சேதம் அடைந்துள்ளன.
உடுமலை :
உடுமலை அருகே உள்ள கணபதிபாளையம் ஊராட்சி வெனசப்பட்டி கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் கட்டப்பட்ட நியாய விலை கடை மூலம் சுற்றுவட்டார கிராம மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்பொழுது கட்டடத்தில் முக்கிய பகுதிகளான பல்வேறு இடங்களில் கம்பிகள் தெரியும் அளவிற்கு கன்கீரிட் பூச்சுகள் உதிர்ந்து விழுந்து சேதம் அடைந்துள்ளன. கட்டிடத்தின் உட்புறப் பகுதிகளில் மேற்கூரை அதிகளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. மழை பெய்தால் நீர் ஒழுகி உள்ளே வந்து அரிசி உள்ளிட்ட பொருட்கள் வீணாகி விடுகிறது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இடிந்து விழும் நிலை ஏற்படும். உடனடியாக ரேஷன் கடையை சீரமைக்கும் பணி செய்ய வேண்டும்.
புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என கிராம மக்கள் தரப்பில் திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்தும் ஆய்வு.
- புதிதாக கட்டப்பட்டு வரும் மீன் மார்க்கெட் கட்டிடங்களின் கட்டுமான பணிகள் ஆய்வு.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது-
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஊராட்சி ஒன்றியம் இந்தலூர்ஊராட்சி கடையக்குடி கிராமத்தில் பிளவர் பிளாக் சாலை பணி நடைபெற்றுவருவதை குறித்தும் கடையக்குடி கிராமத்தில் உள்ள ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சி அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
பின்னர் ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவ- மாணவியர்களின் கல்வி தரம் குறித்தும், நெடுங்குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ- மாணவி யர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
தொடர்ந்து திருக்காட்டுப்பள்ளி பேரூ ராட்சி பஸ் நிலையத்தில் பேரூராட்சிகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் , புதிதாக கட்டப்பட்டு வரும் மீன் மார்க்கெட் கட்டிடங்களின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்து மேற்கண்ட பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவு றுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) கனகராஜ், திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி செயல் அலுவலர் நெடுஞ்செழியன், பூதலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொற்செல்வி, ராஜா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
- தலா ரூ. 10 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடங்கள் கட்டப்பட்டன.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட டாடா நகர், சேவாபாரதி காமராஜ் நகர், நாகூர் அமிர்தா நகர் ஆகிய பகுதிகளில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தலா ரூ. 10 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடங்கள் கட்டப்பட்டன.
அங்கன்வாடி மையத்தின் புதிய கட்டிடங்களை, கலெக்டர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர்கெளதமன் ஆகியோர் முன்னிலையில், முகம்மது ஷாநவாஸ் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.
தொடர்ந்து அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில், நாகை நகர்மன்றத் தலைவர் மாரிமுத்து, துணைத் தலைவர்செந்தில் குமார், நகராட்சி ஆணையர்ஸ்ரீதேவி, நகர்மன்ற உறுப்பினர்கள் ஞானமணி, கமலநாதன், தியாகராஜன் மற்றும் நகராட்சி செயற்பொறியாளர் ஆகியோர் பங்கேற்றனர்.