என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "bus conductor"
- பேருந்து நடத்துனரின் துரிதத்தால் பயணி ஒருவரின் உயிர் காப்பாற்றப்பட்ட சம்பவம் கேரளாவில் மீண்டும் நடந்துள்ளது.
- வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த மாதம் திருச்சூரில் இருந்து கோழிக்கோடுக்கு அரசு பேருந்தில் பயணம் செய்த நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து துரிதமாக செயல்பட்ட அரசு பேருந்து ஓட்டுநர் பேருந்தை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று தாய், சேய் என இரண்டு உயிர்களை காப்பாற்றினார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. வீடியோவை பார்த்த பயனர்கள், துரிதமாக செயல்பட்ட அரசு பேருந்து ஓட்டுநர் பாராட்டினர்.
இந்நிலையில், பேருந்து நடத்துனரின் துரிதத்தால் பயணி ஒருவரின் உயிர் காப்பாற்றப்பட்ட சம்பவம் கேரளாவில் மீண்டும் நடந்துள்ளது. அரசு பேருந்தில் பயணித்த வாலிபரின் உயிரை நொடிப்பொழுதில் காப்பாற்றிய நடத்துனரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
19 வினாடிகள் ஓடும் வீடியோவில், மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் பேருந்தில் பயணிகளுக்கு பயணச்சீட்டை வழங்கும் பணியில் நடத்துனர் ஈடுபட்டுள்ளார். பேருந்து என்னவோ காலியாக உள்ளது. ஆனால் பேருந்தில் ஏறிய வாலிபரோ உள்ளே செல்லாமல் படிக்கட்டுக்கு நேராக பிடிமானம் இல்லாமல் நின்று கொண்டு பயணச்சீட்டை வாங்கிக்கொள்கிறார். அப்போது வேகத்தில் செல்லும் பேருந்தில் இருந்து தவறி விழும் வாலிபரை ஒரு கைகொடுத்து காப்பாற்றுகிறார் நடத்துனர். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் நடத்துனர், வாலிபர் விழுவதை பார்க்காமல் ஒரு கையால் காப்பாற்றுகிறார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Kerala bus conductor with 25th Sense saves a guy from Falling Down from Bus
— Ghar Ke Kalesh (@gharkekalesh) June 7, 2024
pic.twitter.com/HNdijketbQ
- கோயம்பேடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- டிக்கெட் பையில் ரூ.20 ஆயிரம் ரொக்கம் இருந்ததாக தகவல்.
சென்னை கோயம்பேட்டில் இருந்து புதுச்சேரி சென்ற அரசுப் பேருந்தில், நடத்துனரின் டிக்கெட் பை கொள்ளையடிக்கப்பட்டது.
பின்னர், நடத்துனர் அளித்த புகாரின் பேரில் கோயம்பேடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
டிக்கெட் பையில் ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.38 ஆயிரம் மதிப்பிலான டிக்கெட் இருந்ததாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதைதொடர்ந்து, போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
- விருதுநகரில் பஸ் கண்டக்டர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டார்.
- பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் சின்ன தாயம்மன் ரோடு பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல்(வயது52). அரசு பஸ் கண்டக்டராக இருந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக உடல் நல பாதிப்பு இருந்து வந்தது. இதனால் அவர் மன விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் விருதுநகர் பாண்டியன்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் ரோசல்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் முத்துப்பாண்டி(55). இவர் தனது 2 மகள்களின் திருமணத்திற்காக பலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் கடனை திரும்ப செலுத்தமுடியவில்லை. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முத்துப்பாண்டியின் மனைவி லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகில் தனது சைக்கிள் பயணத்தை தொடங்கினார்.
- 110 கிலோமீட்டர் தூரத்தை 11 மணி நேரத்தில் இடைவிடாது பயணம் செய்து உலக சாதனை படைத்தார்.
தாராபுரம்:
தாராபுரத்தில் சர்வதேச சைக்கிள் தினம் மற்றும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் விழாவையொட்டி சாதாரண சைக்கிள் மூலம் இடைவிடாது பயணம் செய்து உலக சாதனை நிகழ்த்திய அரசு போக்குவரத்து கழக நடத்துனர் அறிவழகனுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
மேட்டுப்பாளையம் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றி வருபவர் அறிவழகன். இவர் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகில் தனது சைக்கிள் பயணத்தை தொடங்கினார். புகலூர், அன்னூர், கருமத்தம்பட்டி, காரணம்பேட்டை, பல்லடம், பொங்கலூர், அவிநாசிபாளையம், கொடுவாய், வழியாக தாராபுரம் வந்தடைந்தார். தாராபுரம் வந்தடைந்த கருணாகரனுக்கு நகராட்சி அலுவலக வளாகத்தில் வைத்து நகர் மன்ற தலைவர் பாப்பு கண்ணன் ,நகரச் செயலாளர் முருகானந்தம் ஆகியோர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
சாதாரண சைக்கிள் மூலம் 40 கிலோ எடையை சுமந்து கொண்டு 110 கிலோமீட்டர் தூரத்தை 11 மணி நேரத்தில் இடைவிடாது பயணம் செய்து உலக சாதனை படைத்தார்.அதனைத் தொடர்ந்து நோபல் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றார். அவருக்கு சாதனை படைத்ததற்கான சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
சாதனை படைத்த அறிவழகன் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து விபத்துக்களை தவிர்ப்போம் என்ற கருத்தை வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
- முத்துக்குமார் தனியார் பஸ் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார்.
- ஓட்டலுக்கு சாப்பிட செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு முத்துக்குமார் சென்றுள்ளார்.
நெல்லை:
நெல்லை தச்சநல்லூரை அடுத்த கீழக்கரை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 30). இவருக்கு கவுதமி என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். முத்துக்குமார் தனியார் பஸ் ஒன்றில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு முத்துக்குமார் ஓட்டலுக்கு சாப்பிட செல்வதாக தனது மனைவியிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக நேற்று கவுதமி தச்சநல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரை தேடி வருகின்றனர்.
- பஸ்சை வழிமறித்து செல்லத்துரையை கீழே இழுத்து போட்டு சரமாரியாக தாக்கினர்.
- மாணவியின் பெற்றோர் கேட்டுக் கொண்டதற்கிணங்க வழக்குப்பதிவு செய்யாமல் கண்டக்டரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
பள்ளிப்பாளையம்:
ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியைச் சேர்ந்தவர் செல்லத்துரை (வயது41). இவர் ஈரோட்டில் இருந்து குமாரபாளையத்திற்கு இயக்கப்படும் அரசு பஸ்சில், கண்டக்டராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலை அந்த பஸ் பள்ளிப்பாளையம் வந்ததும், ஒரு மாணவி குமாரபாளையம் கல்லூரிக்கு செல்ல ஏறினார்.
பஸ் புறப்பட்டதும் அவரது காதை பிடித்து செல்லத்துரை திருகியுள்ளார். இதனால், அதிர்ச்சிக்குள்ளான மாணவி தனது உறவினர்களுக்கு செல்போனில் தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து, விரைந்து வந்த உறவினர்கள், ஒட்டமெத்தை பகுதியில் பஸ்சை வழிமறித்து, செல்லத்துரையை கீழே இழுத்து போட்டு சரமாரியாக தாக்கினர்.
இதுகுறித்த தகவலின் பேரில், பள்ளிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்லத்துரையை மீட்டு, போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
அப்போது, மாணவியின் பெற்றோர் கேட்டுக் கொண்டதற்கிணங்க வழக்குப்பதிவு செய்யாமல் கண்டக்டரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- டைமிங் தகராறில் தனியார் பஸ் கண்டக்டரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மேலும் தகாத வார்த்தைகளால் திட்டி கையில் வைத்திருந்த கருங்கல்லாலும், இரும்பு கம்பியாலும் மதன்ராஜை சரமாரியாக தாக்கினர்.
புதுச்சேரி:
டைமிங் தகராறில் தனியார் பஸ் கண்டக்டரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வில்லியனூர் ஜி.என்.பாளையம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் மதன்ராஜ் (வயது29). இவர் தனியார் பஸ்சில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று மாலை இவர் புதுவை பழைய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்சில் பயணிகளை ஏற்றிக்கொண்டு மதகடிப்பட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
அரியூர் அனந்தபுரம் பஸ் நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்தி பயணிகளை இறக்கி கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் பஸ்சை நிறுத்தி கண்டக்டர் மதன்ராஜியிடம் எங்களது பஸ் டைமில் எப்படி நீ பஸ்சில் பயணிகளை ஏற்றி செல்லலாம் என கூறி தகராறு செய்தனர்.
மேலும் தகாத வார்த்தைகளால் திட்டி கையில் வைத்திருந்த கருங்கல்லாலும், இரும்பு கம்பியாலும் மதன்ராஜை சரமாரியாக தாக்கினர். அதோடு இனிமேல் எங்களது பஸ் டைமில் தலையிட்டால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி விட்டு சென்றனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் தாக்குதலில் காயமடைந்த மதன்ராஜை மீட்டு சிகிச்சைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பெற்ற மதன்ராஜ் பின்னர் இதுகுறித்து வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மதன்ராஜை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
- தங்கையை கிண்டல் செய்ததால் ஆத்திரமடைந்த அண்ணன் அரசு பஸ் கண்டக்டரை தாக்கினார்.
- மாட்டுத்தாவணி போலீசார் கைது செய்தனர்.
மதுரை
மதுரையைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 42). இவர் அரசு போக்குவரத்து கழக பொன்மேனி டிப்போ பணிமனையில் கண்டக்ட ராக வேலை பார்த்து வரு கிறார்.
இந்த நிலையில் பால முருகன் ஆரப்பாளையம்- மாட்டுத்தாவணி அரசு பஸ்சில் பணியில் இருந்தார். அப்போது அவர் பஸ்சில் இருந்த ஒரு இளம்பெண்ணை கேலி-கிண்டல் செய்ததாக தெரிகிறது. அந்த பெண் இதுதொடர்பாக தனது சகோதரர் மதன்குமாரிடம் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து அந்த பஸ் மாட்டுத்தாவணி பஸ் நிலையத்துக்கு வந்தது. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கண்டக்டர் பாலமுருகனை சரமாரியாக தாக்கி விட்டு தப்பிச் சென்றனர். மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் கண்டக்டரை 2 பேர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதில் சம்பந்தப்பட்ட 2 பேரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வை யில், அண்ணா நகர் உதவி கமிஷனர் சூரக்குமார் ஆலோசனை பேரில், மாட்டுத்தாவணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், சப்-இன்ஸ்பெக்டர் வெள்ளத்துரை தலைமை யில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி கண்டக்டரை தாக்கிய 2 பேரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர். இதில் அவர்கள் ஆரப்பாளையம் மோகன் மகன் மதன்குமார் (வயது 23), மேல பொன்னகரம் நாகராஜ் மகன் தினேஷ் (23) என்பது தெரிய வந்தது.
பிடிபட்ட மதன்குமார், தனது தங்கையை அரசு பஸ் கண்டக்டர் பாலமுருகன் கிண்டல் செய்ததால் அவரை தனது உறவினர் நாகராஜூடன் வந்து தாக்கியதாக தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பால முருகனை தாக்கிய 2 பேரையும் மாட்டுத்தாவணி போலீசார் கைது செய்தனர்.
- கடலூரில் இருந்து விருத்தாச்சலம் நோக்கி தனியார் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது.
- அன்பரசன், சூர்யா ஆகியோர் தகராறில் ஈடுபட்டவர்களிடம் தட்டி கேட்டனர்.
கடலூர்:
கடலூரில் இருந்து விருத்தாச்சலம் நோக்கி தனியார் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ்சில் பயணம் செய்த 6 பேர் கும்பல் கடுமையாக வாக்குவாதம் செய்து கொண்டனர். இதனால் பஸ் கண்டக்டர்கள் அன்பரசன், சூர்யா ஆகியோர் தகராறில் ஈடுபட்டவர்களிடம் தட்டி கேட்டனர். அப்போது அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க பஸ்சை நிறுத்தினர். அப்போது பஸ்சில் இருந்த கும்பல் திடீரென்று தப்பி ஓடினர்.
மீண்டும் அந்த பஸ் கடலூர் நோக்கி மீனாட்சி பேட்டை என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த கும்பல் பஸ்சை வழிமறித்து டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் நடத்துனர்கள் அன்பரசன் மற்றும் சூர்யாவை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயம் அடைந்த 2 பேரும் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்தில் டிரைவர் தனவேல் கொடுத்த புகாரின் பேரில் வடலூரை சேர்ந்த லோலிசின், ஹரிஷ், அப்பு, வினோத் உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
அரசு போக்குவரத்து கழகத்தின் ஈரோடு மண்டல கரூர் கிளையில் அரசு பஸ் கண்டக்டராக மோகன் குமார் பணியாற்றி வருகிறார். இவரை இன்று காலை ஈரோடு அரசு போக்குவரத்து கழகத்தின் செக்கிங் இன்ஸ்பெக்டர் பிரபு கலையரசன் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனை கண்டித்து ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழக டெப்போ முன்பு இன்று அதிகாலை 5.30 மணி அளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு நிர்வாகி சரவணன் தலைமை வகித்தார்.
தொழிற்சங்கத்தை சேர்ந்த ரவி, சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக இன்று காலை 45 நிமிடங்கள் டெப்போவில் இருந்து அரசு பஸ்கள் ஏதுவும் எடுக்கப்படவில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு தாலுகா போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு பணிக்கு சென்றனர். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்