என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "bushes"
- மின் கட்டணம் செலுத்துவதற்கான கட்டிட பகுதி உள்ளது.
- மின்சார வாரிய அலுவலகத்தின் முன்புறம் வங்கி ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது.
உடுமலை :
உடுமலை திருப்பூர் சாலையில் அமைந்துள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கட்டிட பகுதி உள்ளது. இதன் பின்புறம் புதர் மண்டி காடு போல் காணப்படுகிறது. மேலும் இந்த பகுதியின் முன்புறம் வங்கி ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது .
புதர் நிறைந்த இந்த பகுதிக்கு செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே புதர்பகுதியை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ரெயில்வேயில் பணியாற்றும் பணியாளர்களுக்கான குடியிருப்புகள்.
- இரவு நேரங்களில் பாம்புகள் வந்துவிடுகிறது.
உடுமலை :
திருப்பூர் மாவட்டம் உடுமலை ெரயில்வே குடியிருப்பு பகுதிகளில் ரெயில்வேயில் பணியாற்றும் பணியாளர்களுக்கான குடியிருப்புகள் பராமரிப்பு இன்றி புதர் மண்டி கிடக்கிறது. இப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன .இரவு நேரங்களில் பாம்புகள் வந்துவிடுகிறது.
இதனால் நடந்து செல்லும் பொதுமக்கள் அவதிப்படுகின்றார்கள். எனவே இங்குள்ள புதர்களை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே சிறுநாகலூர் கிராமம் உள்ளது. தியாகதுருகத்தில் இருந்து சுமார் 12 கி.மீ தூரத்தில் சிறுநாகலூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு செல்லும் தார் சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வனப்பகுதி உள்ளது. இந்த பகுதியில் சாலையின் இருபுறமும் முள்புதர்கள் மண்டியும், சாலையோரம் பள்ளமாகவும் காணப்படுகின்றன. இதனால் இந்த வழியாக செல்லும் பொறையூர், சிறுநாகலூர், கொட்டையூர், நின்னையூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த வாகன ஓட்டிகள் இந்த சாலையில் செல்லும் போது ஒதுங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் அவ்வப்போது விபத்து ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து சாலையோர முட்புதர்களை உடனடியாக அகற்றவும், சாலையோர பள்ளங்களை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- பயணிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது .
- புதர்களை அகற்றி பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை :
உடுமலையை அடுத்த மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பாண்டியன் கரடு, மயிலாடும்பாறை உள்ளிட்ட மழைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்களின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படாததால் அவதிப்பட்டு வரும் நிலையே உள்ளது. இந்த பகுதிகளுக்கு மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகளே இயக்கப்பட்டு வருகின்றன.
இங்கு வசிக்கும் மக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு அருகில் உள்ள தேவனூர், புதூர், பொள்ளாச்சி மற்றும் உடுமலை பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் இங்கு உள்ள மயிலாடும்பாறை கருப்பராயன் கோவில் பேருந்து நிறுத்தம் பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டி கிடப்பதால் பயணிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது .இங்குள்ள பஸ் நிறுத்தத்தை சுற்றிலும் முள் புதர்கள் மற்றும் களைச் செடிகள் அதிக அளவில் முளைத்துள்ளது. இதனால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டம் உள்ளதால் இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தவே மக்கள் தயங்கும் நிலை உள்ளது. அத்துடன் பஸ் நிறுத்தத்தின் ஜன்னல்கள் உள்ளிட்டவை சேதமடைந்து கிடப்பதால் இரவு நேரங்களில் இந்தப் பகுதியில் தெருவிளக்கு வெளிச்சம் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே பஸ் நிறுத்தத்தை சீரமைக்கவும் புதர்களை அகற்றி பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- ஆலாம்பாளையத்தில் 76 ஏக்கர் பரப்பில், பூசாரிநாயக்கன் குளம் அமைந்துள்ளது.
- தண்ணீர் வெளியேற்றப்படும் ஷட்டர், உபரி நீர் வெளியேறும் பகுதி மற்றும் கரையிலுள்ள மரங்கள், திறந்தவெளி பாராக குடிமகன்களால் பயன்படுத்தப்படுகிறது.
உடுமலை :
உடுமலை அருகே ஆலாம்பாளையத்தில் 76 ஏக்கர் பரப்பில், பூசாரிநாயக்கன் குளம் அமைந்துள்ளது.சுற்றுப்பகுதி கிராமங்களிலுள்ள மழை நீர் ஓடைகள் வாயிலாக இக்குளத்துக்கு நீர்வரத்து கிடைத்து வந்தது.பருவமழை பொழிவு குறைவு உள்ளிட்ட காரணங்களால் ஆண்டில் பல மாதங்கள் தண்ணீரின்றி குளம் வறண்டு காணப்படும். சுற்றுப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தென்னை சாகுபடியும் பாதிக்கும் சூழ்நிலை இருந்தது.
இந்நிலையில், திருமூர்த்தி அணை கட்டப்படும் முன்னர், பாலாற்றின் வாயிலாக பூசாரிநாயக்கன்குளத்துக்கு நீர்வரத்து கிடைத்தது. அதன் அடிப்படையில் பி.ஏ.பி., துணை அமைப்பாக குளத்தை சேர்த்து தண்ணீர் வழங்க விவசாயிகள் வலியுறுத்தினர்.நீண்ட கால போராட்டத்துக்குப்பிறகு கடந்த 2012 முதல் பி.ஏ.பி., கால்வாய் வழியாக குளத்துக்கு தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது.
தற்போது மண்டல பாசன காலத்தில், அரசாணை அடிப்படையில் பூசாரிநாயக்கன்குளத்துக்கு, பி.ஏ.பி., கால்வாயில் இருந்து தண்ணீர் வழங்கப்படுகிறது. இதையடுத்து சுற்றுப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.இந்நிலையில் தற்போது குளத்தின் கரை, புதர் மண்டி வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது. மேலும் தண்ணீர் வெளியேற்றப்படும் ஷட்டர், உபரி நீர் வெளியேறும் பகுதி மற்றும் கரையிலுள்ள மரங்கள், திறந்தவெளி பாராக குடிமகன்களால் பயன்படுத்தப்படுகிறது.
அப்பகுதி முழுவதும் நூற்றுக்கணக்கான காலி மதுபாட்டில்கள் கரையிலும், குளத்து நீரிலும் வீசப்பட்டுள்ளது. மேலும் இறைச்சி கழிவுகளையும், மூட்டையாக கட்டி தண்ணீரில் வீசுவதும் அதிகரித்துள்ளது.இதனால் குளத்து நீர் மாசடைவதுடன் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளும் பாதிக்கப்பட்டு வருகிறது.பொதுப்பணித்துறையினர் இது குறித்து ஆய்வு செய்து, குளத்தின் கரையில் புதர்களை அகற்ற வேண்டும். குளத்து நீர் மாசடைவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்