என் மலர்
நீங்கள் தேடியது "calf"
- கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா அவனி கிராமத்தை சேர்ந்தவர் எல்லப்பா
- கன்றுக்குட்டியை பரிசோதனை மருத்துவர் குட்டி நல்ல வளர்ச்சியுடன் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்தார்.
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா அவனி கிராமத்தை சேர்ந்தவர் எல்லப்பா. விவசாயியான இவருக்கு சொந்தமான பசுமாடு நேற்று கன்றுக்குட்டி ஒன்றை ஈன்றது.
அந்த கன்றுக்குட்டி இரண்டு தலைகள், நான்கு கண்களுடன் பிறந்துள்ளது. இதனால் ஆச்சர்யம் அடைந்த எல்லப்பா கால்நடை மருத்துவரை அழைத்தார்.
கன்றுக்குட்டியை பரிசோதனை மருத்துவர் குட்டி நல்ல வளர்ச்சியுடன் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்தார். இந்த கன்றுக்குட்டியைப் பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக எல்லப்பா வீட்டுக்கு படையெயடுத்து வருகிறது.
- கோவை- பொள்ளாச்சி மெயின் ரோட்டில் வழக்கம் போல் சாலையின் இரு புறங்களிலும் வாகனங்கள் அதிவேகமாக சென்று கொண்டிருந்தன.
- கூட்டத்தில் இருந்த கன்று குட்டி ஒன்று சாலையை கடக்க முடியாமல் வெகுநேரமாக அங்கேயே நின்று கொண்டிருந்தது.
குனியமுத்தூர்,
கோவையின் பிரதான சாலைகள் அனைத்திலும் கால்நடைகளும், ஆடுகளும், குதிரைகளும் ஆங்காங்கே சுற்றி வருவதை நாம் அன்றாடம் காண முடிகிறது.
இன்று காலை கோவை- பொள்ளாச்சி மெயின் ரோட்டில் வழக்கம் போல் சாலையின் இரு புறங்களிலும் வாகனங்கள் அதிவேகமாக சென்று கொண்டிருந்தன.
அந்த சமயம் சுந்தராபுரம் பகுதியில் நடுரோட்டில் கால்நடைகள் கூட்டமாக வந்தன. அப்போது அந்த கூட்டத்தில் இருந்த கன்று குட்டி ஒன்று சாலையை கடக்க முடியாமல் வெகுநேரமாக அங்கேயே நின்று கொண்டிருந்தது. வாகன போக்குவரத்து காரணமாக கன்று குட்டி எங்கு செல்வது என்று தெரியமால் தவித்தது.
சாலையின் வலது புறத்தில் கன்று குட்டியுடன் வந்த கால்நடைகள் கூட்டம் கன்றுகுட்டி வந்து விடும் என காத்திருந்தன. ரோட்டில் வேக வேகமாக சென்று கொண்டிருக்கும் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் இதனை கண்டு கொள்ளவில்லை. 1 மணி நேரத்திற்கும் மேலாக கன்று குட்டி சாலையை கடக்க முடியாமல் அங்கேயே நின்றது.
இதனை அந்த வழியாக வந்த சில சமூக ஆர்வலர்கள் பார்த்தனர். உடனடியாக போக்குவரத்தை 1 நிமிடம் நிறுத்தி, அந்தக் கன்று குட்டியை மீட்டு சாலையோரத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் அந்த கன்று குட்டி, தனது தாயுடன் இணைந்து நடந்து சென்றது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ஆடு மாடுகளை வளர்ப்பவர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். வீட்டில் கட்டி வைத்திருந்தால் இரை போட வேண்டும் என்ற காரணத்திற்காக பெரும்பாலும் ஒரு சிலர் மாடுகளை அவிழ்த்து வெளியே விட்டு விடுகின்றனர். இது மிகவும் கண்டிக்கக் கூடியதாகும். கோவை மாநகராட்சி இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியாவது கோவை மாநகராட்சி இதில் கவனம் கொண்டு செயல்பட்டால், நன்றாக இருக்கும். என்றனர்.
- மாடு விருத்தி அடைந்ததால் இம்மாட்டிற்கு உம்பளச்சேரி மாடு வகையினம் என பெயர்.
- சதுப்பு நிலங்களில் தொடர்ந்து 6 மணி நேரம் அயராது உழவு செய்யும் திறன் படைத்தது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஒன்றியம் துளசாபுரம் ஊராட்சியில், கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், உள்நாட்டு இன கால்நடைகளை பாதுகாத்தல், இனவிருத்தி விழிப்புணர்வு மற்றும் கண்காட்சி முகாமை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்து பேசியதாவது:-
தலைஞாயிறு ஒன்றியம் உம்பளச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உப்பளப் புல் என்ற ஒரு வகை புல் பிரசித்தி பெற்றது.
இப்புற்களில் உப்புச் சத்து அதிகமாக இருக்கும். இந்த புல் வகையை மேய்ந்து உம்பளச்சேரி மாடு விருத்தி அடைந்ததால் இம் மாட்டிற்கு உம்பளச்சேரி மாடு வகையினம் என பெயர் வந்தது.
இம்மாட்டினங்கள் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பரவலாக காணப்படுகிறது.
உம்பளச்சேரி எருதுகள் சேர் நிறைந்த சதுப்பு நிலங்களில் தொடர்ந்து 6 மணி நேரம் அயராது உழவு செய்யும் திறன் படைத்தது.
கடுமையான மழை, வெயிலை தாங்கக் கூடிய நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மாடு இனமாகும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த உம்பளச்சேரி மாடுகளை பார்வையிட்டார். பின்னர் சிறப்பாக மாடு, கன்றுகளை பராமரித்து வரும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குனர் டாக்டர்சஞ்சீவ் ராஜ், உதவி இயக்குனர் மருத்துவர் ஹசன் இப்ராஹிம், மருத்துவர் விஜயகுமார், தலைஞாயிறு ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி, தலைஞாயிறு ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாசலம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
- விநோதமாக நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்கள் கன்றுக்குட்டிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
- பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு பிரியாணி விருந்து பரிமாறினர்.
வேலூர்:
வேலூர் அருகே உள்ள பென்னாத்தூர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் மகன்கள் உதயகுமார் (வயது 25), சூரியா (20) விவசாயி. இவர்கள் தனது வீட்டில் மாடுகளை வளர்த்து வருகிறார்.
இதில் ஜூனியர் வேலூர் பைபாஸ் என்னும் அழைக்கப்படும் ஒரு வயதான கன்றுக்குட்டியை வளர்த்து வருகின்றனர். இந்தகுட்டிக்கு நேற்று பிறந்தநாள்.
இதனை வெகுவிமரிசையாக கொண்டாட உதயகுமார், சூர்யா இருவரும் முடிவு செய்தனர்.
இதற்காக உறவினர்கள், தெரிந்தவர்களை பிறந்தநாள் விழாவுக்கு அழைத்தனர். வீட்டில் பிரமாண்டமாக அலங்காரம் செய்தனர். மேலும் கன்று குட்டியை குளிப்பாட்டி அலங்காரம் செய்து அழைத்து வந்தனர்.
உறவினர்கள் ஊர் பொதுமக்கள் எல்லோரும் நேற்று இவர்கள் வீட்டுக்கு வர இந்த மாட்டின் பிறந்தநாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி விருந்து வைத்து கொண்டாடினர். விநோதமாக நடந்த இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்கள் கலந்து கொண்டு, கன்றுக்குட்டிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு பிரியாணி விருந்து பரிமாறினர். கிராமங்களில் பொதுவாக பிறந்தநாளை கொண்டாடுவது இல்லை. கோவில்களுக்கு சென்று சாமி கும்பிடுவதோடு சரி. ஆனால், அதே கிராமத்தில் ஒரு கன்றுகுட்டிக்கு இப்படி பிரம்மாண்டமாக பிறந்தநாள் விழா எடுத்ததை ஊரே நெகிழ்ச்சியுடன் பார்த்தது. அவர்கள் வீட்டுக்குச் சென்று மனதார வாழ்த்தி சென்றனர்.
- பழனி சொந்தமாக மாடுகள் வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார்.
- சம்பவத்தன்று பழனி ஊருக்கு அருகே உள்ள இலந்தோப்பு பகுதியில் ஒரு தோட்டத்தில் தனது 2 மாடுகள் மற்றும் 1 கன்று குட்டியை கட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.
நெல்லை:
நாங்குநேரி அருகே உள்ள நம்பிநகர் பெருமாள்கோவில் தெருவை சேர்ந்தவர் பழனி(வயது 52). இவர் சொந்தமாக மாடுகள் வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார்.
சம்பவத்தன்று பழனி ஊருக்கு அருகே உள்ள இலந்தோப்பு பகுதியில் ஒரு தோட்டத்தில் தனது 2 மாடுகள் மற்றும் 1 கன்று குட்டியை கட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். மாலையில் அங்கு சென்று பார்த்தபோது அவரது பசுமாடுகள் மற்றும் கன்று குட்டியை காணவில்லை.
இதுதொடர்பாக அவர் நாங்குநேரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.75 ஆயிரம் மதிப்பிலான பசுமாடுகளை திருடிச்சென்ற மர்மநபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மணிமேகலை என்பவருக்கு சொந்தமான கன்று குட்டி முருகேசன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் தவறி விழுந்தது
- சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கன்று குட்டியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி:
சின்னசேலம் காந்தி நகர் பகுதியை சேர்ந்த மணிமேகலை என்பவருக்கு சொந்தமான கன்று குட்டி முருகேசன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் தவறி விழுந்தது. பின்னர் இது பற்றி சின்னசேலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கன்று குட்டியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்பொழுது அஜித் என்ற தீயணைப்பு வீரர் கிணற்றில் கயிறு கட்டி இறக்கினர்.அப்பொழுது 2 பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பிறகு 2 பாம்பை உயிருடன் பிடித்து சாக்கு பையில் போட்டு பாதுகாப்பாக கட்டினர்.பிறகு கிணற்றுக்குள் இறங்கி கன்று குட்டியை உயிருடன் மீட்டனர். இந்த மீட்பு போராட்டத்தில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக போராடி கன்றுகுட்டியை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்களை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர். சாக்கு பையில் இருந்த பாம்பை வனப்பகுதியில் விட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- பொதுமக்கள் ஊதியூர் பகுதிக்கு செல்லவே அச்சம் அடைந்தனர்.
- சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிப்பு டிரோன் பயன்படுத்தப்பட்டது.
காங்கயம் :
காங்கயம் அருகே ஊதியூர் வனப்பகுதியில் கடந்த சில மாதத்திற்கு முன்பு வந்த சிறுத்தை ஒன்று அங்கு பதுங்கிக்கொண்டது. பின்னர் அந்த பகுதியில் தோட்டங்களில் புகுந்து ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வந்தது. இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் ஊதியூர் பகுதிக்கு செல்லவே அச்சம் அடைந்தனர். இதையடுத்து சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது. ஆனால் கூண்டுக்குள் சிறுத்தை சிக்கவில்லை. எனவே சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிப்பு டிரோன் பயன்படுத்தப்பட்டது. ஆனாலும் சிறுத்தை எந்த இடத்தில் இருக்கிறது என யாருக்கும் தெரியவில்லை.
காங்கயம் வனத்துறையினர் ஊதியூர் மலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக எச்சரிக்கை பதாகைகள் பல்வேறு இடங்களில் வைத்து சிறுத்தையை கண்காணித்து வந்தனர். மேலும் வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்கள், கூண்டுகள்,டிரோன் கேமராக்கள் உள்ளிட்டவைகளை வைத்தும் தீவிரமாக தேடி வந்தனர்.ஆனால் சிறுத்தை கூண்டுகளில் சிக்காமல் இதுவரை வனத்துறையினருக்கு போக்கு காட்டி வருகிறது.
இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மலையடிவார பகுதியில் ஒரு தோட்டத்தில் புகுந்த சிறுத்தை அங்கிருந்த கன்று குட்டியை கவ்வி செல்ல முயற்சி செய்தது. கன்றுக்குட்டியின் அலறல் சத்தம் கேட்ட பெரிய மாடுகள் ஒன்று சேர்ந்து சிறுத்தையை துரத்தியது. இதில் பயந்து போன சிறுத்தை கன்றுக்குட்டியை விட்டு விட்டு வனத்துக்குள் ஓடியது. பின்னர் காயங்களுடன் இருந்த கன்றுக்குட்டியை அதன் உரிமையாளர் மீட்டு, கால்நடை டாக்டர் வரவழைக்கபபட்டு காயங்களுக்கு மருந்துகள் போட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஊதியூர் மலையடிவார பகுதியில் மீண்டும் சிறுத்தை கன்று குட்டியை தூக்கி செல்ல முயன்ற சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
- ஆலங்குடி கே.ராசியமங்கலத்தில் கிணற்றில் விழுந்த கன்றுகுட்டி தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டது
- சுமார் 60 அடி ஆழமுள்ள வறண்ட கிணற்றில் கன்றுக்குட்டி தவறி விழுந்து விட்டது.
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கே.ராசியமங்கலத்தை சேர்ந்த பெரியநாயகி என்பவருக்கு சொந்தமான மாடுகள் மேய்ச்சலுக்கு சென்றிருந்தன. மேய்ச்சலின் போது அப்பகுதியில் உள்ள, ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமாக சுமார் 60 அடி ஆழமுள்ள வறண்ட கிணற்றில், பெரியநாயகிக்கு சொந்தமான கன்றுக்குட்டி தவறி விழுந்து விட்டது. பொதுமக்கள் மீட்க முயற்சி செய்து பலனளிக்கவில்லை. இதனை தொடர்ந்து ஆலங்குடி தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் கயிற்றின் மூலம் கிணற்றில் இறங்கி, கன்று குட்டியை உயிருடன் மீட்டனர்.
- நிசார் முகமது வளர்த்து வந்த பசுமாடு ஒன்று பிரசவித்திருந்தது.
- கிடாரி, காளை என 2 கன்றுகளை ஈன்றது.
கபிஸ்தலம்:
பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அம்மா பள்ளி தைக்கால் பகுதியில் வசிப்பவர் நிசார் முகமது. வக்கீலாக பணியாற்றி வருகிறார்.
இவர் விவசாயத்திலும், கால்நடை வளர்ப்பிலும் அதீத ஆர்வம் கொண்டவர். இந்நிலையில், இவர் வளர்த்து வந்த பசுமாடு ஒன்று பிரசவித்திருந்தது.
திடீரென, அந்த பசு நேற்று முன்தினம் ஒன்றின்பின் ஒன்றாக கிடாரி, காளை என 2 கன்றுகளை ஈன்றது.
இதனை கண்ட நிசார் முகமது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். மேலும், இதுகுறித்து தகவலறிந்த அக்கம் பக்கத்தினர் பசுவையும், 2 கன்றுகளையும் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.
- சத்தம் கேட்டு ராமசாமி வெளியே வந்து பார்த்தபோது ஒரு கன்றுக்குட்டியை காணவில்லை.
- உடனடியாக வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம் ஊராட்சி சமனா காட்டு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவர் ஆடுகள் மற்றும் மாடுகள் வைத்து விவசாயம் செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று ராமசாமியின் விவசாய தோட்டத்தில் புகுந்து பிறந்து 15 நாட்களே ஆன கன்றுக்குட்டியை கடித்து கொன்று கவ்வி சென்றது. சத்தம் கேட்டு ராமசாமி வெளியே வந்து பார்த்தபோது ஒரு கன்றுக்குட்டியை காணவில்லை.
இதனையடுத்து சிறுத்தையின் கால் தடங்கள் பதிவாகி இருப்பதாகவும், தனது தோட்டத்து வீட்டில் பசு மாட்டுடன் கட்டி வைத்திருந்த நிலையில் கன்றுக்குட்டியை சிறுத்தை கவ்வி இழுத்து சென்ற போது கன்றுக்குட்டியின் அலறல் சத்தம் கேட்டதாகவும் டி.என்.பாளையம் வனத்துறையினரிடம் ராமசாமி தகவல் கொடுத்துள்ளார்.
தகவலின் பேரில் இன்று காலை வனத்துறையினர் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து வனப்பகுதியையொட்டிய விவசாய நிலங்களில் தேடி பார்த்தபோது அருகில் உள்ள சோளக்காட்டில் கன்றுக்குட்டி இறந்து நிலையில் கிடந்ததை கண்டுள்ளனர்.
இந்த பகுதியில் ஏராளமானோர் கால்நடைகளை வளர்த்து வருவதால் பீதி அடைந்து உள்ளனர். உடனடியாக வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
- சங்கராபுரம் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலியானார்.
- சப்-இன்ஸ்பெக்டர் ஜெயமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே பரமநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் அழகன். இவரது மனைவி பட்டு(வயது68). இவர் சம்பவத்தன்று தனது கன்று குட்டியை மேய்ச்சலுக்காக வயலுக்கு ஓட்டிச்சென்றார். அப்போது, வயல்வெளி பகுதியில் அறுந்து கிடந்த உயர்மின் அழுத்த கம்பியை தெரியாமல் மிதித்தார். இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்டார். இதையடுத்து, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்த சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- விபத்தில் சிக்கிய கன்று குட்டியை மீட்டு சிகிச்சைக்காக தன்னார்வலர்கள் கொண்டு சென்றனர்.
- சிகிச்சைக்கு அனுப்பிய 2 தன்னார்வலர்களையும் பொதுமக்கள் பாராட்டினர்.
தஞ்சை ரெட்டிபாளையம் சாலை அப்துல் வகாப் நகரில் நேற்று இரவு கன்றுக்குட்டி ஒன்று படுத்து கிடந்தது.
அப்போது அந்த வழியாக வந்த வேன் எதிர்பாராத விதமாக கன்று குட்டி மீது மோதியது.
இதில் கன்று குட்டி அந்த வேனில் சிக்கி சில அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டது.
வளைவில் அந்த வேன் திரும்பிய போது கன்று குட்டி அதிலிருந்து விலகி சாலையில் பலத்த காயத்துடன் கிடந்தது.
கன்று குட்டி உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை ஆலக்குடியை சேர்ந்த வெற்றிவேல், தஞ்சை மேலவெளியை சேர்ந்த செந்தில் ஆகிய இருவரும் பார்த்து உடனடியாக காரில் அந்த கன்று குட்டியை ஏற்றினர்.
பின்னர் ஒரத்தநாடு கால்நடை மருத்துவமனையில் கன்று குட்டியை சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து கன்று குட்டி உரிமையாளருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கன்று குட்டியை பத்திரமாக மீட்டு சிகிச்சைக்கு அனுப்பிய 2 தன்னார்வலர்களையும் பொதுமக்கள் பாராட்டினர்.