search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "campaign end"

    பாராளுமன்றத்துக்கான 4-வது கட்ட தேர்தலில் 72 தொகுதிகளுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. #Loksabhaelections2019
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதுவரை மூன்று கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது.
     
    முதல் கட்டமாக கடந்த 11-ம் தேதி 91 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக 18-ம் தேதி 95 தொகுதிகளுக்கும், 3-வது கட்டமாக 23-ம் தேதி 117 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடந்தது. இதுவரை 303 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்துள்ளது.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலுக்கான 4-வது கட்ட ஓட்டுப்பதிவு வரும் 29-ம் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.



    இதில் மத்தியப்பிரதேசம் மாநிலம் முதல் மந்திரி கமல்நாத் மகன் நகுல் நாத் போட்டியிடும் சிந்த்வாரா தொகுதி உள்பட பீகார் (5), ஜம்மு காஷ்மீர் (1), ஜார்க்கண்ட் (3), மத்தியப்பிரதேசம் (6), மகாராஷ்டிரா (17), ஒடிசா (6), ராஜஸ்தான் (13), உத்தரபிரதேசம் (13), மேற்கு வங்காளம் (8) உள்ளிட்ட மாநிலங்களில் 72 தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெற்றது.

    இதையொட்டி தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். தேர்தல் ஆணையம் பாதுகாப்பு உள்பட அனைத்து பணிகளிலும் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. #Loksabhaelections2019
    ×