என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "canal"

    • வாகனங்கள் ஆழியாறு, வால்பாறை உள்ளிட்ட இடங்களுக்கு இந்த ரோட்டில் அதிக அளவு செல்கின்றன.
    • பாலத்தின் மீதுள்ள ஓடுதளம் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது.

    உடுமலை :

    உடுமலை அருகே தளியில் இருந்து எரிசனம்பட்டி வழியாக தேவனூர்புதூர் வரை செல்லும் ரோடு, மாவட்ட முக்கிய ரோடுகள் பிரிவின் கீழ் நெடுஞ்சாலைத்துறையால் பராமரிக்கப்படுகிறது.திருமூர்த்திமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு வரும் வாகனங்கள், ஆழியாறு, வால்பாறை உள்ளிட்ட இடங்களுக்கு இந்த ரோட்டில் அதிக அளவு செல்கின்றன.

    இந்த ரோட்டில் தீபாலபட்டி அருகே பி.ஏ.பி., பிரதான கால்வாய் குறுக்கிடுகிறது. இந்த கால்வாய் மீது கட்டப்பட்ட பாலம் ,தொடர் பயன்பாடு, நீண்ட காலமாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாதது உள்ளிட்ட காரணங்களால் வலுவிழந்து வருகிறது.

    பாலத்தின் மீதுள்ள ஓடுதளம் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. அருகிலுள்ள குடிநீர் குழாய் உடைப்பில் தொடர்ந்து தண்ணீர் வெளியேறி அப்பகுதியில் தேங்குவது பாலத்தின் உறுதித்தன்மையை பாதிக்கிறது.இவ்வாறு படிப்படியாக வலுவிழந்து வரும் பாலத்தை புதுப்பிக்க வேண்டும் என அப்பகுதி மக்களும், வாகன ஓட்டுனர்களும் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அப்பகுதி மக்கள் கூறுகையில், தளி- எரிசனம்பட்டி ரோட்டில் போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது. எனவே பி.ஏ.பி., பாலத்தை புதுப்பிக்க வேண்டும். உடனடி நடவடிக்கையாக ஓடுதளத்தை சீரமைக்காவது நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • கால்வாய் அருகில் நின்று கொண்டு குரைத்துக் கொண்டே இருந்துள்ளது.
    • கால்வாய்க்குள் இருந்து குட்டி நாய்களின் சப்தம் கேட்டுள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் அருகேயுள்ள செம்மிபாளையம் ஊராட்சி குப்புசாமிநாயுடுபுரத்தில் இந்திரா காலனியில் உள்ள ஒரு தெருவில் உள்ள சாக்கடை கால்வாயில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக ஒரு தாய் நாய் சாக்கடை கால்வாய்க்குள் உள்ளே சென்று குட்டிகளுக்கு பால் கொடுத்துவிட்டு பின்னா் மேலே வருவதுமாக இருந்துள்ளது. மேலும் கால்வாய் அருகில் நின்று கொண்டு குரைத்துக் கொண்டே இருந்துள்ளது.

    இதையடுத்து அப்பகுதியில் வசிக்கும் ஒருவா் சாக்கடை கால்வாய் அருகில் சென்று சிமெண்ட் சிலேப் போட்டு மூடப்பட்டிருந்த பகுதியில் இருந்த சிறிய இடைவெளி வழியாக உள்ளே பாா்த்துள்ளாா். அப்போது கால்வாய்க்குள் இருந்து குட்டி நாய்களின் சப்தம் கேட்டுள்ளது. இதையடுத்து பல்லடம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளாா்.

    அதன் பேரில் நிலைய அலுவலா் முத்துக்குமாரசாமி தலைமையில் சென்ற தீயணைப்பு வீரா்கள் சாக்கடை கால்வாய் சந்தில் கையை விட்டு 6 நாய் குட்டிகளையும் மேலே எடுத்து வெளியே விட்டனா். அப்போது தாய் நாய் அருகிலேயே நின்று பாா்த்துக் கொண்டிருந்தது. குட்டிகள் அனைத்தும் மேலே வந்ததும் அனைத்து குட்டிகளையும் அழைத்து கொண்டு சென்றது. நாய் குட்டிகளை பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினரை அப்பகுதி மக்கள் பாராட்டினா்.

    • பாசன திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
    • 4 மண்டலங்களுக்கு சுழற்சி முறையில் தண்ணீர் வினியோகம் பெற்று வருகிறது.

    உடுமலை :

    உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைகள் கட்டப்பட்டு உள்ளது. வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற நீராதாரங்கள் அணைகளுக்கு நீர்வரத்தை அளித்து வருகிறது. அதை அடிப்படையாகக் கொண்டு திருமூர்த்திஅணை மூலமாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பிஏபி., பாசன திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் 4 மண்டலங்களுக்கு சுழற்சி முறையில் தண்ணீர் வினியோகம் பெற்று வருகிறது. இதற்கு பி.ஏ.பி., தொகுப்பு அணைகளும் நீர்வரத்தை அளித்து உதவி புரிந்து வருகிறது.

    அதுமட்டுமின்றி உடுமலை, பூலாங்கிணர், கணக்கம்பாளையம், குடிமங்கலம், மடத்துக்குளம் உள்ளிட்ட கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.மேலும் தளி வாய்க்கால் மூலமாக ஏழுகுளம் பாசனமும் நடைபெற்று வருகிறது.பி.ஏ.பி., திட்டத்தின் உயிர்நாடியான பிரதான கால்வாய்க்கு கீழே அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை வழியாக தளி வாய்க்கால் கடந்து செல்கிறது. தளி வாய்க்கால் அருகே பி.ஏ.பி., பிரதான கால்வாயின் பக்கவாட்டு சுவரில் துளை ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வந்தது. அதைத்தொடர்ந்து விவசாயிகள் துளையை சீரமைக்கக் கோரி கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த சூழலில் பி.ஏ.பி., வாய்க்கால் மற்றும் தளி சுரங்கப்பாதை சந்திக்கும் பகுதியில் கட்டுமான பணி தொடங்கி உள்ளது. அப்போது பி.ஏ.பி, கால்வாய் மற்றும் தளி வாய்க்கால் சுரங்கப்பாதை இடித்து அகற்றப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் பணியை விரைந்து செய்து முடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • பாசன பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் வாய்க்கால்களை தூர்வார வேண்டும்.
    • தலைஞாயிறு பகுதிகளில் உள்ள சாலைகளை மேம்படுத்த வேண்டும்.

    வேதாரண்யம்:

    தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி தலைமை தாங்கினார்.

    ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் அண்ணாதுரை, பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் மகேஷ் தீர்மானங்களை வாசித்தார்.

    கூட்டத்தில் மகேந்திரன், செல்வி சேவியர், உதயகுமார், கஸ்தூரி மாசிலாமணி, ஞானசேகரன் உள்ளிட்ட ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தலைஞாயிறு தொகுதியில் நிலவிவரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும், மேட்டூர் அணையில் இருந்து அடுத்த மாதம் (ஜூன்) 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படுவதால் கடைமடை பாசன பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் வாய்க்கால்களை தூர்வார வேண்டும், ஒன்றியத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் சாலைகளை மேம்படுத்த வேண்டும் என்பனஉள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தினர்.

    இதற்கு பதில் அளித்து ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி பேசியதாவது:-

    குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக முன்னுரிமை அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • கால்வாயில் கழிவு நீர் சரியான முறையில் ஓடாததால் மழைக்காலங்களில் தண்ணீர் புகுந்து பாதிப்பு ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது.
    • துணை மேயர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சி குட்டக்கார தெருவில் கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்தது. மேலும் இந்த கால்வாயில் கழிவு நீர் சரியான முறையில் ஓடாததால் மழைக்காலங்களில் தண்ணீர் புகுந்து பாதிப்பு ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது. இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கால்வாயை உடனடியாக சரி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது ராஜா, வெற்றி, வடிவேல், விக்கி மற்றும் பலர் உடனிருந்தனர்

    • 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
    • நீர்நிலை கால்வாய்களையும் சுத்தப்படுத்தும் பணி நடந்தது.

    அரவேணு,

    கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. எனவே அங்கு உள்ள அனைத்து நீர்நிலை கால்வாய்களையும் சுத்தப்படுத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

    கோத்தகிரி சிறப்பு பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி, செயல் அலுவலர் மணிகண்டன் உத்தரவின்பேரில் துப்புரவு ஆய்வாளர் ரஞ்சித் தலைமையில் ஊழியர்கள் குமரன் காலனி, கன்னியாதேவி காலனி ஆகிய பகுதிகளில் உள்ள கால்வாய்கள் மற்றும் நீர்வரத்து வாய்க்கால்களை சுத்தம் செய்து வருகின்றனர்.

    • நெல்லை மாவட்டத்தில் விவசாயத்திற்கு முக்கியமான கால்வாயாக பாளையங்கால்வாய் இருக்கிறது.
    • பாளையங்கால்வாய் மூலம் 57 கிராம குளங்களுக்கு தண்ணீர் சென்றடைவது வழக்கம்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் பிரதான அணையான பாபநாசம் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரானது சுமார் 126 கிலோமீட்டர் தூரம் பயணித்து தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலில் கடலில் கலக்கிறது.

    இந்த அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் வடக்கு மற்றும் தெற்கு கோடை மேலழகியான், நதியுண்ணி, கன்னடியன், கோடகன் கால்வாய், பாளையங்கால்வாய் உள்ளிட்ட 7 கால்வாய்கள் மூலம் 40 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை பாசன வசதி பெற செய்கிறது. இது தவிர தூத்துக்குடி மாவட்டத்திலும் சுமார் 46 ஆயிரம் ஏக்கர் வரை பாபநாசம் அணை தண்ணீரை நம்பி விவசாயம் நடந்து வருகிறது.

    இதில் நெல்லை மாவட்டத்தில் விவசாயத்திற்கு முக்கியமான கால்வாயாக பாளையங்கால்வாய் இருக்கிறது. தாமிரபரணி ஆற்றில், பழவூர் தடுப்பணையில் இருந்து தொடங்கும் இந்த கால்வாய் சுமார் 43 கிலோமீட்டர் தூரம் கொண்டது. இக்கால்வாய் மூலம் 57 கிராம குளங்களுக்கு தண்ணீர் சென்றடைவது வழக்கம்.

    இந்த தண்ணீர் மூலம் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த கால்வாயில் மட்டும் 162 மடைகள் இருக்கின்றன. ஆனால், இவற்றில் பலவும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கின்றன. ஷட்டர்கள் எங்குமில்லை. இதனால், தண்ணீர் வீணாவதோடு விவசாயிகளும் தங்களது பாசனப்பரப்பை ஆண்டுதோறும் குறைத்து வருகின்றனர்.

    கால்வாயின் தொடக்கம் முதல் கடைசி வரையில் ஆகாயத்தாமரை, அமலை செடிகள், கால்வாய் முழுக்க ஆக்கிரமித்து இருப்பதால் கால்வாயில் நீரோட்டம் தடைபட்டு, கடைமடை பகுதிக்கு தண்ணீர் சென்று சேருவதில்லை. குறிப்பாக 56-வது குளமான நொச்சிக்குளம், 57-வது குளமான சாணான்குளம் ஆகியவற்றுக்கு, தண்ணீர் சேரவில்லை.

    இதனால் கடந்த 15 ஆண்டுகளாக பாளையங் கால்வாயின் கடைமடை பகுதியில் கார் பருவ சாகுபடி நடக்கவே இல்லை என்ற விஷயம் வேதனைக்குரியது. இந்த கால்வாய் மாநகர பகுதியில் மட்டும் சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கிறது. இந்த பகுதியில் மாநகராட்சி கழிவுகளும், சாக்கடையும், குடிமகன்களால் வீசப்படும் மது பாட்டில்களும் அடைத்து தண்ணீர் சீராக வழிந்தோட முடியாமல் போய்விடுகிறது.

    குறிப்பாக, மேலப்பாளையம் குறிச்சி பகுதியில் மாநகராட்சி ஊழியர்களே, கால்வாயில் கழிவுகளை கொட்டி விடுகின்றனர் எனவும், பெரும்பாலானோர் கட்டிடக்கழிவுகளை கொட்டி பாளையங்கால்வாயில் அகலத்தை சுருக்கி விட்டார்கள் எனவும் சமூக ஆர்வலர்கள் குமுறுகின்றனர்.

    தொடர் புகார்களால் பொதுப்பணி துறை, வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து தாமிரபரணி ஆற்றிலும், பாளையங்கால்வாயிலும் சாக்கடை கலப்பதை தடுக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். அதன் பேரில் மாநகராட்சி சில நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது.

    இந்த நடவடிக்கைகளை விரைவு படுத்தி கால்வாயை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் என அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • நீண்ட இழுபறிக்கு பின் தளி எத்தலப்ப நாயக்கருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது
    • பாதுகாக்கப்பட வேண்டிய வரலாற்று பொக்கிஷமாக உள்ள தளி எத்தலப்ப நாயக்கர் சிலைகள் காண்டூர் கால்வாய் அருகே திறந்த வெளியில் வைக்கப்பட்டு உள்ளது.

    உடுமலை: 

    உடுமலை அடுத்துள்ள திருமூர்த்திமலை காண்டூர் கால்வாய் அருகே சுதந்திர போராட்ட வீரர் தளி பாளையக்காரர் எத்தலப்ப நாயக்கருக்கு மணிமண்டபம் கட்டப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.நீண்ட இழுபறிக்கு பின் தளி எத்தலப்ப நாயக்கருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

    அதைத் தொடர்ந்து செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் மணிமண்டபம் மற்றும் உருவச்சிலை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் மணிமண்டபம் கட்டுவதற்கு திருமூர்த்தி நகரில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இரண்டு ஏக்கர் புறம்போக்கு நிலமும் தேர்வு செய்யப்பட்டது.அறிவிப்பு வந்து நீண்ட நாட்கள் ஆகியும் மணிமண்டபம் கட்டும் பணி துவங்கப்படாதது அனைத்து தரப்பினரையும் வேதனை அடைய செய்து உள்ளது.

    அதுமட்டுமின்றி பாதுகாக்கப்பட வேண்டிய வரலாற்று பொக்கிஷமாக உள்ள தளி எத்தலப்ப நாயக்கர் சிலைகள் காண்டூர் கால்வாய் அருகே திறந்த வெளியில் வைக்கப்பட்டு உள்ளது.எனவே மணிமண்டபம் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் மற்றும் திறந்த வெளியில் உள்ள பழங்கால சிலைகள் பாதிப்பு அடையாமல் இருக்க மேற்கூரை அமைத்து பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • ஆற்றில் ஆண் குழந்தை சடலமாக மிதந்து கரை ஒதுங்கியது.
    • பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

    திருவோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா திருவோணம் ஊராட்சி ஒன்றியம் பகுதியில் உள்ள அனந்த கோபாலபுரம் கிராமத்தில் உள்ள ஒரு ஆற்று வாய்க்காலில் பிறந்து சில மணி நேரங்களில் உள்ள ஒரு ஆண் குழந்தை சடலமாக மிதந்து வந்து கரை ஒதுங்கியது.

    இந்த பிறந்து சில மணி நேரத்தில் சடலமாக வந்த குழந்தையை பார்த்து அந்த கிராம மக்கள் திருவோணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அந்த அடிப்படையில் அந்த கிராமத்தின் கிராம நிர்வாக அதிகாரி பிரபாகரன் திருவோணம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இந்த புகாரின் அடிப்படையில் ஒரத்தநாடு டிஎஸ்பி பிரசன்னா உத்தரவின் பெயரில் ஒரத்தநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்கு பதிவு செய்து சடலமாக வந்த பிஞ்சுக் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு பட்டுக்கோட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

    பிறந்து சில மணி நேரங்களிலேயே இந்த குழந்தை ஆற்றில் வீசப்பட்டதால் யார் குழந்தை ஏன் இந்த குழந்தை வீசப்பட்டது.

    தவறான கள்ளத்தொடரில் பிறந்த குழந்தையா?

    போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள் குழந்தைகளே இல்லாமல் தவிக்கும் பெற்றோர்கள் அதிகரித்து வரும் இந்த காலத்தில் பிறந்த சில மணி நேரங்களில் ஒரு ஆண் குழந்தை ஆற்றில் வீசப்பட்ட இந்த சம்பவம் திருவோணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வண்டியூர் கண்மாய் பிரதான கால்வாயில் தண்ணீர் சிவப்பு நிறமாக மாறியது.
    • ஒருவித ரசாயன நெடி வீசுகிறது.

    மதுரை

    மதுரை நகரில் குடிநீர் ஆதாரமாக மாடக்குளம், வண்டியூர், செல்லூர் கண்மாய்கள் உள்ளன. இந்த கண்மாயை பாதுகாக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். ஆனாலும் ஆக்கிரமிப்புகள், கழிவுநீர் கலப்பு என தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதனால் கண்மாய் நீர் மாசுபடும் சூழல் ஏற்பட்டுள்ளது. வண்டியூர் கண்மாயில் இருந்து வைகையாற்றுக்கு பிரதான நீர்வரத்து கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் செல்லும் தண்ணீர் சிவப்பு நிறமாக மாறியுள்ளது.

    மேலும் ஒருவித ரசாயன நெடியும் வீசுகிறது. சுற்றுப்புற சூழலை மாசுபடுத்தும் வகையில் பிரதான கால்வா யில் சாயப்பட்டறைகள் மற்றும் பெயிண்ட் நிறுவ னங்கள் கழிவுநீரை கலந்ததா? என தெரிய வில்லை. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். 

    • கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்து போனதால் பாசன குளங்கள் எல்லாம் தற்போது கால்நடைகள் கூட குடிக்க தண்ணீர் இல்லாத நிலையில் வறண்டு போய் கிடக்கின்றன.
    • ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு கடந்த 3 நாட்களுக்கு முன் ஸ்ரீவைகுண்டம் வடகால் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடச் செய்தார்.

    தூத்துக்குடி:

    ஸ்ரீவைகுண்டம் வடகால் வாய்க்கால் பாசனத்தில் ஸ்ரீவை குண்டத்தில் இருந்து ஏரல் வரை நேரிடையாக சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொற்கைகுளம் பாசனம் மூலம் கொற்கை, கொடுங்கணி, உமரிக்காடு மற்றும் முக்காணி பகுதிகளில் சுமார் 1500 ஏக்கர் பரப்பளவிலும், ஆறுமுகமங்கலம் குளம் மூலம் கரையடியூர், கணபதிசமுத்திரம், லெட்சுமிபுரம், அகரம், கொட்டாரக்குறிச்சி, மார மங்கலம், இடையர்காடு மற்றும் அரசன்குளம் ஆகிய பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்து 300 ஏக்கர் பரப்பளவு பேய்க்குளம் குளம் பாசன பகுதிகளில் சுமார் 3ஆயிரம் ஏக்கார் என மொத்தம் 12 ஆயிரத்திற்கும் அதிகமான பரப்பளவில் விவசாயம் நடந்து வருகிறது.

    கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்து போனதால் இந்த பாசன குளங்கள் எல்லாம் தற்போது கால்நடைகள் கூட குடிக்க தண்ணீர் இல்லாத நிலையில் வறண்டு போய் கிடக்கின்றன. இதனால் இங்கு பயிரிடப்பட்டுள்ள வாழை, நெல் மற்றும் வெற்றிலை பயிர்கள் அனைத்தும் கருகி விவசாயிகளுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜ் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு கடந்த 3 நாட்க ளுக்கு முன் ஸ்ரீவைகுண்டம் வடகால் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடச் செய்தார். குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்ப ட்டுள்ளதால் வாய்காலில் வரும் தண்ணீர் பேய்க்குளம் வரை தண்ணீர் சென்று சேரவில்லை.

    இதையடுத்து அவர், அமைச்சர் துரைமுருகன், அனிதா ராதாகிருஷ்ணன், கலெக்டர் செந்தில்ராஜ் மற்றும் தாமிரபரணி ஆறு செயற்பொறியாளார் ஆகியோரை சந்தித்து ஸ்ரீவைகுண்டம் வடகால் வாய்க்காலில் தற்போது திறந்து விடப்பட்டுள்ள தண்ணீரோடு கூடுதாலாக 250 கன அடி தண்ணீர் சேர்த்து 350 கன அடி தண்ணீர் தொடர்ந்து 15 நாட்களுக்கு திறந்து விட வேண்டும் என கோரிக்கை மனு அளித்துள்ளார்.

    • உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாக்களின் முக்கிய பாசன நீராதாரமாக அமராவதி பிரதான கால்வாய் உள்ளது.
    • மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பருவமழை கைகொடுக்காத நிலையில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது.

    மடத்துக்குளம்

    உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாக்களின் முக்கிய பாசன நீராதாரமாக அமராவதி பிரதான கால்வாய் உள்ளது. அமராவதி அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் 63 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த கால்வாய் மூலம் 25 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்களுக்கு நேரடியாக பலனளித்து வருகிறது. இதுதவிர நிலத்தடி நீராதாரத்தை உயர்த்துவதற்கு உதவுவதன் மூலம் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களின் பாசனத்துக்கு கைகொடுக்கிறது.

    இந்தநிலையில் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாததால் பிரதான கால்வாயில் பல இடங்களில் சேதமடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. மேலும் கால்வாயின் கரையில் மட்டுமல்லாமல் கால்வாயின் உள்ளேயும் குப்பைகளை கொட்டும் போக்கு அதிகரித்து வருகிறது. இதனால் கால்வாயில் தேங்கும் குப்பைகள் மற்றும் பாலிதீன் கழிவுகள் நீர் திறப்பின்போது மடைகளில் அடைப்பை ஏற்படுத்துவதால் பெருமளவு நீர் வீணாகிறது. அத்துடன் கழிவுகளால் விளைநிலங்களும் வீணாகும் நிலை உள்ளது.மேலும் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் மண் குவியல் நிறைந்து பாசன நீர் செல்வதில் தடைகளை ஏற்படுத்துகிறது என்பன உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் மடத்துக்குளம் பகுதியில் பொக்லைன் எந்திரங்களின் உதவியுடன் அமராவதி பிரதான கால்வாயை தூர் வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பருவமழை கைகொடுக்காத நிலையில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் நிலைப்பயிர்களை காப்பாற்ற போராடும் நிலை உள்ளது.எனவே அமராவதி அணையிலிருந்து உயிர்த்தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். அமராவதி அணையில் மொத்தமுள்ள 90 அடியில் தற்போது 64.87 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது குறைந்த அளவான இருப்பேயாகும்.

    பிரதான கால்வாயில் திறக்கப்படும் தண்ணீர் வீணாகாமல் கடைமடை வரை உள்ள விவசாயிகளுக்கும் முழுமையாக போய் சேர வேண்டியது அவசியமாகும். இதனைக் கருத்தில் கொண்டு கால்வாய் தூர்வாரப்படுவது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.ஆனால் கிருஷ்ணாபுரம் முதல் துங்காவி வரையிலான குறைந்த தூரத்துக்கு மட்டுமே தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிகிறது. எனவே கால்வாயை முழுமையாக தூர்வாரவும், பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×