என் மலர்
நீங்கள் தேடியது "Cancel"
- கடந்த 3 நாட்களாக கோவில் அருகில் உள்ள அய்யங்குளத்தில் தெப்ப உற்சவம் நடந்தது.
- மகா தீபத்தை தரிசனம் செய்ய தொடர்ந்து பக்தர்கள் வருகை தருவதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதி உலாவும், இரவில் விநாயகர், முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் வீதி உலாவும் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரணி தீபம், மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி கடந்த 26-ந் தேதி நடைபெற்றது.
அன்று காலையில் கோவில் வளாகத்தில் பரணி தீபமும், மாலையில் 2,668 அடி உயர மலையில் மகா தீபமும் ஏற்றப்பட்டது. மகா தீபத்தையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
கடந்த 3 நாட்களாக கோவில் அருகில் உள்ள அய்யங்குளத்தில் தெப்ப உற்சவம் நடந்தது. நேற்று முன்தினம் காலையில் அருணாசலேஸ்வரர் கிரிவலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்று மாலை சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா நிறைவடைகிறது. அப்போது சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வர உள்ளார்.
மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் மலை உச்சியில் பிரகாசிக்கும். மாலை நேரத்தில் ஏற்றப்பட்டு தொடர்ந்து காட்சி அளிக்கும்.
மகா தீபத்தை தரிசனம் செய்ய தொடர்ந்து பக்தர்கள் வருகை தருவதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.
இதனால் வருகிற 3-ந் தேதி வரை கோவிலில் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.
- எழுத்துத் தேர்வில் சுமார் 50 லட்சம் பேர் தேர்வு எழுதி இருந்தனர்.
- தேர்வு எழுதுவதற்காக ரெயில்வே ஸ்டேஷனில் கூட்டம் குவிந்திருந்தது.
உத்தரப் பிரதேசத்தில் பிப்ரவரி 17ம் தேதி மற்றும் 18ம் தேதி நடைபெற்ற காவல்துறை பணியிடங்களுக்கான தேர்வை ரத்து செய்வதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
60 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்காக நடைபெற்ற எழுத்துத் தேர்வில் சுமார் 50 லட்சம் பேர் தேர்வு எழுதி இருந்தனர்.
தேர்வு எழுதுவதற்காக ரெயில்வே ஸ்டேஷனில் கூட்டம் குவிந்திருந்தது. இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
தேர்வுக்கு முன்னரே வினாத்தாள் கசிந்து சமூக வலைதளங்களில் பரவியதாக புகார் வெளியான நிலையில் உ.பி அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
- கோடம்பாக்கம்-தாம்பரம் ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.
- பராமரிப்பு பணி காரணமாக நாளை மறுநாள் 44 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை கோடம்பாக்கம்-தாம்பரம் ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல, தாம்பரத்தில் இருந்து காலை 10.05 மணி முதல் மாலை 4.30 மணி வரை சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
இந்நிலையில், பராமரிப்பு பணிகள் காரணமாக 4-வது வாரமாக சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மின்சார ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் குறைந்த எண்ணிக்கையிலேயே இயக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளது.
பராமரிப்பு பணி காரணமாக ஞாயிற்றுக்கிழமைகளில் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதால் ரெயில் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
- கோடம்பாக்கம்-தாம்பரம் ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.
- பராமரிப்பு பணி காரணமாக நாளை மறுநாள் 44 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை கோடம்பாக்கம்-தாம்பரம் ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல, தாம்பரத்தில் இருந்து காலை 10.05 மணி முதல் மாலை 4.30 மணி வரை சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளது.
தொடர்ந்து 4 வாரங்கள் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் கடந்த வாரம் ரெயில்கள் ரத்து செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- சென்னை சேப்பாக்கத்தில் குவாலிபையர்-2 மற்றும் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.
- போட்டிக்குச் செல்வோர் பயணச்சீட்டு பெற்று பயணிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெற உள்ள பிளே ஆப் சுற்றின் குவாலிபையர்-2 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி வரும் 26-ம் தேதி இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியுடன் மோதும். குவாலிபையர்-2 மற்றும் இறுதிப்போட்டி ஆகியவை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்நிலையில், சென்னை மாநகரப் பேருந்துகளில் சலுகை பயணத்துக்கு அனுமதி இல்லை என போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மாநகர போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நடப்பு ஐ.பி.எல். சீசனின் குவாலிபையர்-2 மற்றும் இறுதிப்போட்டி வரும் 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
முந்தைய கிரிக்கெட் போட்டிகளில் சம்பந்தப்பட்ட போட்டிக்கான நுழைவுச்சீட்டு (டிக்கெட்) வைத்திருந்தால் அதை காண்பித்து மாநகர பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் வரும் 24 மற்றும் 26-ம் தேதிகளில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளுக்கு மாநகர பேருந்துகளில் சலுகை பயணம் அனுமதியில்லை. எனவே போட்டிக்குச் செல்வோர் பயணச்சீட்டு பெற்று பயணிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளது
- காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டடை தொடர்ந்து விஜய் ஆண்டனியின் இன்று நடைபெற இருந்த இசை கச்சேரி ரத்து செய்யப்பட்டுள்ளது.
- விஜய் ஆண்டனி வருத்தம் தெரிவித்து எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
சென்னை, மீனம்பாக்கத்தில் உள்ள ஏஎம் ஜெயின் கல்லூரி மைதானத்தில், இன்று "Vijay Antony 3.0 -இன்னிசை கச்சேரி" நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்பட்டது. விஜய் ஆண்டனியின் ரசிகர்கள் ஏராளமானோர் இசை கச்சேரியில் பங்கேற்க ஆவலுடன் இருந்தனர்.
இந்நிலையில், காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டடை தொடர்ந்து விஜய் ஆண்டனியின் இன்று நடைபெற இருந்த இசை கச்சேரி ரத்து செய்யப்பட்டுள்ளது. இது மற்றொரு நாளில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தேதி விபரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.
இதுதொடர்பாக விஜய் ஆண்டனி வருத்தம் தெரிவித்து எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், " சில எதிர்பாராத காரணங்களாலும், மற்றும் தற்போது சென்னையில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டும், அரசு அதிகாரிகள் வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில், இன்று நடைபெறவிருந்த விஜய் ஆண்டனி 3.0 Live Concert, வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.
இதனால் உங்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு மிகவும் வருத்தப்படுகிறேன்.
புதிய நிகழ்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும். உங்கள் புரிதலுக்கு நன்றி" என குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையே, விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சியை முன்னிட்டு, இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரசிகர்களுக்கு தடையில்லா போக்குவரத்தை வழங்குவதற்காக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தென்னிந்தியாவின் முன்னணி ஊடக தயாரிப்பு நிறுவனமான Noise and Grains Private Limited உடன் இணைந்து கட்டணமில்லா பயணத்தை வழங்குவதற்காக உடன்பாடு செய்தது.
அதன்படி, "Insider" or "District" தளங்கள் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட டிஜிட்டல் டிக்கெட்டுகளுடன் நிகழ்வில் பங்கேற்பவர்களுக்கு மட்டுமே இந்த ஸ்பான்சர் செய்யப்பட்ட பயணம் வழங்கப்படும் என்றும் இந்த முன்பதிவு செய்யப்பட்ட டிஜிட்டல் டிக்கெட்டுகளை பயன்படுத்தி பயணிகள் எந்த ஒரு மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்தும் நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு மிக அருகில் உள்ள மீனம்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு சென்று திரும்ப முடியும் என்றும் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்திருந்தது.
விஜய் ஆண்டனியின் இசை கச்சேரி ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மெட்ரோ ரெயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் கூறியிருப்பதாவது:-
சென்னை 28 டிசம்பர் 2024 (இன்று) மீனம்பாக்கம் ஏஎம் ஜெயின் கல்லூரி மைதானத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட "விஜய் ஆண்டனி 3.0 - லைவ் இன் கச்சேரி, எதிர்பாராத சூழ்நிலைகளால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
எனவே, நிகழ்ச்சிக்கான மெட்ரோ பயண டிக்கெட்டுகளை ரசிகர்கள் இன்று பயன்படுத்த முடியாது.
மெட்ரோ ரயில் சேவை வழக்கமான கால அட்டவணைப்படி மட்டுமே கிடைக்கும்.
M/s Noise & Grains Private Limited மூலம் மேற்கொண்டு தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விமான விபத்தில் 179 பேர் பலியானது உலக அளவில் சோகத்தை ஏற்படுத்தியது.
- 68,000 பயணிகள் தங்கள் பயணத்தை ஒரே நாளில் ரத்துசெய்துள்ளனர்.
சியோல்:
தாய்லாந்திலிருந்து 181 பேரை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் வந்துகொண்டிருந்த ஜெஜு ஏர் விமானம் தென்கொரிய விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விபத்தில் சிக்கியது.
தலைநகர் சியோலில் இருந்து தென்மேற்கே சுமார் 288 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் அடிப்பகுதி ஓடுபாதையில் உரச தரையிறங்கிய விமானத்தின் என்ஜின்களில் இருந்து புகை கிளம்பியது. ஓடுபாதையில் இருந்து சறுக்கிய விமானம் சுவரில் மோதி தீப்பிடித்து வெடித்தது. இதில் 179 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விமான விபத்தில் 179 பேர் பலியானது உலக அளவில் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஒரே நாளில் விமான விபத்தில் சிக்கிய ஜெஜு விமான நிறுவனத்தில் முன்பதிவு செய்திருந்த சுமார் 68 ஆயிரம் பேர் தங்களது பயணங்களை ரத்து செய்துள்ளனர்.
இதில் 33 ஆயிரம் பேர் உள்ளூர் பயணங்களையும், 34 ஆயிரம் பேர் வெளிநாட்டு பயணங்களையும் ரத்து செய்துள்ளனர் என ஜெஜு விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
- ராஜபாளையம் - சங்கரன்கோவில் பிரிவில் ரெயில் பாதை பலப்படுத்தும் பணிகள் இன்று முதல் தொடங்கியது.
- இதனால் மதுரை-செங்கோட்டை ரெயில்கள் வருகிற 31-ந்தேதி வரை ரத்தாகிறது.
நெல்லை:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் - சங்கரன் கோவில் பிரிவில் ெரயில் பாதை பலப்படுத்தும் பணிகள் இன்று முதல் தொடங்கியது.
இதுதொடர்பாக ஏற்கனவே தென்னக ரெயில்வே மதுரை கோட்டம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. அதன்படி இன்று காலை முதல் பணிகள் தொடங்கின.
இதன் காரணமாக மதுரையில் இருந்து காலை 11.30 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை-செங்கோட்டை (06663), செங்கோட்டையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்பட வேண்டிய செங்கோட்டை - மதுரை (06664) ஆகிய முன்பதிவு இல்லாத 2 சிறப்பு ெரயில்களும் இன்று ரத்து செய்யப்பட்டன.
இந்த ரெயில்கள் வருகிற 31-ந்தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தென்னக ரெயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- வருகிற 30-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
- இத்தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர்:
கோவை-திருப்பூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே பொறியியல் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் கோவை-சேலம் பயணிகள் தினசரி ரெயில் (எண்.06802) கோவையில் இருந்து தினமும் காலை 9.05 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் வருகிற 30-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. இதுபோல் சேலம்-கோவை ரெயில் (எண்.06803) வருகிற 30-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரவாரம் கொப்பரை ஏலம் நடைபெறும்.
- வரும் 4-ந் தேதி சரஸ்வதி பூஜையொட்டி கொப்பரை ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோவை
பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரவாரம் கொப்பரை ஏலம் நடைபெறும். இங்கு பொள்ளாச்சி மட்டுமல்லாமல் வெளியூர்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் இங்கு வந்து கொப்பரையை எலத்துக்கு எடுத்து செல்வார்கள்.
வாரம் தோறும் லட்சக்கணகான ரூபாய்க்கு கொப்பரை ஏலம் போகும். இந்த நிலையில் இந்த வருடம் கொப்பரை ஏலம் நடைபெரும் நாளான செவ்வாய்க்கிழமை சரஸ்வதி பூஜை வர உள்ளது. இதனால் வரும் 4-ந் தேதி சரஸ்வதி பூஜையொட்டி கொப்பரை ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் கூறும்போது,
ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில், ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொப்பரை ஏலம் நடத்தப்படுகிறது.
இதில், பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் கொப்பரை மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்து ஏலத்தில் பங்கேற்பது வழக்கம். வரும் 4-ந் தேதி சரஸ்வதி பூஜை விடுமுறை தினம் என்பதால், அன்றைய தினம் நடத்தப்பட இருந்த கொப்பரை ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வரும் 11-ம் தேதி வழக்கம்போல ஏலம் நடைபெறும் என்றார்.
- மேதாவி போல பேச வேண்டாம் கொடுக்க மனமில்லாத உங்களுக்கு மக்கள் பதிலடி தருவார்கள் என நிதி அமைச்சருக்கு ஆர்.பி.உதயகுமார் பதில் அளித்தார்.
- ஆனால் இன்றைக்கு திட்டங்களை தி.மு.க. அரசு ரத்து செய்துள்ளது.
மதுரை
மதுரையில் 29-ந் தேதி நடைபெறும் அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசுகிறார்.இது தொடர்பாக மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் டி.குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா கோவிலில் நடந்தது.இதில் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் பேசியதாவது:-
வருகிற 29-ந் தேதி அ.தி.மு.க. இடைக்கால பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரை மாநகர், புறநகர் மேற்கு, புறநகர் கிழக்கு ஆகிய மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார்.
அவருக்கு எழுச்சி மிகுந்த வரவேற்பு அளிக்கும் வகையில் சிறப்பான ஏற்பாடு செய்ய வேண்டும், 29-ந் தேதி காலை விமானம் மூலம் மதுரைக்கு வருகிறார். விருதுநகர் செல்லும் வழியில் கரிசல்பட்டியில் மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்படுகிறது,
அதேபோல் மாலை நடக்கும் பொதுக்கூட்டத்தில் திரளானோர் பங்கேற்க வேண்டும்.
நிதியமைச்சர் சில குற்றச்சாட்டுகளை கூறியு ள்ளார்.
நிதி மேலாண்மை குறித்து அறிந்துள்ள நிதி அமைச்சருக்கு மக்களுடைய நாடி துடிப்பு தெரியவில்லை. 4 தலைமுறை அரசியல் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த நீங்கள் 30 ஆண்டுகளாக ஏன் கம்பெனியில் இருந்தீர்கள்?
30 ஆண்டு காலம் கம்பெனியில் ஊதியம் பெற்ற நிதி அமைச்சருக்கு அரசியல் வேறு, கம்பெனி வேறு என்பது தெரியவில்லை.
தி.மு.க. ஆட்சியில் 2021-22-ம் ஆண்டில் மட்டும் ரூ.1 லட்சத்து ரூ.8 ஆயிரம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது, 2022-23-ம் ஆண்டில் ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி வாங்க அறிவிக்கப்பட்டது ஆக இந்த 1 1/2 ஆண்டு காலத்தில் ரூ. 2 லட்சத்து 28 ஆயிரம் கோடி கடன் வாங்கி உள்ளீர்கள்? வாங்கிய கடனுக்காக எந்த மூலதன செலவிற்கு திட்டங்கள் செய்யப்பட்டுள்ளது என நிதி அமைச்சர் பட்டியலிட்டு சொல்ல முடியுமா?
நிதி அமைச்சர் பேச்சில் வல்லவராக இருக்கலாம். செயல் வடிவில் அல்ல. உங்களுக்கு முன்பே அமைச்சராகி நீங்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்துள்ளோம்.
நீங்கள் மட்டுமே மேதாவி என்பது போல் பேசக்கூடாது. 10 வருடங்கள் அமைச்சராக இருந்த எனக்கு அடிப்படை கூட தெரிய வில்லை என்று நிதி அமைச்சர் கூறுகிறார்.
தற்போது மின் கட்டணம் உயர்த்த ப்பட்டுள்ள து, சொத்துவரி உயர்த்தப்ப ட்டுள்ளது இந்த நிதி எல்லாம் எங்கே போய் சேரும்? அந்தத் துறைகளுக்கு தானே சேரும்? அதுவும் தமிழ்நாடு அரசு தானே? அந்த துறைக்கு அமைச்சராக இருப்பவர் நேரு தானே? நலத்தி ட்டத்துக்கான அந்த வருவாய் செய ல்படுத்த ப்படுகிறது என்பது எல்லா மக்களுக்கும் தெரியும்.
கொடுக்க மனமில்லை என்று சொல்லுங்கள். அதற்கு தகுந்த பதிலடியை மக்கள் உங்களுக்கு வழங்குவார்கள். தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், மடிக்கணினி வழங்கும் திட்டம், இருசக்கர வாகனம் வழங்கும் திட்டங்கள் அ.தி.மு.க. ஆட்சியில் ரத்து செய்துள்ளதாக நிதி அமைச்சர் கூறியுள்ளார்.
கொரோனோ பேரிடர் காலத்தில் தாலிக்கு தங்கம், மடிக்கணினி, இருசக்கர வாகனம் வாங்கும் திட்டங்கள் தள்ளி வைக்கப்பட்டதே தவிர, திட்டத்தை ரத்து செய்யவில்லை. பேரிடர் காலங்களில் திட்டங்களை தள்ளி வைத்தது வேறு. தற்போது கொள்கை ரீதியாக திட்டங்களை ரத்து செய்துள்ளது வேறு. ஆனால் இன்றைக்கு திட்டங்களை தி.மு.க. அரசு ரத்து செய்துள்ளது. திட்டங்களை அ.தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்டதாக நிதி அமைச்சர் கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போலாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக வருகிற 15-ந்தேதி வரை ரெயில்கள் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தன.
- செங்கோட்டை - மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரெயில்கள் வழக்கம் போல இயங்கும் என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.
தென்காசி:
மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக வருகிற 15-ந்தேதி வரை ரெயில்கள் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தன.
அறிவிப்பு வாபஸ்
அதன்படி ராஜபாளையம் - சங்கரன்கோவில் பிரிவில் ரெயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மதுரை- செங்கோட்டை-மதுரை வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில்கள் (06663/06664) வருகிற 15-ந்தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகள் தவிர மற்ற நாட்களில் முழுமையாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்பொழுது அந்த பராமரிப்பு பணிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், மதுரை - செங்கோட்டை - மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரெயில்கள் வழக்கம் போல இயங்கும் என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.