என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » candidates announce
நீங்கள் தேடியது "candidates announce"
சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்களை அக்கட்சி இன்று இரவு அறிவித்துள்ளது. #ByPoll #ADMK
சென்னை:
அதிமுக சார்பில் 18 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.
பூந்தமல்லியில் ஜி வைத்தியநாதனும், பெரம்பூரில் ஆர்.எஸ்.ராஜேஷும், திருப்போரூரில் எஸ்.ஆறுமுகம், சோளிங்கரில் ஜி சம்பத்தும், குடியாத்தத்தில் கஸ்பா ஆர்.மூர்த்தியும், ஆம்பூரில் ஜே.ஜோதிராமலிங்கராஜாவும், ஓசூரில் சத்யாவும், பாப்பிரெட்டிப்பட்டியில் கோவிந்தசாமியும்,
அரூரில் சம்பத்குமாரும், நிலக்கோட்டையில் தேன்மொழியும், திருவாரூரில் ஜீவானந்தமும், தஞ்சாவூரில் ஆர்.காந்தியும், மானாமதுரையில் நாகராஜனும், ஆண்டிப்பட்டியில் லோகிராஜனும், பெரிய குளத்தில் முருகனும், சாத்தூரில் ராஜவர்மனும், பரமக்குடியில் சதன் பிரபாகரும், விளாத்திகுளத்தில் சின்னப்பனும் போட்டியிடுகின்றனர். #ByPoll #ADMK
பாராளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்களை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இன்று இரவு அறிவித்துள்ளார். #LSPolls #ADMK
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் மொத்தம் 8 கட்சிகள் இடம் பெற்றுள்ளன. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் அதிமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதமுள்ள 20 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக-வுக்கு 5, தேமுதிக-வுக்கு 4 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.
தமாகா, புதிய தமிழகம், புதிய நீதி கட்சி, என்ஆர் காங்கிரஸ் ஆகிய 4 கட்சிகளுக்கும் தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்து, அதிமுக சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, திருவள்ளூரில் டாக்டர் வேணுகோபாலும், தென் சென்னையில் ஜெயவர்தனும், காஞ்சிபுரத்தில் மரகதம் குமரவேலும், கிருஷ்ணகிரியில் கே.பி.முனுசாமியும், திருவண்ணாமலையில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும், ஆரணியில் ஏழுமலையும், சேலத்தில் கே.ஆர்.எஸ்.சரவணனும், நாமக்கல்லில் காளியப்பனும், ஈரோட்டில் வெங்கு என்ற ஜி.மணிமாறன், திருப்பூரில் எம்.எஸ்.எம்.ஆனந்தனும், நீலகிரி தியாகராஜன், பொள்ளாச்சி சி.மகேந்திரன், கரூரில் தம்பிதுரையும், பெரம்பலூரில் என்.ஆர்.சிவபதியும், சிதம்பரத்தில் பொ.சந்திரசேகர், மயிலாடுதுறையில் எஸ். ஆசைமணியும், நாகப்பட்டினம் ம.சரவணனும், மதுரையில் விவிஆர் ராஜனும், தேனியில் ரவீந்திரநாத் குமாரும், திருநெல்வேலியில் மனோஜ் பாண்டியனும் போட்டியிடுகின்றனர். #LSPolls #ADMK
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X