search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Canonization"

    • புனிதர் பட்டம் பெற்ற தேவசகாயத்தின் உடல் நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டு உள்ளது.
    • கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி திருப்பலியை நிறைவேற்றினார்.

    குமரி மாவட்டம் நட்டாலத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்துக்கு கடந்த மாதம் 15-ந் தேதி வாடிகனில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்கினார். இதைத்தொடர்ந்து கோட்டார், குழித்துறை மறைமாவட்டம் சார்பில் தேசிய அளவிலான நன்றிவிழா கொண்டாட்டம் கடந்த 5-ந் தேதி ஆரல்வாய்மொழி அருகே உள்ள காற்றாடிமலையில் நடந்தது. விழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும், திருப்பலியும் நடந்தது.

    இதில் போப் ஆண்டவரின் இந்திய தூதர் லெயோபோல்டா ஜிரல்லி கலந்து கொண்டார். தமிழக ஆயர் பேரவை தலைவர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் திருப்பலி நடந்தது. விழாவில் 30-க்கும் மேற்பட்ட ஆயர்கள் மற்றும் தமிழக அமைச்சர்கள், பல்சமய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். பின்னர் போப் ஆண்டவரின் இந்திய தூதர் லெயோபோல்டா ஜிரல்லி தலைமையில் நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது.

    புனிதர் பட்டம் பெற்ற தேவசகாயத்தின் உடல் நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டு உள்ளது. தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டதையொட்டி கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் நன்றி விழா திருப்பலி நேற்று மாலையில் நடைபெற்றது. கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி திருப்பலியை நிறைவேற்றினார்.

    நிகழ்ச்சியில் மறைமாவட்ட முதன்மை அருட்பணியாளர் ஹிலாரியுஸ், மறைமாவட்ட பொருளாளர் அலோசியஸ் பென்சிகர், செயலாளர் இம்மானுவேல், வட்டார முதல்வர் சகாய ஆனந்த், சவேரியார் பேராலய பங்குதந்தை ஸ்டான்லி சகாயசீலன், உதவிப் பங்குத்தந்தையர்கள் பிரான்கோ, ஆன்றோ ஜெராபின், பங்கு பேரவை துணைத் தலைவர் ஜேசுராஜா, செயலாளர் ராஜன், துணைச் செயலாளர் ராஜன் ஆராய்ச்சி, பொருளாளர் ராபின் மற்றும் பங்கு பேரவை நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • புனிதர் பட்ட ஓராண்டு நிறைவு நன்றி திருப்பலி நடைபெறும்.
    • சிறப்பு நற்கருணை ஆசீர் நடக்கிறது.

    தேவசகாயம் கடந்த ஆண்டு மே மாதம் 15-ந் தேதி புனிதராக உயர்த்தப்பட்டார். அதன் முதலாம் ஆண்டு நிறைவு விழா தேவசகாயம் மவுண்டில் நேற்று தொடங்கியது. நேற்று மாலையில் ஜெபமாலை, புகழ்மாலை, மாலை ஆராதனை போன்றவை நடந்தது. விழாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு திருப்பலி, 8 மணிக்கு புனித மிக்கேல் அதிதூதர் கெபி அடிக்கல் நாட்டு விழா, மாலை 5 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, 5.30 மணிக்கு மலை வலம் வழிபாடு, சிறப்பு நற்கருணை ஆசீர் போன்றவை நடக்கிறது.

    நாளை (திங்கட்கிழமை) காலை 7 மணி தேவா மருத்துவமனை அருகில் திருப்பலி, 8 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் தேவா மருத்துவமனை திறப்பு மற்றும் அர்ச்சிப்பு, தொடர்ந்து மன்னா வீடு திறப்பு, அர்ச்சிப்பு நடக்கிறது. இரவு 7 மணிக்கு புனிதர் பட்ட ஓராண்டு நிறைவு நன்றி திருப்பலி நடைபெறும்.

    இதற்கான ஏற்பாடுகளை தேவசகாயம் மவுண்ட் திருத்தல அதிபர் சேவியர் பிரான்சிஸ், பங்குத்தந்தை பிரைட், துணை பங்குத் தந்தை ரெக்வின், பங்கு பேரவை துணைத்தலைவர், சிலுவைதாசன், செயலாளர் தேவசகாய டேவிட், பொருளாளர் மற்றும் கவுன்சிலர் ஜெனட் சதீஷ்குமார், துணைசெயலாளர் சகாய செலின், மற்றும் பங்கு அருட்பணி பேரவையினர், பங்குமக்கள் செய்துள்ளனர்.

    • சமீபத்தில் தேவ சகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது.
    • புனிதர் பட்டம் பெற்ற அவருக்கு நன்றி திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது.

    நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தில் புதுமை பரலோக அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இங்கு சமீபத்தில் புனிதர் பட்ட பெற்ற தேவ சகாயம் பிள்ளை இங்குதான் ஞானஸ்நானம் பெற்றார். இதையொட்டி புனிதர் பட்டம் பெற்ற அவருக்கு நன்றி திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக ஐதராபாத் கர்தினால் அந்தோனி பூலா, நெல்லை தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட ஆயர்கள் ஸ்டீபன், இவான் அம்புரோஸ், ரெமிஜியுஸ், ஜூடு பால்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    சபாநாயகர் அப்பாவு, ஞான திரவியம் எம்.பி. ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். மேலும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த திரளானகிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியையொட்டி பரதநாட்டியம், கோலாட்டம், குச்சிப்புடி போன்ற கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. வடக்கன்குளம் பங்குதந்தை ஜாண்பிரிட்டோ வரவேற்றார்.

    நிகழ்ச்சிகளை காவல்கிணறு பங்குதந்தை ஆரோக்கியராஜ் தொகுத்து வழங்கினார். இறுதியாக கர்தினால் தலைமையில் ஆடம்பர கூட்டு நன்றி திருப்பலியுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. விழாவில் அருட்தந்தையர்கள் பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை வடக்கன்குளம் பங்கு இறைமக்கள் செய்திருந்தனர்.

    ×