search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Car bomb தலிபான்"

    ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள், ராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் குழுமியிருந்த பகுதியில் இன்று நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் மற்றும் 16 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். #Taliban #Afghanceasefire #AfghanBlast
    காபூல் :


    இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானில் அரசு படைக்கும், தலிபான் அமைப்புக்கும் இடையே பல ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. 

    ஆனால், ரம்ஜானை முன்னிட்டு, அதற்கு முந்திய 5 நாட்கள் தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பு ஒன்றை ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி அறிவித்திருந்தார். இதனை ஏற்றுக்கொண்டு தலிபான்களும் நேற்று முதல் 3 நாட்கள் போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தனர். 

    ரம்ஜான் கொண்டாடப்படும் இன்று ஆயுதங்கள் ஏதும் இன்றி ஆப்கன் தலைநகர் காபூலுக்கு வந்த தலிபான் அமைப்பினர் அங்கிருந்த அரசு படையினரை கட்டித்தழுவி ரம்ஜான் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், பாதுகாப்பு படையினருடன் சேர்ந்து தலிபான்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். தலைநகர் காபூல் மட்டுமல்லாது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தாலிபன்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து ரம்ஜானை கொண்டாடி வந்தனர்.

    இந்நிலையில், அந்நாட்டின் ரோடாட் மாவட்டத்தில் உள்ள நானகராகர் பகுதியில் தாலிபன்கள், ராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் குழுமியிருந்த பகுதியில் திடீர் என காரில் இருந்து பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. 

    இந்த வெடிகுண்டு தாக்குதலில் தாலிபன்கள், பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் உள்பட சுமார் 20 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 16 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. #Taliban #Afghanceasefire #AfghanBlast
    ×