என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Car collision"

    • அடையாளம் தெரியாத கார் ஒன்று ராமசாமி மீது மோதி விபத்தை ஏற்ப்படுத்தியது.
    • இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு தலை உள்பட பல்வேறு இடங்களில் பலத்த ரத்த காயத்துடன் ரோட்டில் கிடந்துள்ளார்.

    பவானி:

    ஈரோடு சின்னசோமனூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (59). தனியாருக்கு சொந்தமான சைசிங் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு ராகுல் என்ற மகனும், கோபிகா என்ற மகளும் உள்ளனர்.

    சம்பவத்தன்று ராமசாமி இரவு 8 மணிக்கு வீட்டிலிருந்து கடைக்கு சென்று வருவதாக மனைவியிடம் தெரிவித்து சென்றுள்ளார். இந்நிலையில் சேலம்-கோவை பைபாஸ் ரோடு பவானி அருகிலுள்ள நசி யனூர், ஆட்டையாம்பா ளையம் பிரிவு பகுதியில் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத கார் ஒன்று ராமசாமி மீது மோதி விபத்தை ஏற்ப்படுத்தியது.

    இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு தலை உள்பட பல்வேறு இடங்களில் பலத்த ரத்த காயத்துடன் ரோட்டில் கிடந்துள்ளார்.

    இது குறித்து தகவல் அறிந்த சித்தோடு போலீசார் சம்பவ இடம் சென்று ராமசாமியின் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலே ராமசாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இச்சம்பவம் தொடர்பாக மனைவி பிரியா சித்தோடு போலீசாரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் சித்தோடு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பி ரமணியன் மற்றும் இன்ஸ்பெக்டர் முருகையன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய கார் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கார் மோதி முதியவர் பலியானார்.
    • பசும்பொன்னில் நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டவர்கள் கார்களில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் பருத்தியூர் பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 70). சேந்தகனி பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன்(65). இவர்கள் திருவாடானையை அடுத்த சின்னக்கீரமங்கலம் ரவுண்டானா பகுதியில் உள்ள கடை முன்பு நின்று கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக பசும்பொன்னில் நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டவர்கள் கார்களில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

    இதில் ஒரு கார் வேகமாக வந்தது. அது கடை முன்பு நின்று கொண்டிருந்த சிதம்பரம், வேல்முருகன் ஆகியோர் மீது பயங்கரமாக மோதியது. இதில் அவர்கள் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

    இந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விபத்தில் காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். வேல்முருகன் முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சை்காக காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இந்த விபத்து குறித்து திருவாடானை போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேர் மீது மோதிய காரை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி சென்ற கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

    • இளைஞர் இரவு ஒரு மணி அளவில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகி றார்கள்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பாதோ தனியார் பாலி டெக்னிக் என்ற இடத்தில் இளைஞர் இரவு ஒரு மணி அளவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற சொகுசு கார் அவர் மீது மோதி தலைக்கு ப்பராக கவிழ்ந்தது மோதிய விபத்தில் பெயர் ஊர் தெரியாத இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    தகவல்அறிந்த திரு நாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை க்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக கல்லூரி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வாகன விபத்தில் சிக்கியவரையும் மீட்டு உளுந்தூர்பேட்டைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகி றார்கள்.

    • நாங்குநேரியை சேர்ந்த சிவசக்தி, ஆறுமுகம் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்
    • பின்னால் நெல்லை நோக்கி வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள செண்பகராமநல்லூர், அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவசக்தி (வயது51). தச்சு தொழிலாளி. இவர் சம்பவத்தன்று தனது உறவினர் ஆறுமுகத்துடன் வள்ளியூருக்கு வந்தார்.

    பின்னர் இருவரும் ஆறுமுகத்திற்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். ஆறுமுகம் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றார். சிவசக்தி பின்னால் அமர்ந்திருந்தார்.

    நெல்லை-நாகர்கோவில் நான்குவழிச் சாலையில் வாகைகுளத்தில் இருந்து பட்டர்புரம் செல்ல சர்வீஸ் சாலையில் திரும்பிய போது, பின்னால் நெல்லை நோக்கி வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற சிவசக்தி, ஆறுமுகம் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். அக்கம், பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து இருவரும் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதுபற்றி நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

    • சேலம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நாமக்கல் முதலைப்பட்டி பைபாசில் சென்று கொண்டிருந்தது.
    • அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, கார் தாறுமாறாக ஓடியது.

    நாமக்கல்:

    ஆந்திர மாநிலத்தில் இருந்து சபரிமலைக்கு நேற்று இரவு ஒரு காரில் அய்யப்ப பக்தர்கள் 4 பேர் புறப்பட்டனர்.

    விபத்து

    அந்த கார் இன்று அதிகாலை சேலம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நாமக்கல் முதலைப்பட்டி பைபாசில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, கார் தாறுமாறாக ஓடியது. பின்னர் சென்டர் மீடியனில் கார் அதிவேகமாக மோதியது.

    இதில் காரின் முன் பகுதி பலத்த சேதமடைந்தது. காருக்குள் இருந்த 4 பேருக்கும் அடிபட்டு ரத்த காயங்களுடன் கதறினர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள், நாமக்கல் நல்லிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், அவர்களை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து நல்லிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், டிரைவர் தூங்கியதால் கார் தாறுமாறாக ஓடி விபத்தில் சிக்கியது தெரியவந்துள்ளது.

    • அந்த கார் திருச்சியில் இருந்து கடலூர் நோக்கி சென்ற அரசு பஸ்சின் பக்கத்தில் உரசி லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
    • இது குறித்து ஆவின ங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கொடிகளம் கிராமம் பஸ் நிறுத்தம் அருகில் விருத்தாச்சலம் -திட்டக்குடி சாலையில் பெண்ணாடம் இறையூர் கிராமத்திலிருந்து திட்டக்குடி நோக்கி சென்ற கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சென்றது.அப்போது அந்த கார் திருச்சியில் இருந்து கடலூர் நோக்கி சென்ற அரசு பஸ்சின் பக்கத்தில் உரசி லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நெய்வாசல் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தவேல் (28), பழனிவேல் மனைவி அன்புச்செல்வி (40) ,இறையூர் கிராமத்தைச் சேர்ந்த புண்ணியமூர்த்தி மகள் கலைமதி (20), ஆகியோர் காயம் அடைந்தனர்.

    இவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் திட்டக்குடி அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்று அங்கு முதல் உதவி அளித்தனர். பின் மேல் சிகிச்சைக்காக அரியலூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆவின ங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை மேற்கொண்டு வருகி ன்றனர்.

    • கிருஷ்ணமூர்த்தி தனது மகனை கல்லூரிக்கு அனுப்பி விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார்.
    • அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 52). இவர் கோவை கோர்ட்டில் குமஸ்தாவாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கவுரி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    இந்த நிலையில் இன்று காலை கிருஷ்ணமூர்த்தி தனது மகனை கல்லூரிக்கு அனுப்பி விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். அவர் பு.புளியம்பட்டி சத்திய மங்கலம் மெயின் ரோட்டில் வந்து கொண்டு இருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் கிருஷ்ண மூர்த்தி தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த அடிப்பட்டு படுகாயம் அடைந்தார்.

    இது பற்றி தகவல் கிடை த்ததும் பு.புளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்து க்கு வந்து அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து புஞ்சை புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி றார்கள்.

    • இன்று காலை கார்த்திகா தனது கணவர் சின்னராசுவின் அண்ணன் மகள் சாய் தனியா (5) என்பவருடன் மொபட்டில் வள்ளியூரில் இருந்து கேசவநேரிக்கு சென்று கொண்டிருந்தார்.
    • சிறுமி சாய் தனியா படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கேசவநேரியை சேர்ந்தவர் சின்னராசு. இவரது மனைவி கார்த்திகா ( வயது 20).

    கார் மோதல்

    இன்று காலை கார்த்திகா தனது கணவர் சின்னராசுவின் அண்ணன் மகள் சாய் தனியா (5) என்பவருடன் மொபட்டில் வள்ளியூரில் இருந்து கேசவநேரிக்கு சென்று கொண்டிருந்தார்.

    வள்ளியூர் நான்கு வழிச்சா லையை கடக்கும்போது நாகர்கோவிலில் இருந்து கோவை நோக்கி ஒரு கார் வந்தது. திடீரென அந்த கார் கார்த்திகாவின் மொபட் மீது பயங்கரமாக மோதியது. இதில் கார்த்திகா, சாய் தனியா ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர்.

    பரிதாப சாவு

    இதில் படுகாயம் அடைந்த கார்த்திகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமி சாய் தனியா படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வள்ளியூர் போலீசார் விரைந்து சென்று சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கார்த்திகா உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே சிறுமி சாய் தனியா பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக காரை ஓட்டி வந்த அமீர் என்பவர் மீது வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லோகநாதன் சொந்த வேலையாக தியாகதுருகத்தில் இருந்து எலவனாசூர்கோட்டைக்கு தனது மொபட்டில் நேற்று சென்று கொண்டிருந்தார்.
    • கார் அவரது மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த லோகநாதனை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் கோவிந்தபக்தர் தெருவைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 45). கூலி தொழிலாளி. இவர் சொந்த வேலையாக தியாகதுருகத்தில் இருந்து எலவனாசூர்கோட்டைக்கு தனது மொபட்டில் நேற்று சென்று கொண்டிருந்தார். அப்போது பெரியமாம்பட்டு அருகே சென்றபோது தனக்கு பின்னால் வந்த கார் அவரது மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த லோகநாதனை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக சேலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து அவரது தந்தை ராமமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் சேலம், காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் கார்த்திக் (33) என்பவர் மீது தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • ெதன்னமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் தீர்த்தமலை.
    • மினிலாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே உள்ள ெதன்னமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் தீர்த்தமலை. அவரது மகன் கார்த்திகேயன் (வயது 23). இவர் நேற்று இரவு தென்னமாதேவியில் இருந்து விழுப்புரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.தென்னமாதேவி டோல்கேட் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த மினிலாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கார்த்திகேயன் தூக்கி வீசப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை கார்த்திகேயன் இறந்தார். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் வழக்குபதிந்து லாரி டிரைவரை கைது செய்தனர்.

    • ராமநாதபுரத்தில் கார் மோதி வாலிபர் பலியானார்.
    • காரை ஓட்டி வந்த மண்டபத்தைச் சேர்ந்த அருள் ஜெபத்துறை மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே மேலவலசை கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி தமிழ்ச்செல்வி (வயது 47). இவர்களுக்கு திவாகர் (20) என்ற மகன் உள்ளார்.

    சம்பவத்தன்று திவாகருடன் தனது தாயாருடன் இரு சக்கர வாகனத்தில் ராமநாதபுரத்திற்கு சென்று பொருட்கள் வாங்கிவிட்டு திரும்பினர். ரெகுநாதபுரம் விலக்கு ரோடு அருகிலுள்ள குவார்ட்டர்ஸ் அருகில் வாகனத்தை நிறுத்தி தமிழ்செல்வியும், திவாகரும் ஆறுமுகத்தின் வருகைக்காக காத்திருந்தனர். அப்போது, ராமநாதபுரத்திலிருந்து ராமேசுவரம் நோக்கி வந்த நான்கு சக்கர வாகனம் நின்று கொண்டிருந்த தமிழ்ச்செல்வி மற்றும் அவரது மகன் திவாகர் ஆகியோர் மீது மோதியது. இதில் திவாகருக்கு தலையில் அடிபட்டு படுகாயமடைந்தார். தமிழ்ச்செல்விக்கும் காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் திவாகரை மீட்டு ராமநா தபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது தாய் தமிழ்ச்செல்வி அளித்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீசார் காரை ஓட்டி வந்த மண்டபத்தைச் சேர்ந்த அருள் ஜெபத்துறை மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தனது நண்பர்கள் ஸ்ரீநாத், நிதீஷ் ஆகியோருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
    • எதிரே வந்த மாருதி கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. .

    விழுப்புரம்:

    செஞ்சி அருகே உள்ள கொங்கரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சந்துரு (வயது 20) . இவர் தனது நண்பர்கள் ஸ்ரீநாத், நிதீஷ் ஆகியோருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றார். கொங்கரப்பட்டு வல்லம் இடையே சென்ற போது எதிரே வந்த மாருதி கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சந்துரு அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். மற்ற 2 பேரும் காயம் இன்றி தப்பினார்கள் .இது குறித்து செஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    ×