search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "car drivers struggle"

    மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிமுகம் செய்துள்ள ஷேர் டிரிப் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையம் முன்பு கார்களை நிறுத்தி டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    போரூர்:

    சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு மெட்ரோ ரயில் பயணிகள் வசதிக்காக ஆட்டோ மற்றும் கார்களை ‘ஷேர் டிரிப்’ முறையில் அறிமுகம் செய்து அதற்கு குறைந்த கட்டணம் நிர்ணயம் செய்து அறிவிப்பு வெளியிட்டது.

    அதன்படி ஆட்டோவில் 3கிலோ மீட்டருக்கு பயணம் செய்யும் ஒரு நபருக்கு 10 ரூபாய் கட்டணம் என்றும் ஏசி காரில் பயணம் மேற்கொள்ள 3கிலோ மீட்டருக்கு 15 ரூபாய் கட்டணம் என்று அறிவித்திருந்தனர்.

    இந்தநிலையில் வாடகை கார் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்த ஒப்பந்தத்தை உடனடியாக மெட்ரோ ரயில் நிர்வாகம் ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக சுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர் சங்க பொதுச்செயலாளர் ஜீட் மேத்யூ தலைமையில் கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலைய அலுவலகம் முன்பு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்கள் தங்களது கார்களை மெட்ரோ ரெயில் நிலையம் முன்பு நிறுத்தி கோ‌ஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் போலீசார் சமாதானம் பேசி கலைந்து போகச் செய்தனர். #MetroTrain
    ×