search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Carrot Poriyal"

    கோஸ், கேரட்டில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இந்த இரண்டு காய்கறிகளை வைத்து சத்தான பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    முட்டைக் கோஸ் - 250 கிராம்
    கேரட் - 100 கிராம்
    தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி
    துவரம் பருப்பு - 4 மேஜைக்கரண்டி
    ப.மிளகாய் - 3
    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க :

    கடுகு - 1 தேக்கரண்டி
    உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
    பெரிய வெங்காயம் - 1
    கறிவேப்பிலை - சிறிது
    எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 



    செய்முறை :

    துவரம் பருப்பை நன்றாக கழுவி வேக வைத்து கொள்ளவும்.

    வெங்காயம், முட்டைக் கோஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேரட்டை துருவியில் துருவிக் கொள்ளவும்.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, ப.மிளகாய், கறிவேப்பில்லை போட்டு தாளித்து பின் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அடுப்பை சிம்மில் வைத்து கோஸ், கேரட், உப்பு சேர்த்து வதக்கவும்.

    சிறிது தண்ணீர் தெளித்து 15 நிமிடங்கள் வரை நன்கு வதக்கவும்.  

    இறுதியில் தேங்காய்துருவல், வேக வைத்த பருப்பு போட்டு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

    கோஸ் கேரட் பொரியல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×