search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cash collected from Tasmac shops Keep only in safety box"

    • கடை பணியாளர்களின் இருப்பிடங்களுக்கு எடுத்து செல்லுதல் கூடாது.
    • உட்புறம் பூட்டிய நிலையில் வைத்து மது விற்பனை செய்ய வேண்டும்.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் மோகனசுந்தரம் மாவட்ட த்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மேற்பார்வை யாளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    டாஸ்மாக் கடைகளின் விற்பனை தொகை இருப்பை பண பாதுகாப்பு பெட்டியில் தினமும் வைத்து பூட்ட வேண்டும். கடை பணியாளர்கள் பாதுகாப்பு பெட்டியில் வைக்காமல், கடை மேஜை இருப்பறை, காலி அட்டை பெட்டிகள், கடை பணியாளர்களின் இருப்பிடங்க ளுக்கு எடுத்து செல்லுதல் கூடாது.

    விற்பனை நேரங்களில் கடைகளுக்கு முன் பொருத்தப்பட்டுள்ள இரும்பு கிரில் கேட்டை பூட்டாமல் விற்பனை செய்வதால் வெளி நபர், மர்ம நபர்கள் கடையினுள் புகுந்து பணியாளர்களை தாக்கும் சம்பவம் நடக்க வாய்ப்புள்ளது.

    எனவே, கடை இயங்கும் நேரமான மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை கடையின் இரும்பு கிரில் கேட்டை உட்புறம் பூட்டிய நிலையில் வைத்து மது விற்பனை செய்ய வேண்டும்.

    கடை பணியாளர்கள் விற்பனை தொகையை பண பாதுகாப்பு பெட்டியில் வைக்காமல் வீட்டுக்கு எடுத்து செல்லும்போது ஏற்படும் அசம்பாவித செயலுக்கு நிர்வாகம் பொறுப்பாகாது.

    விற்பனை தொகை இழப்பீட்டுக்கு காப்பீடு தொகை வழங்க இயலாது. மதுபான கடையின் 21 பதிவேடுகளை நடப்பு தேதி வரை முழுமையாக பதிவிட்டிருக்க வேண்டும்.

    இந்நடைமுறை தவறும்பட்சத்தில் நட வடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    ×