search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cashless transaction"

    • தமிழகம் முழுவதும் 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் செயல்படுகின்றன.
    • தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளும், யு.பி.ஐ.,வசதி பெற்றுள்ளன.

    திருப்பூர்:

    தமிழகத்தில் உள்ள 33 ஆயிரத்து 841 கூட்டுறவு ரேஷன் கடைகளிலும், பணமற்ற பரிவர்த்தனை விரைவில் அறிமுகப்படுத்தப்படுமென்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் உறுதியளித்துள்ளார்.

    தமிழகம் முழுவதும் 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் செயல்படுகின்றன. இவற்றில் காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியை தவிர்த்து மற்ற மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் அனைத்திலும், யு.பி.ஐ.,வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த வாரத்தில் காஞ்சிபுரம் வங்கியிலும் இந்த வசதி துவக்கப்பட்டது.

    இதன் மூலமாக தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளும், யு.பி.ஐ.,வசதி பெற்றுள்ளன. இந்த வங்கிகள் மற்றும் அதன் 922 கிளைகளிலும் உள்ள வாடிக்கையாளர்கள் பயன் அடைவார்கள்.இதனால் தனியார் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு ஈடாக வங்கிச் சேவைகளை அளிப்பதில் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளும், முழுத்திறனையும் பெற்றுள்ளன.

    இந்த வங்கிகளின் வாடிக்கையாளர்கள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் மூலமாகவும் NEFT மற்றும் RTGS உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் பெற முடியும். தமிழ்நாடு கூட்டுறவுத் துறையின் வரலாற்றில், இது ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது.அடுத்ததாக அனைத்து ரேஷன் கடைகளிலும் பணமற்ற பரிவர்த்தனை செய்வதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    முதற்கட்டமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 623 ரேஷன் கடைகள், கூட்டுறவு மருந்தகங்கள், கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டக சாலை உள்ளிட்ட அனைத்து கூட்டுறவு நிறுவனங்களிலும் பணமற்ற பரிவர்த்தனை சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    இது படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு மாநிலம் முழுவதிலும் உள்ள அனைத்து 33,841 கூட்டுறவு ரேஷன் கடைகள், 41 கூட்டுறவு விற்பனைப் பண்டக சாலைகள், 363 பிரதம கூட்டுறவுப் பண்டக சாலைகள், 380 கூட்டுறவு மருந்தகங்கள், 58 கூட்டுறவு பெட்ரோல் பங்க்களிலும் விரிவுபடுத்தப்பட உள்ளதாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் உறுதியளித்தார்.

    பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்க ரூபே கார்டு, பீம் செயலி யு.எஸ்.எஸ்.டி. மூலம் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு கேஷ் பேக் சலுகை அளிக்கும் திட்டம் பரீட்சார்த்த அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது. #GST
    புதுடெல்லி:

    இந்தியாவில் அமலில் இருந்து வந்த பல்வேறு மறைமுக வரிகளுக்கு மாற்றாக சரக்கு சேவை வரி (ஜி.எஸ்.டி.) கொண்டுவரப்பட்டது. இந்த புதிய வரிவிதிப்பு முறை கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. பொருட்கள் மற்றும் சேவைகள் மீது 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 விகிதங்களில் இந்த வரி விதிக்கப்படுகிறது.

    அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்கு இந்த வரி விதிக்கப்படுவது இல்லை. மேலும் பெட்ரோலிய பொருட்கள் மற்றும் மதுபானங்கள் சரக்கு சேவை வரி வரம்புக்குள் கொண்டு வரப்படவில்லை. அவற்றுக்கு தனியாக வரி விதிக்கப்படுகிறது.

    சரக்கு சேவை வரி தொடர்பான பிரச்சினைகளை ஆய்வு செய்ய மத்திய நிதி மந்திரி தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் மாநில நிதி மந்திரிகள் உறுப்பினர்களாக இடம்பெற்று உள்ளனர். இந்த கவுன்சில் அவ்வப்போது கூடி ஆலோசனை நடத்தி வருகிறது.

    இந்த கவுன்சில் எடுத்த முடிவின்படி, பல்வேறு பொருட்களின் மீதான சரக்கு சேவை வரி அவ்வப்போது மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. பல பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த நிலையில், ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 29-வது கூட்டம், மத்திய நிதி மந்திரி (பொறுப்பு) பியூஷ் கோயல் தலைமையில் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் சார்பில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் பல்வேறு மாநிலங்களின் மந்திரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டம் முடிந்ததும் பியூஷ் கோயல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மின்னணு மூலமாக நடைபெறும் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்க பீகார் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி தலைமையிலான மந்திரிகள் குழு ஒப்புதல் அளித்து உள்ளது. அதன்படி பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ரூபே கார்டு மற்றும் பீம் செயலி, யு.எஸ்.எஸ்.டி. மூலம் பணம் செலுத்தினால் மொத்த ஜி.எஸ்.டி.யில் 20 சதவீதம் கழிவு (கேஷ் பேக்) வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த வரிக்கழிவு அதிகபட்சம் ரூ.100 ஆக இருக்கும். பரீட்சார்த்த அடிப்படையில் சில மாநில அரசுகள் தாமாக முன்வந்து இந்த புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளன. இந்த திட்டத்துக்கு நல்ல பலன் இருந்தால் மாநிலங்கள் தொடர்ந்து இதை செயல் படுத்தலாம், இல்லையேல் கைவிட்டுவிடலாம். இது மாநிலங்களின் விருப்பத்தை பொறுத்தது.

    குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்சினைகள் பற்றி ஆய்வு செய்ய நிதி இலாகா ராஜாங்க மந்திரி சிவ பிரசாத் சுக்லா தலைமையில் துணைக்குழு ஒன்று அமைக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த குழுவில் டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா, பீகார் துணை முதல்-மந்திரி சுஷில்குமார் மோடி மற்றும் பஞ்சாப், கேரளா ஆகிய மாநிலங்களின் நிதி மந்திரிகள் இடம்பெறுவார்கள்.

    நிறைய பேருக்கு வேலைவாய்ப்பை அளிப்பதால் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் அளிக்கவேண்டும் என்று பெரும்பாலான மாநிலங்கள் கோரிக்கை விடுத்து உள்ளன.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    ×