search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "casualty"

    • பிரபாகரன் (வயது 25). கொத்தனார் பணி செய்கிறார். இவர் இன்று காலை வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் சேத்தியாத்தோப்பிற்கு வேலைக்கு வந்தார்.
    • சிலிண்டர் ஏற்றிக் கொண்டு வந்த லாரி ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    கடலூர்:

    காட்டுமன்னார்கோவில் பகுதி கலியன்மலை கிராமத்தைச் சேர்ந்த சிகாமணி மகன் பிரபாகரன் (வயது 25). கொத்தனார் பணி செய்கிறார். இவர் இன்று காலை வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் சேத்தியாத்தோப்பிற்கு வேலைக்கு வந்தார். ப்போது காட்டுமன்னார்கோவிலுக்கு சிலிண்டர் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று எதிரில் வந்தது. இந்த லாரி  சேத்தியாத்தோப்பு வாலைக்கொல்லை வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பிரபாகரன் துடிதுடித்து உயிரிழந்தார்.

    விபத்துக்குள்ளான லாரி அதே சாலையில் ஒரத்தில் இருந்த தடுப்புக் கட்டையில் மோதி நின்றது. இது குறித்து ஒரத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ஆரோக்கியதாஸ் (வயது 56). விவசாயி. இவர் கடந்த 9-ந்தேதி வெளி யூருக்கு சென்று விட்டு தனது மோட்டார் சைக்கி ளில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார்.
    • வீட்டின் அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென மோட்டார் சைக்கிள் கவிழ்ந்தது.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த இருளங்குப்பத்தை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் (வயது 56). விவசாயி. இவர் கடந்த 9-ந்தேதி வெளி யூருக்கு சென்று விட்டு தனது மோட்டார் சைக்கி ளில வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார்.

    அப்போது வீட்டின் அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென மோட்டார் சைக்கிள் கவிழ்ந்தது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கம் இருந்தவர்கள் இவரை மீண்டும் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மரில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செயது விசாரித்து வருகின்றனர்.

    • முனுசாமி (வயது 75). இவர் திண்டிவனம் ஜக்காம்பேட்டை சாலையை கடக்க முயன்றார்
    • அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் முதியவர் முனுசாமி மீது மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் ஜக்காம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (வயது 75). இவர் திண்டிவனம் ஜக்காம்பேட்டை சாலையை கடக்க முயன்றார். அப்பொழுது அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் முதியவர் முனுசாமி மீது மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்து மயிலம் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மகாராஜாவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த விபத்தால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • ராமலிங்கம் (வயது 62). இவரும் சந்திரசேகர் என்பவரும் மோட்டார் சைக்கிளில் சொந்த வேலையின் காரணமாக சென்றனர்,
    • பணிகளை முடித்துதிரும்பும்போது,அவருக்கு பின்னால் வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது,..

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நயினார் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 62). இவரும் அதே பகுதியை சேர்ந்த சந்திரசேகர் என்பவரும் மோட்டார் சைக்கிளில் நைனார்பாளையத்திலிருந்து கிருஷ்ணாபுரம் கிராமத்திற்கு சொந்த வேலையின் காரணமாக சென்றனர். அங்கு பணிகளை முடித்துக் கொண்டு மீண்டும் நயினார் பாளையம் வரும் போது கிருஷ்ணாபுரம் கிராம எல்லை சேலம் - விருத்தாசலம் நெடுஞ்சாலையில் உள்ள ஓட்டல் எதிரே சென்றபோது அதே திசையில் அவருக்கு பின்னால் வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் படுகாயம் அடைந்த ராமலிங்கம், சந்திரசேகர் ஆகியோரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சின்னசேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனனின்றி ராமலிங்கம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரமேஷ் (வயது 29) தனியார் பஸ் டிரைவர். இவர் பகண்டை கூட்டுரோட்டில் உள்ள தனது அக்காள் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்
    • திருவண்ணாமலை பகுதியில் இருந்து வந்த நெல் அறுவடை எந்திரம் ரமேஷ் மீது மோதியது

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே மூங்கில்துறைப்பட்டு பழையூர் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 29) தனியார் பஸ் டிரைவர். இவர் பகண்டை கூட்டுரோட்டில் உள்ள தனது அக்காள் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அங்கி ருந்து ஊருக்கு புறப்பட்டார். வடபொன்பரப்பி அடுத்த புதூர் ஏரிக்கரை அருகே உள்ள ஒரு வளைவு பகுதி யில் வந்து கொண்டிருந்த போது திருவண்ணாமலை பகுதியில் இருந்து வந்த நெல் அறுவடை எந்திரம் ரமேஷ் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்த வடபொன்பரப்பி போலீ சார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தி னர். பின்னர் விபத்தில் பலியான ரமேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பார்த்திபன் (வயது 40). இவர் வீட்டிற்கு தேவையான மளிகை ஜாமான்களை வாங்க நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.
    • அப்போது அவ்வழியே வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட பார்த்திபன் பலத்த காயங்களுடன்சங்கராபுரம் அரசு ஆஸ்பத்தி ரியில் அனுமதிக்கப்பட்டார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே அரியலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 40). இவர் வீட்டிற்கு தேவையான மளிகை ஜாமான்களை வாங்க நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் பகண்டை கூட்ரோட்டிற்கு சென்றார். அப்போது திருக்கோவிலூர்- சங்கராபுரம் நெடுஞ்சாலையை வனபுற்று மாரியம்மன் கோவில் அருகே கடக்க முயன்றார்.

    அப்போது அவ்வழியே வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட பார்த்திபன் பலத்த காயங்களுடன் சங்கராபுரம் அரசு ஆஸ்பத்தி ரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்ரோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பாலமேடு ஜல்லிக்கட்டில் உயிரிழந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
    • தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 9 காளைகளை அடக்கி 3-ம் இடத்தில் இருந்த பாலமேடு கிழக்கு தெருவை சேர்ந்த அரவிந்த்ராஜ் காளை முட்டியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    அவரது குடும்பத்திற்கு கொங்கு இளைஞர் பேரவை மாவட்ட தலைவர் பார்த்திபன், செயலாளர் தயாளன், இளைஞரணி பாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் நேரில் சென்று அவரது படத்திற்கு மாலை அணிவித்து குடும்பத்தி னருக்கு ஆறுதல் கூறினர்.

    பின்னர் அவரது தாயார் தெய்வானை நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக என் மகன் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பரிசுகளை வாங்கி குவித்து உள்ளான். இந்த ஆண்டு நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டில் 9 காளை களை அடக்கி பரிசுகளை பெற்று வீட்டில் கொண்டு வந்து சேர்த்து முதல் பரிசாக அந்த காரையும் பெற்றுதான் வீட்டிற்கு வருவேன் என சொல்லிவிட்டு சென்றான். ஆனால் அவன் வாங்கிய பரிசுகள் மட்டுமே வீட்டில் உள்ளது. அதை அனுபவிக்க என் மகன் உயிரோடு இல்லை. என் மகனை நம்பித்தான் என் குடும்பமே உள்ளது. அவனது இழப்பை எங்களால் ஏற்று கொள்ள முடியவில்லை. எனது குடும்பத்தில் ஒருவருக்கு தமிழக அரசு, அரசு வேலை வழங்கி உதவ வேண்டும்

    இவ்வாறு அவர் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எனது எண்ணங்கள் அன்புக்குரியர்களை இழந்தவர்களின் குடும்பத்தோடு உள்ளது.
    • காயம் அடைந்துள்ளவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்

    புதுடெல்லி:

    சென்னை கோயம்பேட்டில் இருந்து சிதம்பரம் நோக்கி இன்று காலை அரசு பஸ் (எண் 14) புறப்பட்டு சென்றது. சுமார் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

    காலை 8.10 மணியளவில் அச்சரப்பாக்கம் அடுத்த தொழப்பேடு அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பஸ் சென்று கொண்டு இருந்தது.

    அப்போது முன்னால் இரும்பு கம்பியை ஏற்றிக் கொண்டு திருச்சி நோக்கி லாரி ஒன்று சென்றது. அந்த லாரியை அரசு பஸ் டிரைவர் முந்தி செல்ல முயன்றார்.

    இதில் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் இடது புறத்தில் இருந்த லாரியின் பின்பக்கத்தில் அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில் பஸ்சின் இடதுபுறம் முழுவதும் நொறுங்கியது.

    இடதுபுற இருக்கைகளில் ஜன்னல் ஓரம் இருந்த 3 ஆண்கள், 2 பெண்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்ததும் அச்சரப்பாக்கம் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பின்னர் பலியான 5 பேரின் உடல்களையும் மீட்டு பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில், மேல் மருவத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற மற்றொரு ஆண் பயணியும் பரிதாபமாக இறந்தார்.

    இதனால் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. மேலும் சிலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்நிலையில், விபத்து குறித்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், "செங்கல்பட்டு அருகே நடந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது.

    எனது எண்ணங்கள் அன்புக்குரியர்களை இழந்தவர்களின் குடும்பத்தோடு உள்ளது. காயம் அடைந்துள்ளவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • பிளஸ்-2 மாணவர், டிரைவர் பரிதாப இறந்தார்.
    • இந்த விபத்து குறித்து சிங்கம்புணரி போலீசார் வழக்குப்பதிவு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள இ. புதுப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயபாண்டி. இவரது மகன் யுவராஜ் (வயது 17). பிளஸ்-2 முடித்துள்ள இவர் நேற்று திடீர் நகர் பகுதியைச் சேர்ந்த நண்பர் மோகன் (18) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார்.

    இ.புதுப்பட்டி பகுதியில் சென்று கொண்டி ருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி முன்னாள் சென்று கொண்டிருந்த சரக்கு வேன் மீது மோதியது.

    இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி ரோட்டில் கவிழ்ந்தது. இதில் யுவராஜ், மோகன் இருவரும் படுகாயம் அடைந்தனர் தலையில் பலத்த காயமடைந்த யுவராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உயிருக்கு போராடிய மோகன் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து உசிலம்பட்டி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தெற்கு தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 37), கனரக வாகன ஓட்டுனரான இவர் நேற்று இரவு பெட்ரோல் போடுவதற்காக திண்டுக்கல் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அந்த வழியாக செங்கல் ஏற்றி வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இருந்தார். இந்த விபத்து குறித்து சிங்கம்புணரி போலீசார் வழக்குப்பதிவு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சங்கராபுரம் அருகே ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில் ஒருவர் பலியானார்.
    • ஷ்பகிரி அருகே வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் கீழ்பாடி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (45). இவர் அதே பகுதியில் மெடிக்கல் நடத்தி வருகிறார். இவர் இளைய னார் குப்பத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு இருக்கர வாகனத்தில் சென்றார். பின் அங்கிருந்து கீழ்பாடி கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டி ருந்தார். புஷ்பகிரி அருகே வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்தினருக்கு காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. நிதி உதவி வழங்கினார்.
    • 2 மீனவர் குடும்பத்திற்கு எம்.எல்.ஏ. தனது நிதியிலிருந்து ரூ.50 ஆயிரம் வழங்கினார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள மாயாகுளம் ஊராட்சி மங்களேஸ்வரி நகரைச் சேர்ந்த பெரியசாமி. இவா்களது மகன்கள் முனியசாமி (30), அருண்குமாா் (24), காசிசுமன் (20) மலைச்செல்வம் (18). இவர்களுக்கு சொந்தமான நாட்டுப் படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற போது பலத்த காற்றில் படகு கவிழ்ந்து முனியசாமி, மலைச்செல்வன் ஆகியோர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.

    மீனவர் முனியசாமிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். தகவல் அறிந்த ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க, பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்தினரை அவர்களது வீட்டுக்கு சென்று முனியசாமியின் மனைவி சவுபாக்கியம், மலை செல்வத்தின் தாயார் வேளாங்கண்ணியை சந்தித்து ஆறுதல் கூறினார். 2 மீனவர் குடும்பத்திற்கு எம்.எல்.ஏ. தனது நிதியிலிருந்து ரூ.50 ஆயிரம் வழங்கினார்.

    மீனவர்களுக்கு வழங்கப்படும் அரசு நிதி உதவியும், முனியசாமி மனைவிக்கு அரசு வேலையும் வாங்கி தருவதாக எம்.எல்.ஏ. உறுதி அளித்தார். கீழக்கரை நகர் மன்ற துணைத் தலைவர் ஹமீது சுல்தான், தி.மு.க மாணவரணி அமைப்பாளர் இப்திகார் ஹசன், தி.மு.க மாவட்ட கவுன்சிலர் ஆதித்தன், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் சிவலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பாபநாசம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி ஆந்திரா வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாபநாசம்:

    ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் வத்திகுடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாபுராவ் மகன் வேமண்டு சீனு (வயது 38). இவர் தஞ்சாவூர்- விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை பணிக்காக பாபநாசம் அருகே மேல செம்மங்குடி கிராமத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

    நேற்று வேமண்டுசீனு பாபநாசத்திற்கு வந்து சாப்பிட்டு விட்டு மீண்டும் தங்கி வேலை பார்க்க கூடிய இடத்திற்கு அரயபுரம் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால் ஒன்பத்துவேலி மாதா கோவில் தெருவை சேர்ந்த சுரேஷ் (35) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக வேமண்டு சீனு மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட வேமண்டுசீனு சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மாள், சப்-இன்ஸ்பெக்டர் இளமாறன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.படுகாயம் அடைந்த சுரேசை தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ×