search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "casualty"

    பரமக்குடியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் தலையாரி பலியானார்.
    ராமநாதபுரம்:

    பரமக்குடி மைக்கேல் பட்டணத்தை சேர்ந்தவர் வேதமுத்து (வயது55). இவர் கமுதி தாலுகா கள்ளிகுளம் தலையாரியாக இருந்தார்.

    நேற்று பரமக்குடியில் இருந்து முதுகுளத்தூர் செல்வதற்காக வேதமுத்து மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது முன்னால் சென்ற சைக்கிளை சரியாக கவனிக்கவில்லை.

    அதன் மீது வேதமுத்து மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    சைக்கிளில் சென்ற கணக்கனேந்தல் ராமச்சந்திரன் (36) காயத்துடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். விபத்து குறித்து பரமக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேபிஇசக்கி பிரகதம்பாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வருகிறார்.
    விபத்தில் உயிரிழந்த சென்னை வாலிபரின் குடும்பத்துக்கு ரூ.16½ லட்சம் நஷ்டஈடு வழங்க இன்சூரன்சு நிறுவனத்துக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை ராமாபுரத்தை சேர்ந்தவர் ஆர்.நாராயணன். இவரது மகன் மணிகண்டன் (20). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ‘சூப்பர்வைசர்’ ஆக பணிபுரிந்தார். மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளம் பெற்று வந்தார்.

    இந்த நிலையில் பூந்தமல்லியை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தின் டேங்கர் லாரியில் அமர்ந்து பயணம் செய்தார். அவருடன் 2 ஊழியர்களும் இருந்தனர். அப்போது நடந்த விபத்தில் லாரி கவிழ்ந்து மரணம் அடைந்தார்.

    இச்சம்பவம் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 29-ந்தேதி அதாவது 4 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்தனர்.

    இதற்கிடையே விபத்தில் இறந்த மணிகண்டனின் தந்தை நாராயணன் சென்னையில் உள்ள மோட்டார் விபத்துகள் இழப்பீடு நடுவர்மன்ற கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    எனது மகன் மணிகண்டன் வருமானத்தில்தான் குடும்பம் இயங்கி வந்தது. தற்போது நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம். டிரைவர் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் லாரியை ஓட்டியதால் விபத்த ஏற்பட்டுள்ளது. எனவே லாரி நிறுவனமும், தனியார் இன்சூரன்சு நிறுவனமும், ரூ.20 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் விசாரணையின் போது லாரி நிறுவனம் ஆஜராகவில்லை. தனியார் இன்சூரன்சு கம்பெனியும் குற்றச்சாட்டுகளை மறுத்தது.

    ஆனால் வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.ரமேஷ் விபத்தில் மரணம் அடைந்த மணிகண்டன் குடும்பத்துக்கு தனியார் இன்சூரன்சு நிறுவனம் ரூ.16 லட்சத்து 42 ஆயிரம் நஷ்டஈடு தொகையை 2015-ம் ஆண்டு முதல் 7.5 சதவீத வட்டியுடன் வழங்க உத்தரவிட்டார். டிரைவர் அஜாக்கிரதையாகவும், அதிவேகமாகவும் லாரியை ஓட்டி விபத்து ஏற்படுத்தியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார். #Tamilnews

    பெரம்பலூர் அருகே இன்று அதிகாலை தனியார் ஆம்னி பஸ் கவிழ்ந்து சிறுவன் உள்பட 3 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு நேற்று இரவு தனியார் ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டது. அதில் சுமார் 40-க்கும் மேற்பட்ட பயணி கள் இருந்தனர்.

    அந்த பஸ் இன்று அதிகாலை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூரை அடுத்த விஜயகோபாலபுரம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து பஸ் தாறுமாறாக ஓடியது.

    இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சல் போட்டனர். அதற்குள் அந்த பஸ் சாலையின் நடுவில் இருந்த தடுப்பில் மோதி நிலை தடுமாறி நடுரோட்டில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் பேருந்தின் இடிபாட்டில் சிக்கி ஜக தாம்பிகை என்ற பெண், முகேஷ் என்ற 5 வயது சிறுவன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சிவா (30) என்பவர் மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் இறந்தார்.

    மேலும் இந்த விபத்தில் விபத்தில் படுகாயமடைந்த 7 பெண்கள் உட்பட 13 பேர் பெரம்பலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சம்பவ இடத்திற்கு சென்ற பாடாலூர் போலீசார் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விபத்தில் உயிரிழந்த 3 பேரும் தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் ஆவர். விபத்து காரணமாக தேசிய நெடுஞ் சாலையி நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதற்கிடையே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூர் அருகே மேலும் ஒரு பேருந்து கவிழ்ந்து 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விஜயகோபாலபுரத்தில் உள்ள தனியார் டயர் தொழிற்சாலைக்கு பெரம்பலூரில் இருந்து ஊழியர்களை ஏற்றிக் கொண்டு பஸ் சென்றது. அப்போது எதிரே திட்டக்குடி நோக்கி வந்த வந்த லாரி மீது எதிர்பாரதவிதமாக மோதியதில் பஸ் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் தனியார் டயர் தொழிற்சாலை ஊழியர்கள் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இரண்டு பேருந்துகள் ஒரே பகுதியில் அடுத்தடுத்து கவிழ்ந்ததால் போக்குவரத்து மேலும் பாதிக்கப்பட்டது.

    மோட்டார் சைக்கிள் விபத்தில் மூளைச்சாவு அடைந்த கூட்டுறவு நூற்பாலை ஊழியரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
    திருபுவனை:

    திருபுவனை பாலாஜி நகரை சேர்ந்தவர் ரகு (வயது55). இவர் திருபுவனை கூட்டுறவு நூற்பாலையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு குமுதசெல்வி என்ற மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சம்பவத்தன்று ரகு மோட்டார் சைக்கிளில் புதுவைக்கு சென்று கொண்டு இருந்தார்.

    திருபுவனை ஏரிக்கரை அருகே சென்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக ரகு ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரகு படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு ரகு மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று மாலை ரகு இறந்து போனதையடுத்து அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன.

    இந்த விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×