என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "caught"
- நிர்வாகம் பரம்ஜித் கவுர் விண்ணப்பத்தை நிராகரித்தது, மேலும் சிங் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
- பயோமெட்ரிக் கருவியில் பதிந்த அவரது கைரேகைகள் உண்மையான வேட்பாளரின் கைரேகைகளுடன் பொருந்தாததால் சிக்கினார்.
பஞ்சாப் மாநிலம் ஃபரித்கோட் பகுதியில் உள்ள ஆங்ரேஸ்சிங் என்ற நபர்,சுகாதாரப் பணியாளர்களுக்கான அரசாங்க தேர்வின் போது தனது காதலி போல் வேடம் போட்டு போலியாக நடிக்க முயன்றபோது கையும் களவுமாக பிடிபட்டார்.
அதிகாரிகளின் அறிக்கைகளின்படி, "ஆங்ரேஸ்சிங் பெண் வேடத்தில் ஜனவரி 7 ஆம் தேதி கோட்காபுராவின் டிஏவி பப்ளிக் பள்ளியில் தேர்வு எழுத வந்துள்ளார். அதற்காக, மேக்கப், பொட்டு மற்றும் சல்வார் கமீஸ் அணிந்து போலி வாக்காளர் மற்றும் ஆதார் அட்டைகளைப் பயன்படுத்தி தேர்வு எழுத வந்தார்" என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆவணங்கள் இருந்தபோதிலும், பயோமெட்ரிக் கருவியில் பதிந்த அவரது கைரேகைகள் உண்மையான வேட்பாளரின் கைரேகைகளுடன் பொருந்தாததால் சிங்கின் திட்டம் கண்டுபிடிக்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், அவர் தனது காதலி பரம்ஜித் கவுர் என்ற பெண்ணுக்காக போலி ஆவணங்களை பயன்படுத்தி தன்னை பெண்ணாக சித்தரித்து தேர்வு எழுத வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, நிர்வாகம் பரம்ஜித் கவுர் விண்ணப்பத்தை நிராகரித்தது, மேலும் சிங் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சிங்கின் மீது புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர் இப்போது கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் என்றும், முழுமையான விசாரணையில் அவரது செயல்களுக்கான கூடுதல் காரணத்தை கண்டறியப்படும் என்றும் எஸ்பி சிங் கூறினார்.
- விவசாய நிலத்தில் சோளத்தட்டு அறுவடை செய்யும் பணி நடைபெற்றது.
- அப்போது 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று சோளக்காட்டில் இருப்பது தெரியவந்தது.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே சங்கிலிமுனியப்பன் கோவில் பகுதியை சேர்ந்தவர் விவசாயி பாப்பாத்தி.
இவரது விவசாய நிலத்தில் சோளத்தட்டு அறுவடை செய்யும் பணி நடைபெற்றது. அப்போது 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று சோளக்காட்டில் இருப்பது தெரியவந்தது. இதனை கண்ட கிராம மக்கள் மலைப்பாம்பை உயிருடன் பிடித்து சாக்கு பையில் கட்டி மேட்டூர் வனத்துறை அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
பிடிபட்ட மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக எடுத்துச் சென்று தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள பாலாறு வனப்பகுதிக்குள் விட்டுச் சென்றனர்.
- கோழிக்கூண்டில் புகுந்த நான்கரை அடி நீளம் கொண்ட நாகப்பாம்பையும் பாண்டியன் லாவகமாக பிடித்தார்.
- அறையில் இருந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
சீர்காழி:
சீர்காழி அருகே மங்கைமடம் பகுதியில் ஸ்வீட் கடை குடோனில் இனிப்புகள் தயாரிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது அங்கு பொருட்கள் வைத்திருக்கும் பகுதியில் பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கடை உரிமையாளர் உடனே சீர்காழியை சேர்ந்த பாம்பு பிடிக்கும் நபரான பாம்பு பாண்டியனுக்கு தகவல் அளித்தார்.
அதன்படி அங்கு சென்ற பாம்பு பாண்டியன் ஸ்வீட் குடோனில் புகுந்திருந்த நான்கடி நீளம் கொண்ட நாகப் பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட்டார்.
இதேபோல் உச்சிமேட்டில் உள்ள வீட்டில் கோழிக்கூண்டில் புகுந்த நான்கரை அடி நீளம் கொண்ட நாகப்பாம்பையும் பாண்டியன் லாவகமாக பிடித்தார்.
அப்போது கோழியை விழுங்கி இருப்பது அறிந்த பாண்டியன் பாம்பை பிடித்த போது அது விழுங்கிய கோழியை கக்கி வெளியேற்றியது.
அதன் பின்னர் அந்த பாம்பைடப்பாவில் அடைத்து ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் கொண்டு விட்டார்.
இதேப்போல் சீர்காழி தலைமை தபால் நிலையத்தில் பதிவேடுகள் அறையில் இருந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து வன பகுதியில் கொண்டு விட்டனர்.
- புளியங்குடி சாலையில் சுற்றித்திரிந்த ஒரு நாய்க்கு திடீரனெ வெறி பிடித்தது.
- சிறுவன் உள்ளிட்ட 26 பேரை கடித்து குதறியது
புளியங்குடி:
புளியங்குடி பகுதியில் கடந்த சில நாட்களாக சாலைகளில் நாய்கள் சுற்றித்திரிந்தது. இந்நிலையில் நேற்று அதில் ஒரு நாய்க்கு திடீரனெ வெறி பிடித்தது.
சாலையில் சுற்றித்திரிந்த அந்த நாய் அந்த வழியாக சென்றவர்களை கடிக்க ஆரம்பித்தது. இதில் பள்ளி சென்று கொண்டிருந்த 9 வயது சிறுவன் மற்றும் பெண்கள், வயதான ஆண்கள் என 26 பேரை அந்த நாய் கடித்து குதறியது.
இதில் பாதிக்கப்பட்டவர்கள் புளியங்குடி அரசு மருத்துவ–மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்த நகர சேர்மன் விஜயா சவுந்தரபாண்டியன் புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு பழம், பிரட் உள்ளிட்டவைகளை வழங்கினார்.
அதனை தொடர்ந்து மருத்துவர்களிடம் தேவையான சிகிச்சைகளை விரைந்து வழங்க அறிவுறுத்தினார். வெறிநாயை உடனடியாக பிடிக்க தனிக்குழுவை அமைக்க நகராட்சி அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். அதன்படி இன்று காலை அந்த குழு அமைக்கப்பட்டு, அவர்கள் வெறிநாயை பிடித்தனர். பின்னர் அதனை காட்டுப்பகுதியில கொண்டு விட்டனர்.
- செல்போன்-பணம் திருடியவர்கள் சிக்கினார்கள்.
- அக்கம் பக்கத்தினர் கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
மதுரை
மதுரை மணி நகரம் மணி அய்யர் சந்தை சேர்ந்த கண்ணன் மகன் ராஜசேகர் (வயது33). இவர் தமிழ் சங்கம் ரோட்டில் உள்ள கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தார்.அப்போது அவரிடம் இருந்த செல்போனை ஒரு வாலிபர் திருட முயன்றார்.
அவரை அக்கம் பக்கத்தினர் கையும் களவுமாக பிடித்து போலீ சில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், தேனி மாவட்டம் ஆண்டிப் பட்டி கொண்டமநாயக்கன் பட்டி என்.ஜி.ஓ. நகரைச் சேர்ந்த ரத்தினம் மகன் பிரசாந்த் (26) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தம்பிபட்டி கிழக்கு தெருவை சேர்ந்த தங்கமணி மகன் காளி (20).இவர் மதுரை புதூர் 20 அடி ரோட்டில் நின்று கொண்டி ருந்தார். அந்த வழியாக வந்த 17 வயது சிறுவன் உள்பட 4 பேர் காளியை கல்லால் தாக்கி செல்போனை பறித்து தப்பினர். இது குறித்த புகாரின்பேரில் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
செல்போன் பறித்த 17 வயது சிறுவனுடன் சம்பக்குளம் மச்சக்காளை மகன் சக்திவேல் (22), வைரவன் மகன் ஊர்க்காவலன் என்ற பாண்டி (23) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.இதில் தொடர்புடைய மலைச்சாமியை தேடி வருகின்றனர்.
மதுரை கீழ வைத்திய நாதபுரம் 5-வது தெருவை சேர்ந்த அழகுவேல் மகன் தினேஷ் குமார் (29). இவர் ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.அவரிடம் இருந்த ரூ.500-ஐ ஒரு வாலிபர் திருடிக்கொண்டு தப்ப முயன்றார். தினேஷ்குமார் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் அவரை விரட்டிப்பிடித்து கரிமேடு போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பருத்தி கன்மாய் ரோட்டை சேர்ந்த சேதுபாண்டியன் மகன் முருகன்(36) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
செல்லூர் முத்துராம லிங்கபுரம் முதல் தெரு 60 அடி ரோட்டை சேர்ந்த ராஜசேகர பாண்டியன் மகன் விஜய் சுதர்சன் (26). இவர் தல்லாகுளம் பிள்ளை யார் கோவில் தெருவில் செ ன்று கொண்டி ருந்தார்.
அவரை 4 பேர் கொண்ட கும்பல் கத்தி முனையில் மிரட்டி ரூ.3 ஆயி ரத்தையும், செல்போ னையும் பறித்து தப்பியது. இதுகுறித்த புகாரின்பே ரில் தல்லா குளம் போ லீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளின் அடிப்படையில் நிலையூர் கைத்தறிநகர் செந்தில் மகன் கார்த்திக் என்ற சுள்ளான் கார்த்திக் (26), நெல்லை மாவட்டம் நான்குநேரி தேன்ராஜ் மகன் அலெக்ஸ் பாண்டியன் (23), மீனாம்பாள்புரம் பள்ளிவாசல் தெரு சங்கர் மகன் பிரவீன் குமார் என்ற சிரிப்பு பிரவீன் (26), செல்லூர் மீனாட்சிபுரம் வ.உ.சி.தெரு முனியாண்டி மகன் பிரவீன் என்ற மிட்டாய் பிரவீன் (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
- ஆயுதங்களுடன் பதுங்கியவர் கைது செய்யப்பட்டனர்.
- அவரிடமிருந்து அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை
புதூர் போலீசார் வடக்கு ஆர்.டி.ஓ. அலுவலக பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள புதர் அருகே வாலிபர் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தார். அவரை போலீசார் பிடித்தனர். அவரிடமிருந்து அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது. அவரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர் மேலமடை, ஆசாரி தெருவை சேர்ந்த கணேசன் மகன் பாலகுமார் என்ற தவளை பாலா (23) என்பது தெரிய வந்தது. இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் முன்விரோதம் உள்ளது.
சம்பந்தப்பட்ட நபரை கொலை செய்வதற்காக, தவளை பாலா, அரிவாளுடன் பதுங்கி இருந்ததும் தெரியவந்தது. அவரை புதூர் போலீசார் கைது செய்தனர்.
- பாம்பனில் வாளை மீன்கள் அதிக அளவில் பிடிபட்டது.
- உள்ளூர் பகுதி மக்களும் ஆர்வமுடன் வாளை மீன்களை வாங்கி சென்றனர்.
ராமேசுவரம்
ராமேசுவரம், பாம்பன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீன்பிடி தொழிலை நம்பி உள்ளனர். இலங்கை கடற்படை நடவடிக்கை காரணமாக ராமேசுவரம் பகுதி மீனவர்கள் முழுமையாக மீன்பிடி தொழிலில் ஈடுபட முடியாத சூழல் உள்ளது.
இதற்கிடையில் பாம்பனில் 80-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 4 ஆயிரம் மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு சென்றனர். இவர்கள் மன்னார் வளைகுடா கடலில் மீன்பிடித்து விட்டு பாம்பன் திரும்பினார்கள்.
இதில் பெரும்பாலான மீனவர்களுக்கு நல்ல மீன்பாடு கிடைத்தது. மீனவர்களின் வலைகளில் வௌ மீன், பாறை மீன், மா உழா உள்ளிட்ட பல்வேறு மீன்கள் சிக்கின. பல மீனவர்களின் வலைகளில் வாளை மீன்கள் அதிகமாக சிக்கி இருந்தன.
இதனால் வாளை மீன் சீசன் தொடங்கி உள்ள தாகவும், இனி வரும் நாட்க ளில் வாளை மீன்கள் அதிக மாக கிடைக்கும். சீசன் தொடங்கி உள்ளதால் வருமானம் அதிகரிக்கும் என்று மீனவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
வாளை மீன் கிலோ ரூ.120 முதல் ரூ.150 வரை விறபனையாகின. அவை களை வியாபாரிகள் வாங்கி கேரள மீன் மார்க்கெட்டு களுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உள்ளூர் பகுதி மக்களும் ஆர்வமுடன் வாளை மீன்களை வாங்கி சென்றனர்.
- பெண்ணிடம் நகை பறித்த கொள்ளையன் கைது செய்யப்பட்டான்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை பரவையை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி சசிகலா (வயது 46). இவர் சம்பவத்தன்று மதுரை-திண்டுக்கல் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர் சசிகலா அணிந்தி ருந்த தங்க செயினை பறித்தான்.
அப்போது அவர் செயினை பிடித்துக் கொண்டதால் அது 2 துண்டானது. இதில் ஒரு பகுதியை மர்ம நபர் கொண்டு சென்று விட்டான். இதுபற்றி சசிகலா செல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.இதுபற்றி தகவலறிந்த மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் சம்பந்தப் பட்ட குற்றவாளியை கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் மாநகர வடக்கு துணை கமிஷனர் அரவிந்த் மேற்பார்வையில், செல்லூர் போலீஸ் உதவி கமிஷனர் விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார் நகைபறிப்பு சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி அவற்றில் இடம் பெற்று உள்ள காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் சசிகலாவிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் வந்த மோட்டார் சைக்கிளின் பதிவெண் தெரிய வந்தது.
அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது செயின்பறிப்பில் ஈடுபட்டவர் மதுரை கிருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்த விஜயகாந்த் என்பது தெரியவந்தது. வீட்டில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.
அவர் வேறு செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முக்கூடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சமீப காலமாக மலைப்பாம்புகள் பிடிபட்டு வருவது அதிகமாகி வருகிறது.
- மீன் பிடிப்பதற்காக வைக்கப்பட்ட வலையில் சுமார் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சிக்கியது.
முக்கூடல்:
முக்கூடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சமீப காலமாக மலைப்பாம்புகள் பிடிபட்டு வருவது அதிகமாகி வருகிறது.
இந்நிலையில் இன்று பாப்பாக்குடி அருகிலுள்ள செங்குளம் வாய்க்கால் பகுதியில் இடைகாலை சேர்ந்த சுடலைமணி என்பவர் மீன் பிடிப்பதற்காக வைக்கப்பட்ட வலையில் சுமார் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சிக்கியது. வலையில் மீனுக்கு பதிலாக மலைப்பாம்பு சிக்கியதை பார்த்தவர்கள், வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக வனத்துறையில் இருந்து வந்த வேட்டை தடுப்பு காவலர் முருகனிடம் ஒப்படைத்தனர்.
இந்தப் பகுதிகளில் பாம்பு, கரடி, மான், மிளா, காட்டுப்பன்றிகள் அடிக்கடி வருவதால் காட்டுப்பகுதிக்குள்ளும், ஆற்றில் குளிக்க செல்பவர்களும், குளங்களுக்கு செல்பவர்களும் மிகுந்த கவனத்துடன் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் என்றும், குறிப்பாக இரவு நேரங்களில் இப்பேற்பட்ட இடங்களில் தனியாக செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
- நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி தெருக்களில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க உத்தரவிட்டார்.
- பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தெருக்களில் சுற்றி திரிந்த 40 தெரு நாய்களை வலை வீசி பிடித்தனர்.
நெல்லை:
நெல்லை மாநகர பகுதிகளில் பல்வேறு இடங்களில் பொது மக்களையும், வாகன ஓட்டி களையும் அச்சுறுத்தும் வகையில் தெருநாய்கள் சுற்றி வருவதாகவும், அதனால் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்படுவதாகவும் பல்வேறு தரப்பினரிடம் இருந்து நெல்லை மாநகராட்சிக்கு புகார்கள் வந்தது.
இதனையடுத்து நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி தெருக்களில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க உத்தரவிட்டார்.
அதன்பேரில் மாநகர நல அலுவலர் சரோஜா, உதவி கமிஷனர் வாசுதேவன், சுகாதார அலுவலர் சாகுல் ஹமீது ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில், சுகாதார ஆய்வாளர் முருகன் தலைமையில் இன்று 2-வது நாளாக பணியாளர்கள் தச்சை மண்டலம் பகுதிக்கு உட்பட்ட நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை, செல்வி அம்மன் கோவில், உடையார்பட்டி, மீனாட்சிபுரம், எஸ்.என் ஹைரோடு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தெருக்களில் சுற்றி திரிந்த 40 தெரு நாய்களை வலை வீசி பிடித்தனர்.
மேலும் நெல்லை மாநகராட்சி முழுவதும் இந்த பணி தொடர்ந்து நடைபெறும் என மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
- மதுரையில் மாயமான வாலிபர் காதலியுடன் சிக்கினார்.
- அவர்கள் சுப்பிரமணியபுரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, அவரவர் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மதுரை
மதுரை கீழமுத்துபட்டடி முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துபாண்டி மகன் சதீஷ்குமார் (வயது 23). இவர் ஐ.டி.ஐ. முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருந்தார். சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்து மாயமானார். இதுகுறித்து சுப்பிரமணியபுரம் போலீ சில் புகார் செய்யப்பட்டது.
இன்ஸ்பெக்டர் சங்கீதா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் சதீஷ்குமார், வீட்டுக்கு தெரியாமல் வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்ததும், அவருடன் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் சதீஷ்குமார் காதலியுடன் பிடிபட்டார். அவர்கள் சுப்பிரமணியபுரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, அவரவர் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
- மதுபாட்டில் பதுக்கிய 5 பேர் போலீசாரிடம் சிக்கினர்.
- அவர்கள் மீது ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் உட்கோட்ட பகுதியில் சட்ட விரோதமாக மதுபானம் வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க டி.எஸ்.பி. சபரிநாதன் உத்தரவிட்டார். இதையடுத்து உட்கோட்டபகுதியில் உள்ள காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் சோதனை நடத்தினர்.
இதில் பிள்ளையார் குளத்தைச் சேர்ந்த சேகர் என்பவரிடம் இருந்து 46 மது பாட்டில்களும், ரூ.1580-ம், ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த கணேசன் என்பவரிடம் இருந்து 8 மது பாட்டில்களும், ரூ.1,360-ம், அத்திகுளத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரிடம் இருந்து 26 பாட்டில்களும், ரூ.1660-ம், மம்சாபுரத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரன் என்பவரிடம் இருந்து 11 மது பாட்டிலும், அதே பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் என்பவரிடம் இருந்து 7 மதுபாட்டிலும், கைப்பற்றப்பட்டன. அவர்கள் மீது ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்