என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » cbr250r
நீங்கள் தேடியது "CBR250R"
இந்தியாவில் ஹோன்டா நிறுவனத்தின் சிபி ஹார்னெட் 160ஆர் மற்றும் சிபிஆர்250ஆர் மோட்டார்சைக்கிள்களின் புதிய விலையை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
ஹோன்டா நிறுவனத்தின் சிபி ஹார்னெட் 160ஆர் மற்றும் சிபிஆர்250ஆர் மோட்டார்சைக்கிள்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இரண்டு பிரீமியம் மோட்டார்சைக்கிள்களின் விலையில் ரூ.559 அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் இவை அனைத்து வேரியன்ட்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஹோன்டா சிபி ஹார்னெட் 160ஆர் பேஸ் மாடலின் புதிய விலை ரூ.85,234, டாப் என்ட் ஏபிஎஸ் மாடல் ரூ.92,675 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று சிரிஆர்250ஆர் பேஸ் மாடல் விலை ரூ.1,64,143 என்றும் டாப் என்ட் ஏபிஎஸ் மாடல் விலை ரூ.1,93,666 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம், டெல்லி ஆகும்.
இரண்டு பிரீமியம் மோட்டார்சைக்கிள்களும் 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டன. சிபி ஹார்னெட் 160ஆர் இந்தியாவில் ஹோன்டா நிறுவனத்தின் அதிகம் விற்பனையான மோட்டார்சைக்கிளாக இருக்கிறது.
ஒட்டுமொத்த வடிவமைப்பு மற்றும் பிரான்டு மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் ஹோன்டா சிபி ஹார்னெட் 160ஆர் விற்பனைக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது. இந்தியாவில் சிபிஆர்250ஆர் மோட்டார்சைக்கிள் எதிர்பார்த்த வரவேற்பை பெறாத நிலையில், 2018 சிபிஆர்250ஆர் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
×

X