search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CCTV scam"

    டெல்லியில் பெண்களின் பாதுகாப்பு கருதி சிசிடிவி கேமரா பொருத்தும் திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகளை சிபிஐ விசாரிக்க வேண்டும் என கோரி காங்கிரஸ் நிர்வாகிகள் துணை நிலை ஆளுநரை சந்தித்துள்ளனர். #CCTVscam #congress #Kejriwal
    புதுடெல்லி :

    பெண்களின் பாதுகாப்பு கருதி டெல்லி முழுவதும் சுமார் ஒன்றரை லட்சம் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த ஆளும் ஆம் ஆத்மி அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், இதற்கான டெண்டர் விடப்பட்டதில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இந்த திட்டத்துக்கு கவர்னர் அனில் பைஜால் ஒத்துழைப்பு வழங்காமல் காலம் தாழ்த்தினார்.

    டெல்லியில் சிசிடிவி கேமரா பொருத்தும் திட்டத்திற்காக விடப்பட்ட டெண்டரில் சீன நிறுவனம் பயன்பெரும் வகையில் 571 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது என ஆளும் ஆம் ஆத்மி அரசு மீது காங்கிரஸ் தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை கூறிவந்தது.

    இந்நிலையில், சி.சி.டி.வி. கொள்முதலில் ஊழல் நடைபெற்றுள்ளதால் அதை வெளிக்கொண்டு வர சிபிஐ விசாரணை கோரி காங்கிரஸ் சார்பில் துணை நிலை ஆளுநரான அனில் பைஜாலை, மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் மாகேன் தலைமையில் அம்மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் சந்தித்து முறையிட்டுள்ளனர்.

    கவர்னர் சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அஜய் மாகேன் கூறியதாவது, “ டெல்லியில் சிசிடிவி கேமராக்களை பொருத்தும் திட்டத்திற்கு மாநில அமைச்சரவை அல்லது ஆளுனரின் ஒப்புதல் இல்லாமல் சீன நிறுவனம் பயன்பெரும் வகையில் முழுக்க முழுக்க முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மட்டுமே இதில் முடிவெடுத்துள்ளார். எனவே, மத்திய ஊழல் கண்கானிப்பு ஆணையம் மற்றும் உள்துறை அமைச்சகங்களிடம் இந்த ஊழல் குறித்து விசாரனை நடத்த காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்படும்” என அவர் தெரிவித்தார். #CCTVscam #congress #Kejriwal
    டெல்லியின் முக்கிய பகுதிகளை கண்காணிக்க சி.சி.டி.வி. கொள்முதலில் ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டும் காங்கிரஸ் சார்பில் நாளை அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறுகிறது. #CCTVscam #congress #Kejriwal
    புதுடெல்லி:

    பெண்களின் பாதுகாப்பு கருதி டெல்லி முழுவதும் சுமார் ஒன்றரை லட்சம் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த ஆளும் ஆம் ஆத்மி அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், இதற்கான டெண்டர் விடப்பட்டதில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இந்த திட்டத்துக்கு கவர்னர் அனில் பைஜால் ஒத்துழைப்பு வழங்காமல் காலம்தாழ்த்தி வருகிறார். 

    இந்நிலையில், சி.சி.டி.வி. கொள்முதலில் ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டும் காங்கிரஸ் சார்பில்  மெழுகு வர்த்திகளை ஏந்தி ஊர்வலமாக சென்று அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நாளை நடைபெறுகிறது. 

    அரவிந்த் கெஜ்ரிவால் முதல் மந்திரி பதவியில் இருந்து விலக வேண்டும் என்று நடைபெறும் இந்த போராட்டத்துக்கான அறிவிப்பை டெல்லி காங்கிரஸ் பிரமுகர்கள் அரவிந்தர் சிங் லவ்லி மற்றும் ஹாரூன் யூசுப் இன்று மாலை வெளியிட்டனர்.

    டெல்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான் தலமையில் நடைபெறும் இந்த போராட்டத்தில் காங்கிரசார் பெரும் திரளாக கலந்துகொள்ள வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். எங்களது குற்றச்சாட்டு பொய் என்றால் அரவிந்த் கெஜ்ரிவால் எங்கள்மீது மான நஷ்ட வழக்கு தொடரட்டும் எனவும் அவர்கள் சவால் விட்டுள்ளனர். #CCTVscam #congress #Kejriwal
    ×