search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CEC OP Rawat"

    ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் மற்றும் தெலங்கானா உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் இன்று அறிவித்தார். #5StateElection #CECOPRawat
    புதுடெல்லி :

    ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களின் சட்டப்பேரவை ஆயுட்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதமும் மிசோரம் மாநில சட்டப்பேரவை ஆயுட்காலம் டிசம்பர் 15-ம் தேதியும் நிறைவடைகிறது. இதனால், இந்த மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

    மேலும், சமீபத்தில் கலைக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்திற்கும் இந்த 4 மாநிலங்களுடன் சேர்த்து தேர்தல் நடத்த ஆணையம் முடிவு செய்திருந்தது.

    இதனிடையே, நாடுமுழுவதும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்படும் 5 மாநில தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. புதுடெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் 5 மாநிலத்திற்கும் டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்தார்.

    மேலும், அந்த மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று முதல் உடனடியாக அமலுக்கு வருவதாக அவர் அறிவித்தார்.  இந்த தேர்தலின் போது யாருக்கு வாக்கு அளித்தோம் என்பதை வாக்காளர்கள் பார்க்கும் ஒப்புகை சீட்டு வாக்கு எந்திரம் பயன்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

    சத்தீஸ்கர் மாநிலத்திற்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக நவம்பர் 12-ம் வாக்குப்பதிவு  நடைபெறும். இரண்டாம் கட்டமாக நவம்பர் 20-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    மத்தியப்பிரதேசம், மிசோரம் மாநிலங்களில் ஒரே கட்டமாக நவம்பர் 28-ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும்.  அடுத்ததாக ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக டிசம்பர் 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.

    மேலும், 5 மாநில தேர்தல்களில் பதிவான வாக்குகள் டிசம்பர் 11-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்  என தேர்தல் ஆணையர் அறிவித்தார்.

    கர்நாடக மாநிலத்தில் சிமோகா, பெல்லாரி மற்றும் மாண்டியா மக்களவை தொகுதிகளுக்கு நவம்பர் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. #5StateElection #CECOPRawat
    ×