என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "center"

    • இந்த மையமானது வட்டார அளவிலான கூட்டமைப்பு மூலம் செயல்படுத்தப்படுகிறது.
    • பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பிரத்தியேகமான அமைப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தேசிய ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் ,பட்டுக்கோட்டை ஆகிய இரண்டு வட்டாரங்களில் பாலின வள மையம் ,வானவில் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த மையமானது வட்டார அளவிலான கூட்டமைப்பு மூலம் செயல்படுத்தப்படுகிறது. குடும்ப வன்முறை மற்றும் பெண் குழந்தைகள் மீதான வன்கொடுமை உள்பட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பிரத்தியேகமான அமைப்பாக உருவாக்கப்பட்டு ள்ளது.

    இந்த மையம் தஞ்சாவூர் வட்டாரத்தில் வட்டார சேவை மையத்திலும், பட்டுக்கோட்டை வட்டா ரத்தில் ஆலடிக்கு முலை கிராம மையத்திலும் செயல்பட்டு வருகிறது.

    இந்தப் பாலின சேவை மையத்தி னை பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் தொடர்புடைய வட்டார இயக்க மேலாளர்களை தொடர்பு கொண்டு பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு தஞ்சாவூர் வட்டார பாலின சேவை மையத்தை 8754990178 என்ற எண்ணிலும், பட்டுக்கோட்டை வட்டார சேவை மையத்தை 6369849825 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழக அமைச்சர்கள் ராமச்சந்திரன் (சுற்றுலா), சி.வி.கணேசன் (தொழிலாளர் நலத்துறை) ஆகியோர் தொடங்கி வைத்தனர்
    • தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் 11 இடங்களில் ரூ.95.06 கோடி மதிப்பில் புதிய அரசு தொழில்பயிற்சி நிலையங்கள் தொடங்கி வரலாற்று சாதனை படைத்ததாக அமைச்சர் பெருமிதம்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் அரசு ஐ.டி.ஐ நிறுவனம் இயங்கி வருகிறது. அங்கு தற்போது ரூ.34.65 கோடி மதிப்பில் 4.0 தொழில்நுட்பமையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கான திறப்பு விழா நேற்று நடந்தது.

    இதில் தமிழக அமைச்சர்கள் ராமச்சந்திரன் (சுற்றுலா), சி.வி.கணேசன் (தொழிலாளர் நலத்துறை) ஆகியோர் சிறப்பு விருந்தி னர்களாக கலந்து கொண்டு புதிய மையத்தை குத்துவிள க்கேற்றி தொடங்கி வைத்த னர்.நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலா ளர் குமார்ஜெயந்த், மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து தொழிலாளர் நலன் மற்றும் திறன்மே ம்பாட்டுத்தறை அமைச்சர் சி.வி.கணேசன் நிகழ்ச்சியில் பேசும்போது கூறியதாவது:-

    குன்னூர் அரசினர் தொழில்பயிற்சி மையத்தில் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து ரூ.34.65 கோடி மதிப்பில் 4.0 தொழில்நுட்ப மையம் திறக்கப்பட்டு உள்ளது.

    உலகளவில் மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப புதிதாக உருவாகும் வேலைவாய்ப்புகளை தமிழக இளைஞர்களும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் டாடா நிறுவனத்தின் சமூக பங்களிப்புடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

    குன்னுார் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடப்பாண்டு 90 சதவீதம் மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளது. அதனை தற்போது 100 சதவீதமாக உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    வெளிநாட்டில் உள்ள மாணவர்கள் பயிலும் சி.என்.சி மற்றும் ரோபோட்டிக்ஸ் போன்ற நவீன தொழில்நுட்ப கல்வியை தமிழக மாணவர்களும் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    குன்னூர் தொழில்பயிற்சி மையத்தில் படித்தவர்களில் 83 சதவீதம் மாணவர்கள் பல்வேறு இடங்களில் பணியில் சேர்ந்து உள்ளனர். உயர்கல்வி முடித்தவர்கள் கூட வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தொழில்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து படித்து வருகின்றனர்.

    தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் 11 இடங்களில் ரூ.95.06 கோடி மதிப்பில் புதிய அரசு தொழி ல்பயிற்சி நிலையங்கள் தெடங்கப்ப ட்டு உள்ளன. இது வரலாற்று சாதனை ஆகும்.

    அரசு தொழி ல்பயிற்சி நிலையத்தில் பயிற்சியை முடிக்கும் மாணவர்கள், உள்நாடு-வெளிநாடு களில் உள்ள முன்னணி நிறுவனத்தில் பணியம ர்த்தப்படுவர். எனவே மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் விடாமுயற்சியுடன், என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையோடு படிக்க வேண்டும்.

    முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. மேலும் இங்கு படிக்கும் மாணவர்கள் சக நண்பர்களும் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்ந்து படிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் சி.வி.கணேசன் கூறினார்.

    • 22 பெண் சுகாதார தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
    • மக்களை தேடி மருத்துவ உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாநகராட்சி பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில் தமிழகத்தில் முதல் முறையாக மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்திற்காக உதவி மையத்தை மேயர் சண். ராமநாதன் திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் துணை மேயர் டாக்டர். அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் மற்றும் மாநகர்நல அலுவலர் டாக்டர். சுபாஷ்காந்தி, மண்டல குழு தலைவர்கள், உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் கவுன்சி லர்கள், டாக்டர்கள், செவிலியர்கள், ஆய்வக நுட்புநர் மற்றும் 22 பெண் சுகாதார தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் தொற்றா நோய் பிரிவு செவிலியர்கள், ஆய்வக நுட்புணர்கள் மற்றும் 22 பெண் சுகாதார தன்னார்வலர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. தஞ்சாவூர் மாநகராட்சியின் இந்த மக்களை தேடி மருத்துவ உதவி மையத்தை 78458 49867 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    • புதுவை பல்கலைக்கழகத்தில் நிலைத்தன்மை மற்றும் காலநிலை மாற்றத்திற்கான மையம் தொடங்கப்பட்டுள்ளது.
    • தலைவர் மதிமரன் நடராஜன், மையத்தின் நோக்கம் குறித்து விளக்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை பல்கலைக்கழகத்தில் நிலைத்தன்மை மற்றும் காலநிலை மாற்றத்திற்கான மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழாவில் புதுவை பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் துறை தலைவர் சுப்பிரமணியம் ராஜூ வரவேற்றார். கல்வி புதுமைகள், கிராமப்புற மறுசீரமைப்பு இயக்குனர் தரணிக்கரசு தொடக்க உரையாற்றினார். மையத்தின் தலைவர் மதிமரன் நடராஜன், மையத்தின் நோக்கம் குறித்து விளக்கினார்.

    துணைவேந்தர் குர்மீத்சிங் தலைமை வகித்து மையத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். பதிவாளர் ராஜ்நீஷ்பூதானி, சுற்றுச்சூழல் துறை தலைவர் ராமமூர்த்தி சிறப்புரை யாற்றினர். பெங்களூருவில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரக தலைமை நிர்வாக அதிகாரி ஜோனாஸ்பு ருன்ஸ்வி தனது கருத்துக்களை பகிர்ந்தார்.

    அரசியல், சர்வதேச ஆய்வுகள் துறை இணை பேராசிரியர் நந்தகிஷோர் நன்றி கூறினார்.

    • ஆதார் கார்டுக்கு பதிய போட்டோ எடுக்கும்போது ஒரு சிறுமி அழகழகாக போஸ் கொடுக்கும் வீடியோ இணையத்தையே கலக்கி வருகிறது.
    • மற்ற நடைமுறைகள் அனைத்தும் முடிந்த பிறகு போட்டோ எடுக்க அந்த சிறுமியை கேமரா முன்னர் நிற்க வைத்துள்ளனர்.

    இந்தியர்களின் அத்தியாவசிய அடையாள அட்டையாக மாறிப்போன ஆதார் கார்டு போட்டோ நன்றாக இல்லை என்ற கவலை பலருக்கு உண்டு. இருட்டடித்த போட்டோக்களும், நேரில் இருக்கும் மனிதர்க்கு சுத்தமாக சம்பந்தமாக இல்லாத வகையில் ஆதார் கார்டில் அவரது போட்டோ உள்ளது என்ற அபிப்பிராயங்கள் பரவலாக உள்ளன.

    இந்நிலையில் ஆதார் கார்டுக்கு பதிய போட்டோ எடுக்கும்போது ஒரு சிறுமி அழகழகாக போஸ் கொடுக்கும் வீடியோ இணையத்தையே கலக்கி வருகிறது. முதல் முதலாக அந்த சிறுமிக்கு ஆதார் கார்டு பதிய ஆதார் சேவை மையத்துக்கு பெற்றோர்கள் அழைத்துச் சென்றுள்ளனர்.

    அங்கு மற்ற நடைமுறைகள் அனைத்தும் முடிந்த பிறகு ஆதார் கார்டுக்கு போட்டோ எடுக்க அந்த சிறுமியை கேமரா முன்னர் நிற்க வைத்துள்ளனர். அப்போது தனது கன்னத்தில் கை வைத்தும் பல வழிகளில் அந்த சிறுமி உற்சாகமாக போஸ் கொடுத்த்து அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளார். இந்த வீடியோ இஸ்டாகிராமில் 18  மில்லயன் பார்வைகளைத் தாண்டி கலக்கி  வருகிறது.

    சேலம் பட்டர்பிளை மேம்பாலம் அருகே சென்டர் மீடியனில் மோதி லாரி விபத்துக்குள்ளானது.
    சேலம்:
     ஈரோடு மாவட்டம் பெருந்துறையில்  இருந்து நேற்றிரவு ஒரு லாரி இரும்பு
    லோடு ஏற்றி கொண்டு  விழுப்புரம்  மாவட்டம் உளுந்தூர் பேட்டைக்கு புறப்பட்டது. 

     இந்த லாரி  நள்ளிரவில் சேலம் பட்டர்பிளை மேம்பால பகுதியில் வந்து கொண்டிருந்தது. லாரியை விழுப்புரம் வி.புதூரை  சேர்ந்த  நாகராஜ் என்பவர்   ஒட்டி வந்தார். அப்போ து  திடீரென லாரி டிரைவரின்  கட்டுப்பாட்டை இழந்து  தாறு மாறாக ஓடியது. 

    பின்னர் சாலையில் நடுவில் உள்ள  சென்டர்  மீடியனில் மோதிய படி   நின்றது.   தகவல் அறிந்த கொண்டலாம்பட்டி போலீசார்   சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர்  லாரியை மீட்டனர்.  
    கனவு ஏற்காடு திட்டம் சேர்வராயன் கோவில் திடலில் வானியல் தொலைநோக்கு மையம் கலெக்டர் கார்மேகம் தகவல்.
    ஏற்காடு:

    சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 45-வது கோடை விழா மற்றும் மலர்க்காட்சி நிறைவு விழா மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது. விழாவில் கலெக்டர் கார்மேகம் பேசியதாவது:-

    ஏற்காடு மலைப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு நல்ல வருமானமும், வேலைவாய்ப்புகளும் கிடைக்கும் என்ற உன்னத நோக்கத்துடன் கோடைவிழா மற்றும் மலர்க்காட்சி 8 நாட்கள் சிறப்பாக நடத்தப்பட்டது. இந்த கோடை விழா மற்றும் மலர்க்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள ரோஜா பூங்கா, அரசு தாவரவியல் பூங்காக்கள், மரபியல் பூங்கா, அண்ணா பூங்கா, ஏரிப்பூங்காக்கள்  உள்ளிட்ட இடங்களை சுமார் 1 லட்சத்து 33 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகள் வருகை தந்து பார்வையிட்டுள்ளனர்.
     
     ஏற்காட்டினை சர்வதேச தரத்தில் முன்னேற்றுவதற்காக "நம்முடைய கனவு ஏற்காடு திட்டம்" என்ற ஒரு உன்னதமான திட்டம் உள்ளது. இத்திட்டத்தில் ஏற்காட்டின் மிக உயரிய இடமான சேர்வராயன் கோவிலில் வானியல் தொலைநோக்கி மூலம் வானத்தை கண்டுகழிக்கும் வகையிலும், அரசு அலுவலர்கள், காவலர்கள் மற்றும் ஊடகத்தினருக்கு புத்துணர்வு பயிற்சிக்காக ஒரு பயிற்சி திடல் அமைத்தல் மற்றும் மினி திரையரங்கம் அமைத்தல் உள்ளிட்டவைகள் கனவு ஏற்காடு திட்டத்தில் உள்ளது. 

    குறிப்பாக, ஏற்காடு மக்களின் அத்தியாவசியத் தேவைகளான கல்வி, குடிநீர், நியாய விலைக் கடைகள் மூலம் கிடைக்கப்பெறும் பொருட்கள் உள்ளிட்டவைகள் குறித்து ஏற்காட்டில் முகாம்கள் நடத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

    இதனைத் தொடர்ந்து, புகைப்படப்போட்டி, இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கான கைப்பந்து போட்டி, கால்பந்து போட்டி, கபாடிப்போட்டி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், கொழு கொழு குழந்தைப்போட்டிகள், சமையல் போட்டிகள் உள்ளிட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்காக நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், வேளாண்மை – உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறையின் சார்பில் வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம், காய்கறி வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் நினைவுப் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை  கலெக்டர் கார்மேகம்  வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வம், வருவாய் கோட்டாட்சியர்கள் விஷ்ணுவர்த்தினி (சேலம்),  சரண்யா (ஆத்தூர்), தோட்டக்கலைத் துறையின் துணை இயக்குநர் (பொ)  கணேசன், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) (ஆத்தூர்) டாக்டர் ஜெமினி, மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜனார்த்தனன், ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலர்  முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    • ஏ.டி.எம். மையத்தின் அருகே 3 பவுன் தங்க சங்கிலி கீழே கிடந்தது.
    • விசாரணையில் குரங்கு புத்துரை சேர்ந்த பிரவீன் தாஸ் என்பவருக்கு சொந்தமான செயின் என தெரியவந்தது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே மேலையூரில் உள்ள ஏ.டி.எம் மையத்திற்கு அதே பகுதியை சேர்ந்த கிராம சுகாதார செவிலியர் மகாலட்சுமி சென்றிருந்தார்.

    அப்போது ஏடிஎம் மையத்தின் அருகே 3 பவுன் தங்க சங்கிலி கீழே கிடப்பதை பார்த்துள்ளார். அந்த சங்கிலியை பூம்புகார் இன்ஸ்பெக்டர் நகரத்தினத்திடம் மகாலட்சுமி ஒப்படைத்தார்.

    போலீசார் விசாரணையில் குரங்கு புத்துரை சேர்ந்த பிரவீன் தாஸ் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்ததையடுத்து சங்கிலி உரியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.தங்க சங்கிலியை ஒப்படைத்த சுகாதார செவிலியர் மகாலட்சுமியின் செயலுக்கு இன்ஸ்பெக்டர் நாகரத்தினம் மற்றும் போலீசார், கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    இந்நிலையில் செவிலியர் மகாலட்சுமி செயலை பாராட்டி மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா நேரில் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

    • பச்சிளம் குழந்தைகளை பராமரிக்கும் ‘செல்லப்பிள்ளை’ மையம் தொடங்கப்பட்டது
    • கலெக்டர் கவிதா ராமு தொடங்கி வைத்தார்

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் 'செல்லப்பிள்ளை' பச்சிளம் குழந்தை பராம ரிப்பு ஆலோசனை மையம் திறக்கப்பட்டது.

    இந்த மையத்தை திறந்து வைத்து கலெக்டர் கவிதா ராமு பேசியதாவது :

    தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படு த்தும் வகையில் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் 'செல்லப்பிள்ளை' பச்சிளம் குழந்தை பராமரிப்பு ஆலோசனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. பிறந்த குழந்தைக்கு கிடைக்க வேண்டிய முதல் உணவு தாய்ப்பால்.

    தாய்ப்பால் கொடுப்பதில் தாய்க்கு மட்டும் பங்கு இல்லை. அவருடன் இருப்பவர்களும் இது குறித்த போதுமான விழிப்புணர்வு பெற வேண்டும். தாய்ப்பால் அளித்து வந்தால் குழந்தையின் எடை கூடும். அடிக்கடி சளி பிடிக்காது. ஆஸ்துமா பிரச்சினைகள், வயிற்றுப்போக்கு ஏற்டாது. உடல் பருமன், இதய நோய்களை தடுக்கலாம். குழந்தை பிறந்த 6 மாதங்களுக்கு கட்டாயம் தாய்ப்பால் மட்டுேம கொடுக்க வேண்டும். எனவே பொதுமக்கள் அனைவரும் தாய்ப்பாலின் அவசியம் குறித்து உரிய விழிப்புணர்வு பெற வேண்டும் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் கட்டுரைப் போட்டி, ஓவிய ப்போட்டி மற்றும் ஆரோக்கிய குழந்தைகளுக்கான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    • மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
    • பாளையில் 4 இடங்களில் புதிதாக நகர்நல மையம் அமைக்கப்பட உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் தலா ரூ. 25 லட்சம் மதிப்பில் 5 இடங்களில் புதிதாக நகர்நல மையம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.

    மேலப்பாளையம் கொடிமரம் பகுதியில் நடந்த விழாவில் மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

    நிகழ்ச்சியில் மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, உதவி கமிஷனர் அய்யப்பன், சுகாதார அலுவலர் சாகுல்கமீது, கவுன்சிலர் ரம்ஜான் அலி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து பாளை ஆரோக்கியநாதபுரம், வி.எம்.சத்திரம், சாந்திநகர், இந்திராநகர் ஆகிய இடங்களிலும் புதிதாக நகர்நல மையம் அமைக்க அப்துல் வகாப் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.

    • இந்த தேர்வுக்கு 67 ஆயிரத்து 728 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இன்று காலை 8 மணி முதலே மையத்துக்கு தேர்வர்கள் வர தொடங்கினர்.
    • பூதலூர் உள்ளிட்ட சில இடங்களில் உள்ள மையங்களில் தாம தமாக வந்த தேர்வர்களுக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தமிழகஅரசின்பல்வேறு துறைகள் மற்றும்நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும்வகையில் கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், ஸ்டெனோகிராபர், இளநிலை உதவியாளர்கள், பில் கலெக்டர்கள், நில அளவையர் போன்ற பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் நடைபெற்றது.

    தஞ்சை மாவட்டத்தில் 239 மையங்களில் குரூப்-4 தேர்வு நடந்தது. இந்த தேர்வுக்கு 67 ஆயிரத்து 728 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இன்று காலை 8 மணி முதலே மையத்துக்கு தேர்வர்கள் வர தொடங்கினர். 9 மணிக்கு அவர்கள் அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். அறைக்குள் செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட பொருட்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டது.

    தேர்வு சரியாக 9.30 மணிக்கு தொடங்கிமதியம் 12.30 மணி வரை நடைபெற்றது. 12.45 மணிக்கு பிறகே அவர்கள் மையத்தை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    மாவட்டத்தில் பூதலூர் உள்ளிட்ட சில இடங்களில் உள்ள மையங்களில் தாம தமாக வந்த தேர்வர்களுக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவர்கள் தேர்வு எழுத முடியாமல் திரும்பி சென்றனர். தேர்வை முன்னிட்டு மாவட்டத்தில் சிறப்பு பஸ்கள் இயக்கப்ப ட்டன.

    • தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
    • 8-ம் வகுப்பு முதல் முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள் என 171 பேர் பங்கேற்றனர்.

    சேலம்:

    சேலம் கோரிமேட்டில் உள்ள தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவை, காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்பட 25 தனியார் நிறுவனங்கள் பங்கேற்று எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு நடத்தி தங்களுக்கு தேவையான தகுதி வாய்ந்த நபர்களை தேர்வு செய்தது. 8-ம் வகுப்பு முதல் முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள் என 171 பேர் பங்கேற்றனர். இதில் 102 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.இந்த தகவலை ேவலை வாய்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    ×