search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "central metro train"

    நேருபூங்கா-சென்ட்ரல் மெட்ரோ ரெயில் பணிகளை பாதுகாப்பு கமி‌ஷனர் இன்று 2-வது நாளாக ஆய்வு செய்தார். #Metrotrain

    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. கோயம்பேடு-ஆலந்தூர், சின்னமலை-விமான நிலையம் வரை உயர் மட்டபாதையிலும், திருமங்கலம்-நேருபூங்கா வரை சுரங்க பாதையிலும் மெட்ரோ ரெயில் பயணிகள் சேவை தற்போது நடந்து வருகிறது.

    மெட்ரோ ரெயிலுக்கு சென்னை மக்களிடையே வரவேற்பு ஏற்பட்டுள்ளதையொட்டி சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ ரெயில் சேவை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதில் நேரு பூங்கா-சென்ட்ரல், சைதாப்பேட்டை-தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வரையிலான பணிகள் முடிவடைந்துள்ளன.

    ஷெனாய்நகர்- நேரு பூங்கா வரையிலான 2-வது லைன் பாதை பணிகளும் தற்போது நிறைவு பெற்றுள்ளது. இதையொட்டி பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் தலைமையிலான குழுவினர் நேற்று ஆய்வு பணிகளை தொடங்கினர். டிராலியில் சென்று ஆய்வு பணிகளை பார்வையிட்டனர்.

    இந்த வழித்தட பாதையில் இன்று மெட்ரோ ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தினர். இதில் 80 கிலோ மீட்டர் வேகத்தில் மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டது. அதைதொடர்ந்து தீவிபத்து நடந்தால் பயணிகளை பாதுகாப்பது குறித்தும் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தி ஆய்வு செய்தனர்.

    நேருபூங்கா-சென்ட்ரல் இடையேயான வழித்தடத்தில் இன்று டிராலியில் சென்று ஆய்வு பணிகளை மேற் கொண்டனர். அதை தொடர்ந்து மெட்ரோ ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தினர்.

    பாதுகாப்பு கமி‌ஷனர் ஆய்வு பணிகள் குறித்து சான்றிதழ் அளித்ததும் இம்மாதம் இறுதியில் மெட்ரோ ரெயில் இயக்க அனுமதி வழங்கப்படுகிறது. அதைதொடர்ந்து நேரு பூங்கா-சென்ட்ரல், சைதாப்பேட்டை-டி.எம்.எஸ். வழித்தட பாதையில் பயணிகளுக்கான மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்படும் என தெரிகிறது. #Metrotrain

    ×