என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Centre"
- மறு தேர்வுக்கு உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மாணவர்கள் பலர் வழக்கு தொடர்ந்தனர்.
- நீட் தேர்வு தொடர்பான மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் 8-ம் தேதி விசாரணைக்கு வருகின்றன.
புதுடெல்லி:
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு, கடந்த மே 5-ம் தேதி நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் கடந்த மாதம் 4-ம் தேதி வெளியிடப்பட்டது. வினாத்தாள் கசிவு, 1563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது உள்ளிட்ட சர்ச்சைகளால் மறு தேர்வுக்கு உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மாணவர்கள் பலர் வழக்கு தொடர்ந்தனர்.
அதன்பேரில் மத்திய அரசுக்கும், தேர்வு நடத்திய தேசிய தேர்வு முகமைக்கும் சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கிடையே, நிலுவையில் உள்ள நீட் தேர்வு தொடர்பான மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் 8-ம் தேதி விசாரணைக்கு வருகின்றன. சுப்ரீம் கோர்ட் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட 8-ம் தேதிக்கான வழக்கு பட்டியலில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு 26 நீட் தேர்வு மனுக்கள் விசாரணைக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில் தேர்வில் பெரிய அளவில் ரகசியத்தன்மை மீறப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், முழு தேர்வையும் ரத்துசெய்வது நியாயமானதாக இருக்காது. தேர்வை முற்றிலுமாக ரத்துசெய்வது, 2024-ம் ஆண்டு வினாத்தாளை எழுத முயன்ற லட்சக்கணக்கான நேர்மையான விண்ணப்பதாரர்களுக்கு "தீவிரமாக ஆபத்தை விளைவிக்கும்" என தெரிவித்துள்ளது.
மேலும் சதி, ஏமாற்றுதல், ஆள்மாறாட்டம் செய்தல், நம்பிக்கை மீறல் உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்பாக முழு விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- போட்டி தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டு சிறை தண்டனை.
- மேலும் ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கும் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
புதுடெல்லி:
மத்திய அரசு தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.1 கோடி அபராதமும் விதிக்கும் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
கடந்த பிப்ரவரியில் இந்த மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து அந்த மசோதா சட்டமானது. தற்போது அந்த சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் நேற்று பிறப்பித்தது.
இந்நிலையில், தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் தேர்வுகளைக் கண்காணிக்க மத்திய அரசு உயர்மட்டக் குழுவை அமைத்து உத்தரவிட்டது.
இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 7 பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு தேர்வுகள் வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும், நேர்மையான விசாரணை நடைபெறுவதை உறுதிசெய்யும். இந்தக் குழுவில் சென்னை ஐஐடி பேராசிரியர் உள்பட 7 பேர் இடம் பெற்றுள்ளனர்.
தேர்வு செயல்முறையில் சீர்திருத்தம், தரவு பாதுகாப்பு நெறிமுறைகளை மேம்படுத்துதல் குறித்து பரிந்துரை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வட இந்தியாவில் தீவிர வெப்ப அலையின் தாக்கம் நீடித்து வருகிறது.
- டெல்லியில் இன்றுவரை வெப்ப அலையில் சிக்கி 20 பேர் பலியாகி உள்ளனர்.
புதுடெல்லி:
வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சமீப காலமாக கடும் வெப்ப அலை வீசி வருகிறது. குறிப்பாக பஞ்சாப், அரியானா, டெல்லி, உத்தர பிரதேசம், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வெப்ப அலையின் தாக்கம் மிக தீவிரமாக உள்ளது.
பல இடங்களில் இயல்பு நிலையை விட 5 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை அதிக வெப்பநிலை பதிவாகி உள்ளது. இரவு நேரங்களிலும் வெப்பக் காற்று வீசி வருவதால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் மே 27-ம் தேதி முதல் இன்றுவரை வெப்ப அலையில் சிக்கி 20 பேர் பலியாகி உள்ளனர். இதில், டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் 9 பேரும், ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் 9 பேரும், லோக் நாயக் மருத்துவமனையில் 2 பேரும் என மொத்தம் 20 பேர் பலியாகினர்.
வெப்ப அலையின் தாக்கத்தால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு இதுவரை 45-க்கும் மேற்பட்டோர் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வட இந்தியாவில் தீவிர வெப்ப அலையின் தாக்கம் நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- முன்னதாக கல்லூரி முதல்வர் விக்டோரியா அனைவரையும் வரவேற்றார்.
- முடிவில் ஆசிரியர் அரவாளி நன்றி கூறினார்.
மன்னார்குடி:
மன்னார்குடியில் உள்ள பான் செக்கர்ஸ் கல்லூரியில் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களுக்கான ஐ.ஏ.எஸ் அகாடமி மையம் திறப்பு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சென்னை அடைக்கல அன்னை சபையின் தலைவர் மரியபிலோமி தலைமை தாங்கினார்.
மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, நகராட்சி தலைவர் மன்னை சோழராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கலந்து கொண்டு புதிய ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தை தொடங்கி வைத்தார்.
இதில் தி.மு.க. மாநில செயற்குழு உறுப்பினர் ஞானசேகரன், நகர செயலாளர் வீரா கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கல்லூரி முதல்வர் விக்டோரியா அனைவரையும் வரவேற்றார். முடிவில் ஆசிரியர் அரவாளி நன்றி கூறினார்.
- உதவி மையம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.
- மாணவர்கள் பதிவு செய்ய வரும்போது ஜாதி சான்றிதழ் அசலை கொண்டு வர வேண்டும்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் (பொ) குமரேசமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம், பி.காம், பி.பி.ஏ, பி.எஸ்சி. கணிதம், பி.எஸ்சி. கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது.
இதற்கு பிளஸ்-2 வில் தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேதாரண்யம் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான உதவி மையம் அமைக்க ப்பட்டுள்ளது.
இந்த மையம் இன்று (8-ந்தேதி) முதல் 19-ந்தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.
பதிவு செய்ய விண்ணப்ப கட்டணமாக ஓ.சி, பி.சி, எம்.பி.சி மாணவர்கள் ரூ.50 செலுத்தினால் 5 கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கலாம். எஸ்.சி, எஸ்.டி. பிரிவை சேர்ந்த மாணவர்கள் ரூ. 2 பதிவு கட்டணமாக செலுத்தி 5 கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கலாம். எஸ்.சி, எஸ்.டி. மாணவர்கள் பதிவு செய்ய வரும்போது ஜாதி சான்றிதழ் அசலை கொண்டு வர வேண்டும்.
இந்த வாய்ப்பை வேதாரண்யம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மாணவ- மாணவி கள் பயன்படுத்திக் கொள்ளு ங்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் குத்துவிளக்கேற்றி பயிற்சி மையத்தை தொடங்கி வைத்தார்.
- லஞ்சம் வாங்கும் எண்ணம் கொண்டவர்கள் அரசு பணிக்கு வரக்கூடாது.
நாகப்பட்டினம்:
தமிழக கடலோர மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் சார்பில் நாகப்பட்டினத்தில் கலங்கரை ஐஏஎஸ் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த பயிற்சி மையத்தில் ஐ.ஏ.எஸ்., நீட் தேர்வு, டிஎன்பிசி, காவலர் தேர்வு உள்ளிட்டவைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள 40 பின் மேற்பட்ட மாணவர்களுக்கு உண்டு உறைவிட இலவச பயிற்சி மையம் தொடக்க விழா நடைபெற்றது.
தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் குத்துவிளக்கேற்றி பயிற்சி தொடங்கி வைத்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், முன்னாள் அமைச்சர் ஜெயபால், கலங்கரை அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் கமல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பேசியதாவது:-
லஞ்சம் வாங்கும் எண்ணம் கொண்டவர்கள் அரசு பணிக்கு வரக்கூடாது எனவும், சேவை மனப்பா ன்மை உள்ளவர்கள் மட்டுமே அரசு பணிக்கு வர வேண்டும் என்றார்.
- சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே 50 ஆண்டுகளுக்கு மேல் வீடு கட்டிக் குடியிருந்து வருகின்றனர். தற்போது அந்த பகுதியில் புதிய கட்டி டம் கட்டுவதால் இவர்கள் குடியிருக்கும் இடம் இல்லாமல் இருப்பதாகவும் தங்களுக்கு அதே பகுதியில் உள்ள மீதமுள்ள நிலத்தில் பட்டா வழங்க வேண்டும்.
- அல்லது வேறு இடத்தில் பட்டா வழங்கிவிட்டு தற்போது கட்டுமான பணியை தொடங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதை தொடர்ந்து கட்டிட பணியை தடுத்து ஜெ.சி.பி. எந்திரத்தை திருப்பி அனுப்பினர்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதி யில் ஏற்கனவே செயல்பட்டு வந்த அங்கன்வாடி மைய கட்டிடம் பழுதடைந்து காணப்பட்டதால் அது அகற்றிவிட்டு புதியதாக கட்டுவதற்காக சுமார் ரூ.12 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணி தொடங்கப்பட்டது.
தற்போது அந்த இடத்தில் அதே பகுதியைச் சேர்ந்த கிட்டு என்பவர் தனது குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். மேலும் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கிட்டுவின் தந்தை முத்து என்பவருக்கு ராணுவத்தில் பணிபுரிந்த போது அரசு ராணுவ வீரர்களுக்கு என ஒதுக்கப்பட்ட இடம் என கூறப்படுகிறது. அரசு ஆவ ணங்களில் இது புறம்போக்கு நிலம் என உள்ளது.
மேலும் அதே பகுதியில் அவர்கள் 50 ஆண்டுகளுக்கு மேல் வீடு கட்டிக் குடியிருந்து வருகின்றனர். தற்போது அந்த பகுதியில் புதிய கட்டி டம் கட்டுவதால் இவர்கள் குடியிருக்கும் இடம் இல்லாமல் இருப்பதாகவும் தங்களுக்கு அதே பகுதியில் உள்ள மீதமுள்ள நிலத்தில் பட்டா வழங்க வேண்டும் அல்லது வேறு இடத்தில் பட்டா வழங்கிவிட்டு தற்போது கட்டுமான பணியை தொடங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதை தொடர்ந்து கட்டிட பணியை தடுத்து ஜெ.சி.பி. எந்திரத்தை திருப்பி அனுப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒன்றிய கவுன்சிலர் செல்வி ராஜா பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வீடு இழப்பவர்களுக்கு புதிய இடத்தில் அரசு பட்டா வழங்க வேண்டும் என்றார். இதனால் காமலாபுரம் பகுதி யில் பரபரப்பு ஏற்பட்டது.
- மொத்தம் 112 மையங்களில் தேர்வு நடைபெற்றது.
- தேர்வு தொடங்கிய முதல் 15 நிமிடம் வினாத்தாளை வாசித்து பார்க்க நேரம் ஒதுக்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தமிழகத்தில் 2022-23-ம் கல்வி ஆண்டிற்கான பிளஸ் -2 பொதுத்தோ்வு இன்று தொடங்கியது.
அடுத்த மாதம் 3 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தஞ்சாவூா் மாவட்டத்தில் நிகழாண்டு 225 அரசு, அரசு உதவி பெறும், தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 29 ஆயிரத்து 888 மாணவ- மாணவிகளுக்கு பிளஸ் -2 பொதுத்தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து வைத்திருந்தனர்.
இவா்களில் 14 ஆயிரத்து 641 மாணவா்களும், 15 ஆயிரத்து 247 மாணவிகளும் அடங்கும்.
281 மாற்றுத்திறனாளி மாணவர்களும் தேர்வு எழுத வசதியாக அவர்களுக்கு தரை தளத்தில் தேர்வு அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மொத்தம் 112 மையங்களில் தேர்வு நடைபெற்றது.
இன்று காலை மாணவ- மாணவிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களுக்கு வந்தனர்.
முன்னதாக மாணவ- மாணவிகள் தேர்வில் தேர்ச்சி பெற்று நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று வழிபாட்டு தலங்களில் பிரார்த்தனை செய்தனர்.காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது.
மாணவர்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
செல்போன், கால்கு லேட்டர் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டது. தேர்வு தொடங்கிய முதல் 15 நிமிடம் வினாத்தாளை வாசித்து பார்க்க நேரம் ஒதுக்கப்பட்டது.
அதன் பின்னர் மாணவர்கள் தேர்வு எழுதத் தொடங்கினர். மதியம் 1.15 மணி வரை தேர்வு நடைபெற்றது.
இது தவிர உடல் ஊனமுற்றோர், கண் பார்வை யற்றோர், காது கேளாத வாய் பேச இயலாதோர், டிஸ்லெக்சியா மற்றும் மனவர்த்திக்கொன்றிய மாணவர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டது.
இத்தோ்வில் முறைகே டுகள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் பறக்கும் படைகள் அமைக்கப்ப ட்டுள்ளன.
இப்பணிகளில் பறக்கும் படையினா், கண்காணிப்பாளா்கள், அறை கண்காணிப்பாளா்கள் என சுமார் 2 ஆயிரம் ஆசிரியா்களும், ஆசிரியா் அல்லாத கல்வித் துறைப் பணியாளா்களும் ஈடுபடுத்தப்பட்டனர்.
அவர்கள் தேர்வு மையங்களில் சென்று ஆய்வு செய்தனர்.
தேர்வை முன்னிட்டு மாவட்டத்திலுள்ள அனைத்து மையங்களில் குடிநீா் வசதி, தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
- தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் தென்திருப்பேரை பேரூராட்சி சமுதாய நல கூடத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் நேற்று துவக்கப்பட்டது.
- தி.மு.க. ஆழ்வை மத்திய ஒன்றியசெயலாளர் நவீன் குமார் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஆரம்பித்து வைத்தார்.
தென்திருப்பேரை:
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் தென்திருப்பேரை பேரூராட்சி சமுதாய நல கூடத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் நேற்று துவக்கப்பட்டது.
இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தால் குருகாட்டூர், கோட்டூர், மேலகடம்பா, கல்லாம்பாரை, தென்திருப்பேரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் வயல்களில் அறுவை செய்த நெல்லை நேரடியாக கொள்முதல் நிலையத்தில் கொடுத்து பயனடையலாம்.
தி.மு.க. ஆழ்வை மத்திய ஒன்றியசெயலாளர் நவீன் குமார் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஆரம்பித்து வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய துணை செயலாளர் கோவில்துரை, நகர செயலாளர் முத்து வீர பெருமாள், கவுன்சிலர் ஆனந்த், நுகர் பொருள் வாணிப கழக பட்டியல் எழுத்தர் இசக்கி மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
- வளர் இளம் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
- அதன்படி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாலையில் உள்ள அங்கன்வாடி மையத்தில் முகாம் நடைபெற்றது.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டத்தில் ஒன்று படுவோம், உறுதி ஏற்போம் திட்டத்தின் அடிப்படையில் மாவட்டம் முழுவதும் அங்கன்வாடி பணியாளர்கள், அந்தந்த பகுதி வளர் இளம் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வரு கிறது. அதன்படி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாலையில் உள்ள அங்கன்வாடி மையத்தில் முகாம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி, தனது தாயை 2-வதாக திருமணம் செய்து கொண்ட பிரகாஷ் (வயது 40) என்பவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்வதாக புகார் கூறினார். இது குறித்து விசாரணை செய்ததில் சிறுமி கூறியது உண்மை என தெரியவந்தது.
இதை அடுத்து நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பாதுகாப்பு அலுவலர் சவுண்டேஸ்வரி மற்றும் அதிகாரிகள் குமாரபாளையம் பகுதியில் உள்ள சிறுமியின் வீட்டுக்கு சென்றனர்.
அங்கு இருந்த பிரகாஷ் மற்றும் சிறுமியின் தாய் துளசி (35) ஆகிய 2 பேரையும் திருச்செங்கோடு மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் 2 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். அச்சிறுமி துளசியின் முதல் கணவருக்கு பிறந்த குழந்தை என்பது தெரியவந்துள்ளது. சிறுமி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
- மத்திய அரசால் பி.எம்-கிசான் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- பொது சேவை மையத்தில் பி.எம்-கிசான் இணையதளத்தில் இ.கே.ஒய்.சி யில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பரமத்தி வேலூர்:
பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாட்டில் நலிவுற்ற நிலையில் இருக்கும் விவசாயிகளின் ஆண்டு வருமானத்தை உயர்த்தும் வகையில் மத்திய அரசால் பி.எம்-கிசான் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் தொடர்ந்து பயன்பெற வேண்டிய பரமத்தி வட்டார விவசாயிகள் தங்களது ஆதார் அட்டை மற்றும் செல்போன் எண் விபரங்களை அருகில் உள்ள பொது சேவை மையத்தில் பி.எம்-கிசான் இணையதளத்தில் இ.கே.ஒய்.சி யில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்போது, செல்போனுக்கு வரும் கடவு எண்ணைப் (பாஸ்வோ்டு) பயன்படுத்தி தங்கள் அடையாளத்தை பதிவு செய்து கொண்டால், விவசாயிகளுக்கு இந்த திட்டம் மூலம் வழங்கப்படும் தவணை தொகை அவா்கள் வங்கிக் கணக்கில் தொடந்து வரவு வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- விருதுநகர் மாவட்டத்தில் குரூப்-4 தேர்வு மையம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- தேர்வு மையத்திற்கு சென்று தேர்வு எழுத அறிவுறுத்தப்படுகிறது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 4ல் அடங்கியுள்ள பதவிக்கான போட்டித்தேர்வு (தேர்வுநாள்: 24.07.2022 முற்பகல்) எழுதும் தேர்வர்களின் அனுமதிச்சீட்டில் ராஜபாளையம் வட்டம் ஹால் எண்:29 சத்யாவித்யாலயா, (சி,பி.எஸ்.இ.) பிள்ளையார்குளம், கே.ஆர் நகர் அஞ்சல் (பெருமாள் தேவன்பட்டி கோவில் அருகில்) - 626137 என உள்ள தேர்வர்கள் ஹால் எண்:29 சத்யாவித்யாலயா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, ராஜீவ் காந்தி நகர், கே.ஆர் நகர் அஞ்சல், ராஜபாளையம் வட்டம்- 626108 (வேட்டைப்பெருமாள் திருக்கோவில் அருகில்) என்ற தேர்வு மையத்திற்கு சென்று தேர்வு எழுத அறிவுறுத்தப்படுகிறது.
தேர்வர்களின் அனுமதிச் சீட்டில் திருச்சுழி வட்டம் ஹால் எண் - 005 மருது பாண்டியர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி (எம்.டி.ஜி.எச்.எஸ்.எஸ். நரிக்குடி) மதுரைரோடு திருச்சுழி வட்டம் என உள்ள தேர்வர்கள் ஹால் எண்:005 மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளி, நரிக்குடி, மதுரை ரோடு, திருச்சுழி வட்டம் என்ற தேர்வு மையத்திற்கு சென்று தேர்வு எழுத அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்