என் மலர்
நீங்கள் தேடியது "Chariot festival"
- சின்ன கிருஷ்ணாபுரம் எல்லையில், பிரசித்தி பெற்ற புதுப்பட்டி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது.
- இக்கோவி லில் ஆண்டுதோறும் தமிழ் மாதமான பங்குனி இறுதி வாரத்தில் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி கொட்டவாடி பிரிவு சாலை அருகே சின்ன கிருஷ்ணாபுரம் எல்லையில், பிரசித்தி பெற்ற புதுப்பட்டி மாரி யம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோவி லில் ஆண்டுதோறும் தமிழ் மாதமான பங்குனி இறுதி வாரத்தில் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டு தேர்த்திரு விழாவை யொட்டி கடந்த 2 நாட்களாக ஊர் மக்கள் மாரியம்மனுக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. பிரமாண்டமான மரத்தேர் கலைநயமிக்க வண்ண சேலைகளால் அலங்க ரிக்கப்பட்டு, நேற்று மாலை, கோயில் வளாகத்தில் இருந்து முதல்நாள் தேரோட்டம் நடைபெற்றது.
வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட னர். மீண்டும் இன்று மாலை கோயிலை சுற்றி திருத்தேர் பவனி வந்து நிலை நிறுத்தப்படும்.
இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள், தங்கள் வேண்டு தல் நிறைவேற்றிய அம்ம னுக்கு, உடலில் அலகு குத்தி யும், பூங்கரகம், அக்னிகரகம் எடுத்தும், உருளதண்டம் போட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர். நாளை வெள்ளிக்கிழமை மஞ்சள் நீராட்டு விழாவும், சத்தாபரண நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
- 300 ஆண்டு பழமையான கூத்தாண்டவர் கோயில் அமைந்துள்ளது.
- பிரசித்தி பெற்ற இக்கோவிலில் 2 ஆண்டுக்கு ஒருமுறை தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது.
வாழப்பாடி:
வாழப்பாடி அடுத்த பனைமடல் கிராமத்தில் சுற்றுப்புற கிராம மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும், 300 ஆண்டு பழமையான கூத்தாண்டவர் கோயில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் 2 ஆண்டுக்கு ஒருமுறை தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது.இந்த ஆண்டு தேர்த்திரு விழா கடந்த 2 நாட்களாக கொண்டா டப்பட்டது. இவ்விழாவில், அரவான் பலி கொடுத்தல், கூத்தாண்டவர் கண் திறப்பு நிகழ்ச்சிகளும் திருநங்கைகள் பங்கேற்புடன் மரபு மாறாமல் நடத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகளும், திருத்தேர் ரதமேறும் வைபோவமும், சன்னிதானத்தை சுற்றி தேரோட்டமும் நடைபெற்றது.
விழாவில் வாழப்பாடி, ஏத்தாப்பூர், பெத்தநா யக்கன்பாளையம், பேளூர், இடையப்பட்டி, தாண்டா னுார் மற்றும் சுற்றுப்புற கிரா மங்களை சேர்ந்த ஆயி ரக்க ணக்கான பக்தர்களும், பொது மக்களும் கலந்து கொண்டனர். முன்னதாக, வேண்டுதல் நிறை வேற்றிய சுவாமிக்கு கர கம் எடுத்தும், அலகு குத்தியும், பொங்கலிட்டு ஆடு, கோழி பலியிட்டும் ஏராள மான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இடையப்பட்டி யில் இருந்து கல்யாணகிரி வரை வழிநெடு கிலும், பாரம்ப ரிய முறைப்படி பொதுமக்கள் நீர் மோர் பந்தல் அமைத்தும், தானி யக்கூழ், அன்னதானம் வழங்கியும் பக்தர்களின் தாகம் தீர்த்த னர்.
- துக்கியாம்பாளையம் ஊராட்சி மேலுார் சக்தி மாரியம்மன் கோவிலில் 9 ஆண்டுக்கு பின் தேர்த்திருவிழா நடைபெறுகிறது.
- இன்று மஞ்சள் நீராட்டு விழாவும் சத்தாபரண நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
வாழப்பாடி:
வாழப்பாடி அருகே துக்கியாம்பாளையம் ஊராட்சி மேலுார் சக்தி மாரியம்மன் கோவிலில் 9 ஆண்டுக்கு பின் தேர்த்திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி பொதுமக்கள் கருப்பனார், மாரியம்மன் உள்ளிட்ட அனைத்து காவல் தெய்வங்களுக்கும் பொங்கல் வைத்து சிறப்பு பூஜை வழிபாடு செய்தனர்.
தொடர்ந்து பிரமாண்டமான மரத்தேர் கலைநயமிக்க வண்ண சேலைகளால் அலங்கரிக்கப்பட்டு ராஜவீதிகளில் தேரோட்டம் நடைபெற்றது. துக்கியாம்பாளையம், மேலுார், மாரியம்மன் புதுர், மன்னாயக்கன்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நுாற்றுக்கணக்கான பக்தர்கள், வேண்டுதல் நிறைவேற்றிய அம்மனுக்கு, உடலில் அலகு குத்தியும், பூங்கரகம், அக்னிகரகம் எடுத்தும், உருளதண்டம் போட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று மஞ்சள் நீராட்டு விழாவும் சத்தாபரண நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தர்கள்.
- ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்
- 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஜலநாதீஸ்வரர் கோவிலில் சித்திரை மாத பிரமோற்ச திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது இதனைத் தொடர்ந்து.
ஜலநாதீஸ்வரர் தினம் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளினார். சித்திரை மாத பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்திற்கு இன்று அலங்கரிக்கப்பட்ட தேரில் ஜலநாதீஸ்வரர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதனை தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
நான்கு மாத விதிகளில் தேர் வளம் வந்து மாலை மீண்டும் கோவிலை வந்தடைந்தது. வழி நெடுங்கிலும் பக்தர்கள் சாமியை தரிசனம் செய்தனர்.
- பென்னக்கோணம் மகா மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நடைபெற்றது
- திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்
அகரம்சீகூர்,
பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அருகேயுள்ள பென்னக்கோணம் கிராமத்தில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் சித்திரை திருவிழா கடந்த 6-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து, மகா மாரியம்மன், செல்லியம்மன், அய்யனாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும் மலர் அலங்காரத்துடன் தினமும் சாமி வீதியுலா நடைபெற்றது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி முன்னதாக மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
அதன் பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மகா மாரியம்மன் தேரோட்டம், மேள, தாளங்கள் மற்றும் வாண வேடிக்கையுடன் நடைபெற்றது.கீழக்குடிக்காடு, கழனிவாசல், பெருமத்தூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவச கோஷத்துடன், தேரின் வடம் பிடித்தனர். தேர் திருவிழாவை முன்னிட்டு மங்களமேடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்து இருந்தனர்.
- இன்று காலை தேருக்கு சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது.
- உலா செல்லக்கூடிய வாகனம் மற்றும் கோவில் வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது.
கடலூ:
கடலூர் திருப்பாதிரி ப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வருடம் தோறும் வைகாசி பெரு விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வைகாசி பெருவிழா வருகிற 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற உள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் அடுத்த மாதம் ஜூன் 2-ந்தேதி நடக்கிறது.
இந்நிலையில் இன்று காலை தேருக்கு சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து திருவிழாவிற்கான பந்த கால் நடும் நிகழ்ச்சி நடை பெற்றன. பந்த காலுக்கு மஞ்சள், குங்குமம் பூசி சிறப்பு பூஜைகள் நடைபெற்று பந்தகால் நடப்பட்டது.இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். முன்னதாக பாடலீஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி தொடங்கப்பட்டு கோவில் கொடிமரம், கோவிலின் சுற்றுச்சுவர், சாமி வீதி உலா செல்லக்கூடிய வாகனம் மற்றும் கோவில் வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. இதில் கோவில் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- ஏர்வாடியில் வரகுண பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட பெரியநாயகி அம்பாள் சமேத திருவழுதீஸ்வரர் கோவில் உள்ளது.
- ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதி உலா வைபவங்கள் நடைபெற்று வருகிறது.
ஏர்வாடி:
ஏர்வாடியில் வரகுண பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட பெரியநாயகி அம்பாள் சமேத திருவழுதீஸ்வரர் கோவில் உள்ளது.
இங்கு கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தேரோட்ட திருவிழா தொடங்கியது. ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங் களில் சுவாமி அம்பாள் வீதி உலா வைபவங்கள் நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.
இதேபோல் களக்காடு கோமதி அம்பாள் சத்தியவாகீஸ்வரர் கோவில் தேரோட்டம் இன்று மதியம் 3 மணிக்கு நடைபெறுகிறது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவினை வெவ்வேறு சமூகத்தினரை சேர்ந்தவர்கள் மண்டகபடி செய்து விழாவை சிறப்பித்து வருகின்றனர்.
- வைகாசி விசாக தேர் திரு விழாவை முன்னிட்டு 66ஆவது ஆண்டு கண்ணகி விழா கைலாசநாதர் கோவிலில் உள்ள சொக்கப்ப முத லியார் அரங்கத்தில் நடை பெற்றது.
- திருச்செங்கோடு எம்.எல்.ஏவும் கண்ணகி விழா குழு தலைவருமான ஈஸ்வரன் தலைமை வகித்தார்.
திருச்செங்கோடு:
திருச்செங்கோட்டில் வைகாசி விசாக தேர் திரு விழாவை முன்னிட்டு 66ஆவது ஆண்டு கண்ணகி விழா கைலாசநாதர் கோவி லில் உள்ள சொக்கப்ப முத லியார் அரங்கத்தில் நடை பெற்றது. திருச்செங்கோடு எம்.எல்.ஏவும் கண்ணகி விழா குழு தலைவருமான ஈஸ்வரன் தலைமை வகித்தார்.
திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு, முன்னாள் நகர் மன்ற தலைவர் நடே சன், வித்யா விகாஸ் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சிங்காரவேல், பி.ஆர்.டி. நிறுவனங்களின் மேலாண்மை இயக்குனர் பரந்தாமன் முன்னிலை வகித்தனர், சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி வாழ்த்தி பேசினார். அவர் பேசுகை யில், தி.மு.க. ஆட்சியில் திருச்செங்கோட்டில் விரைவில் கண்ணகி கோட்டம் அமைய உள்ளது. இங்கு அடுத்த வருடம் அர்த்தநாரீஸ்வரர் புதிய தேரில் வலம் வர உள்ளார் என்றார்.
விழாவில் நாமக்கல் எம்.பி. சின்ராஜ், அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கோல்டன் ஹார்ஸ் ரவி, தென்னிந்திய மோட்டார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் அனி தாவேலு, திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் மூர்த்தி, திருச்செங்கோடு ரிக் உரிமை யாளர்கள் சங்கத் தலைவர் லட்சுமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட செயலாளர் நதி ராஜவேல் வரவேற்று பேசினார். நகர செயலாளர் அசோக் குமார் நன்றி கூறினார். நிகழ்ச்சியை கொள்கை பரப்புச் செயலாளர் நந்தகுமார் தொகுத்து வழங்கினார்.
- இன்று ரத உற்சவம் நடக்கிறது
- மாலை ஆடல் பாடல் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள அம்மாபாளையம் ஊராட்சியில் கிராம தேவதை சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று 13-ந் தேதி காலை தொடங்கியது.
முன்னதாக கடந்த 30-ந் தேதி சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு காப்பு கட்டி தினமும் பாலாபிஷேகம் நடைபெற்றது. 6-ந் தேதி அப்பனூர் மாரியம்மனுக்கு மறுகாப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
நேற்று காலை ஸ்ரீசாமுண்டீஸ்வரி அம்மன் ரத உற்சவம் தொடங்கியது. இன்று அப்பனூர் மாரியம்மனுக்கு ரத உற்சவம் நடக்கிறது.
இரவு 10 மணி அளவில் நாடகமும், வாணவேடிக்கையும், மாலை ஆடல் பாடல் நடன நிகழ்ச்சியும் நடக்கிறது.இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்தனர்.
- வாழப்பாடி மற்றும் மன்னாயக்கன்பட்டி கிராமங்களில் கோயில் திருவிழா நடத்துவதில் முன்னோர்கள் காலந்தொட்டு பிணைப்பு தொடர்ந்து வருகிறது.
- வாழப்பாடி திரவுபதியம்மன் கோவில் தீ மிதித் திருவிழா 10 ஆண்டுகளுக்கு பின், கடந்த மே மாத இறுதியில் சிறப்பாக நடைபெற்றது.
வாழப்பாடி:
வாழப்பாடி மற்றும் மன்னாயக்கன்பட்டி கிராமங்களில் கோயில் திருவிழா நடத்துவதில் முன்னோர்கள் காலந்தொட்டு பிணைப்பு தொடர்ந்து வருகிறது. வாழப்பாடியில் திரவுபதி அம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் திருவிழா நடத்தும் போது, மன்னாயக்கன்பட்டி கிராமத்தினரை அழைப்பதும், மன்னாயக்கன்பட்டி கிராமத்தில் திருவிழா நடத்தும் போது, வாழப்பாடி கோவில்களிலுள்ள சுவாமி சிலைகளையும், நிர்வாகிகளையும் விருந்துக்கு அழைத்து செல்வதும் இன்றளவும் மரபாக தொடர்ந்து வருகிறது.
வாழப்பாடி திரவுபதியம்மன் கோவில் தீ மிதித் திருவிழா 10 ஆண்டுகளுக்கு பின், கடந்த மே மாத இறுதியில் சிறப்பாக நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மன்னாயக்கன்பட்டி கிராமத்தில் சக்தி மாரியம்மன் திருவிழா நடத்திட ஊர் பெரியதனக்காரர்கள் முடிவு செய்தனர். முன்னோர்கள் வழக்கப்படி கிராமம் முழுவதும் வீடுகள் தோறும் கோயில் காளை அலங்கரித்து அழைத்துச் சென்று தேர்திருவிழா செலவுக்கு வரி வசூல் செய்தனர்.
இதனையடுத்து நாளை சக்தி மாரியம்மனுக்கு திருக்கல்யாணமும், திருத்தேர் நிலை பெயர்த்தலும், நாளை மற்றும் நாளை மறுதினம் 2 நாட்களும் தேரோட்டம் நடைபெறுகிறது. தேர்த்திருவிழாவையொட்டி மாரியம்மன் பிறப்பு குறித்த இசைப்பாட்டு சொற்பொழிவு 2 வாரங்களாக நடந்து வருவதும், வாழப்பாடி திரவுபதி அம்மன் கோவில் இருந்து மரச்சிற்ப சுவாமி சிலைகளை விருந்துக்கு அழைத்துச் சென்று, மன்னாயக்கன்பட்டி மாரியம்மன் கோயிலில் வைத்து தினந்தோறும் சிறப்பு பூஜை வழிபாடு நடத்தி வருவதும் குறிப்பிடதக்கதாகும்.
- சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பங்கேற்பு
- வெள்ளிக்கிழமையையொட்டி கூழ்வார்த்தல், செடல் மற்றும் அலகு குத்துதல் நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி:
புதுச்சேரி முதலியார் பேட்டை சாமிநாதப் பிள்ளை வீதியில் முத்து மாரியம்மன் 32- ம் ஆண்டு செடல் மற்றும் தேர்த் திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று ஆடி மாதம் 3 ஆம் வெள்ளிக்கிழமையையொட்டி கூழ்வார்த்தல், செடல் மற்றும் அலகு குத்துதல் நிகழ்ச்சி நடந்தது.
இதனை தொடர்ந்து சக்தி கரகத்தோடு, அக்னி சட்டி ஏந்தி பக்தர்கள் ஊர்வலமாக முதலியார் பேட்டையில் உள்ள பல வீதிகளில் வலம் வந்து மீண்டும் கோவிலை அடைந்தனர். இந்நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், பாரதிய ஜனதா கட்சி மாநில கூட்டுறவு பிரிவு அமைப்பாளர் வெற்றிச் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து செடல் ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி ராஜி என்ற பாவாடைராயன், சங்கரய்யா, ராமதாஸ், ஜெயக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
- தை மாதத்தில் 18 நாள் புகழ்பெற்ற குண்டம் திருவிழா நடைபெறுகிறது.
- மாசாணி அம்மன் அவதார தலம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
1. ஆனைமலை மாசாணி அம்மன் ஆலயம் கோவையில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவிலும், பொள்ளாச்சியில் இருந்து சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. காரில் சென்றால் சுமார் 1 மணி நேரத்தில் சென்று விடலாம்.
2. மாசாணி அம்மன் அவதார தலம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை சிறப்பு வாய்ந்தது.
3. இத்தலம் அருகே உப்பாறு ஓடினாலும் கிணற்று நீர் தீர்த்தமாக உள்ளது.
4. தை மாதத்தில் 18 நாள் இங்கு புகழ்பெற்ற குண்டம் திருவிழா நடைபெறுகிறது.
5. அமாவாசை, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் திருவிழா போல பக்தர்கள் கூட்டம் திரள்கிறது.
6. மாசாணி அம்மன் ஆலயம் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
7. அம்பாளுக்கு எதிரே மகாமூனீஸ்வரர், பிரகாரத்தில் பேச்சி, துர்க்கை, மகிஷாசுரவர்த்தினி, சப்தமாதாக்கள், விநாயகர், கருப்பராயர், புவனேஸ்வரி, பைரவர் ஆகியோர் உள்ளனர்.
8. குடும்ப பிரச்னை, நம்பிக்கை துரோகம், மனக்குறைகள், புத்திரதோஷம், நோய்கள், பில்லி, சூனியம் நீங்க, திருடுபோன பொருட்களை மீட்க இத்தலத்தில் வேண்டிக்கொள்ளலாம்.
9. அம்பாளுக்கு புடவை, எண்ணெய் காப்பு சாத்தி, மாங்கல்யம், தொட்டில் கட்டி, ஆடு, சேவல், கால்நடைகள் காணிக்கையாக செலுத்தலாம். அங்கப்பிரதட்சணம், முடிகாணிக்கை செலுத்தி, குண்டம் இறங்கியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றப்படுகிறது.
10. பூப்பெய்தும் பெண்கள் தங்களது உடலில் ஏற்படும் திடீர் மாற்றங்களால்,பல பிரச்னைகளை சந்தித்து, உடல் உபாதைகளால் அவதிப்படுகின்றனர். அவர்களின் பிரச்னைகளை தீர்ப்பவளாக மாசாணி அம்மன் இருக்கிறாள்.
11. யானைகள் அதிகம் வசித்ததால் ஆனைமலை என அழைக்கப்பட்ட இவ்வூரை "உம்பற்காடு' என பதிற்றுப்பத்து குறிப்பிடுகிறது.
12. இக்கோயிலில் பச்சிளம் மருந்து பிரசாதம் தரப்படுகிறது. பெண்கள், இதனை சாப்பிட்டு, கருப்புக்கயிறு கட்டிக்கெள்ள தீவினைகள் நீங்கி, குழந்தைபாக்கியம் உண்டாகும்.
13. செவ்வரளி உதிரிப்பூமாலை, எலுமிச்சை மாலை சாத்தி நெய்தீபம் ஏற்றி வழிபட, பூப்பெய்தும் சமயத்தில் ஏற்படும் உடல் தொடர்பான பிரச்னைகள், வயிற்று வலிகள் தீரும் என்பது நம்பிக்கை.
14. இக்கோயில் வளாகத்தில் உள்ள "நீதிக்கல்லில்' மிளகாய் அரைத்து அப்பினால், திருடு போன பொருட்கள் திரும்ப கிடைக்கும், பில்லி, சூனியங்கள் விலகும்.
15. "முறையீட்டு சீட்டில்' குறைகளை எழுதி அம்பாளின் கையில் கட்டி வைக்க அவற்றிற்கு 90 நாட்களில் தீர்வு கிடைக்கும் என நம்புகின்றனர்.
16. அம்மனுக்கு பொங்கலிடுவது இத்தலத்தில் சிறப்பாகும்.
17. மாசாணியம்மன் அருள் வேண்டி தினமும் ஆயிரக் கணக்கில் பக்தர்கள் வருகிறார்கள்.
அன்னை தீய சக்திகளிடமிருந்து தங்களைக் காக்கக் கூடியவள் என்ற ஆழ்ந்த நம்பிக்கை பரவலாக உள்ளது.
18. ஒவ்வொரு மாதமும் இத்தலத்தில் கார்த்திகை நட்சத்திரத்திலும், பௌர்ணமி நாட்களிலும் விசேஷ பூசைகள் நடத்தப்படுகின்றன.
19. ஒவ்வொரு ஆண்டும் தை மாத பவுளர்ணமி நாளில் கொடியேற்றி, 14 ஆம் நாள், விசேஷ பூசைகளுடன், 16 -ம் நாள் தேர் திருவிழாவும், அதே நாள் இரவு 10 மணி அளவில் தீமிதி விழாவும் நடைபெரும். 50 அடி நீளமுள்ள அந்த குண்டம், பக்தர்கள் உண்மையான பக்தியுடன் செல்கையில் காலில் எந்த தீக் காயங்களையும் ஏற்படுத்துவதில்லை என்கின்றனர்.
20. வைகாசி விசாகம், ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், தமிழ் வருடப்பிறப்பு, அமாவாசை, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, கார்த்திகை தீபம், மார்கழி தனுர் பூசை, நவராத்திரி நாட்களில் இங்கு சிறப்பு வழிபாடு நடைபெறும்.